அக்டோபர் 31, 2015

குறளின் குரல் - 1290

31st Oct, 2015

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

                           (குறள் 1284: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

ஊடற்கண் சென்றேன்மன் - பிரிந்து வந்த தலைவனை காண்பதற்குமுன் ஊடவே நினைந்தேன்
தோழி அதுமறந்து - தோழியே இப்போது அதை மறந்து (அவன் நேரில் வந்தபோது)
கூடற்கண் சென்றது - அவனை கூடியிருக்க அவன்பால் சென்றது
என்னெஞ்சு - என்னுடைய உள்ளமோ!

தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து மீண்டும் வந்து, தலைவி அவனை இன்னும் காண்பதற்குமுன், அவனோடு ஊடலிலிருக்கவே நினைந்தாள். ஆனால் அவனைக் கண்டபோது, அவள் உள்ளமானது நெகிழ்ந்து அவனோடு முயங்கியிருக்கக் கூட செல்லுகிறது என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள். சிந்திப்பதால் அவனுடைய பிரிவு கோபத்தைத் தருகிறது. ஆனால் உள்ளம் அப்படியல்ல.. சிந்தனையை ஒதுக்கிவிட்டு உணர்வின் அடிப்படையிலேயே இயங்குவது. காதலைப் பொருத்தவரை இதயமே வெல்கிறது.

Transliteration:

UdARkaN senRENman tOzi adumaRandu
kUDARkaN senRaduen nenju

UdARkaN senRENman – mind went towards love-quarrel with my returning husband
tOzi adumaRandu – But dear fried, forgetting the resolve
kUDARkaN senRadu – went towards seeking his embrace and coition
en nenju – my heart.

When her beloved returns after leaving her for a while, the maiden wants to show her anger to him; but on seeing him in person, her heart melted and went to him for an embrace of coition..

Mind being a thinking state, it upsets the woman about her husband leaving. But the heart is so soaked in emotive quality.

“My mind went towards love quarrel before seeing my beloved
 But, my heart sought his embrace of coition, anger discarded”

இன்றெனது குறள்:

ஊடவே நான்நினைந்தேன் என்தோழி உள்ளமோ
கூடலையே நாடிச்செல் லும்

UDalE nAnninaindEn enthOzi uLLamO
kUDalaiyE nADichchel lum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...