செப்டம்பர் 26, 2015

குறளின் குரல் - 1255

26th Sep, 2015

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
                           (குறள் 1249: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

உள்ளத்தார் - உன் நெஞ்சிலேயே குடிகொண்டவராக இருக்க
காதலவரால் - உன்னுடைய காதலர்
உள்ளிநீ  - இவ்வுண்மையை நீ முன்னரே அறிந்திருக்க
யாருழைச் சேறி - யார்மாட்டு அவரைத் தேடிச் செல்கிறாயோ?
என் நெஞ்சு? - என் நெஞ்சமே!

என் நெஞ்சமே! உன் அன்பின் வயப்பட்ட உன்னுடைய காதலர், உன் நெஞ்சிலேயே குடிகொண்டவராக இருக்கையில், அவ்வுண்மையை நீயும் முன்னரேயே அறிந்திருக்க, இப்போது எவர்மாட்டு அவரைத் தேடிச் செல்கிறாயோ, என்று தன் நெஞ்சையே நோக்கி நகைக்கிறாள் காதற்தலைவி! இது கையிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவரைப் பார்த்து நகைக்கும் பாவனையில் உள்ளது.

Transliteration:

uLLAttAr kAda lavarAl uLLinI
yAruzhaich chERiyen nenju?

uLLAttAr – Knowing he resides in your heart itself
kAdalavarAl – you lover
uLLinI – and knowing that fact already
yAruzhaich chERiy – in  whom are you searching for him
en nenju? – O! my heart?

O! My heart! Loved by you, your lover resides in your heart itself and you also know that fact already; but, then in whom are you looking for him – the maiden laughs at her heart. It is a situation when someone has butter in hand, but looking for ghee elsewhere, which is laughable.

“O! My heart! in who are you searching for your beloved
 When you know well already he resides in your abode!”


இன்றெனது  குறள்:

உன்னுள்ளே யேயுறையுன் காதலரை எங்குளனென்
றுன்னியேன் தேடுவாய்நெஞ் சே?

unnuLLE yEyuRaiyun kAdalarai enguLanen
RunniyEn thEDuvAinen jE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...