செப்டம்பர் 30, 2015

குறளின் குரல் - 1259

30th Sep, 2015

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
                           (குறள் 1253: நிறையழிதல் அதிகாரம்)

மறைப்பேன்மன் - ஒளிக்கவே முயல்கிறேன்
காமத்தை யானோ - என்னுள் எழும் தலைவனோடு முயங்கும் ஆசையை
குறிப்பின்றித் - அதுவோ தோன்றுவதன் அறிகுறியில்லாமல் திடீரென்று
தும்மல்போல் தோன்றி விடும் - தும்மல் அடங்காது வெடிப்பதுபோல் தோன்றிவிடும்

காமம் இருப்பினும் அதை பெண்டிர் மறைக்கவேண்டும் என்ற தோழிக்கு, தலைவி இவ்வாறு கூறுவாள்: “நானோ என் தலைவனோடு முயங்குகிற ஆசையை மறைக்கத்தான் முயல்கிறேன். ஆனால், என் செய்ய? அது திடீரென்று வெடிக்கும் கட்டுப்படுத்த இயலாது வரும் தும்மலைப்போல!

Transliteration:

maRaippEnman kAmattai yAnO kuRippinRit
tummalpOl tOnRi viDum

maRaippEnman – Trying to hide
kAmattai yAnO – the lust in me to be with my man-beloved
kuRippinRit – without notice
tummalpOl tOnRi viDum – just how sneeze bursts, it appears.

The maiden is advised that though there may be lust to be with the loved man, females shall not exhibit that overtly. Maiden answers thus: “though I try hard to hide the lust in me to be with my beloved, it somehow appears like how sneeze bursts without notice and uncontrollably!”

“However much I try to hide my lust for my beloved
 Uncontrollably, it appears like sneeze, unannounced”


இன்றெனது  குறள்:

காமம் ஒளிக்க முயன்றாலும் தும்மல்போல்
தாமது தோன்றும்கட் டற்று

kAmam oLikka muyanRAlum tummalpOl
tAmadu tOnRumkaT TaRRu

செப்டம்பர் 29, 2015

குறளின் குரல் - 1258

29th Sep, 2015

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
                           (குறள் 1252: நிறையழிதல் அதிகாரம்)

காமம் எனவொன்றோ - காமம் எனப்படுகின்ற ஒன்று இருக்கிறதே
கண்ணின்று - அது கருணையின்றி
என் நெஞ்சத்தை - என் நெஞ்சினை
யாமத்தும் ஆளும் - நடு இரவிலும் ஆட்கொள்கின்ற
தொழில் - ஏவலாம்.

இந்த காம வேட்கை எனப்படுகின்ற துன்பு செய்கின்ற ஒன்றிருக்கிறதே, அது சற்றும் கருணையின்றி, என்னுடைய நெஞ்சிலே, யாவரும் தத்தம் தொழிலை நிறுத்தி நீத்து ஓய்வு கொள்ளும் நடு இரவு வேளையிலும் கூட ஆட்கொண்டிருக்கிற ஏவலாம். இதுவும் கூட நெஞ்சிலே கொண்ட காமத்தை நெஞ்சோடு கிளந்து அடக்கலாம் என்ற தோழிக்குத் தலைவி கூறுவதாகவே உள்ளது.

Transliteration:

kAmam enavoNRO kaNNinRen nenjattai
yAmattum ALum thozhil

kAmam enavoNRO – what is know as lust
kaNNinR(u) – without mercy
en nenjattai – in my soul
yAmattum ALum – even in the middle of the night rules
thozhil – as if it is work.

This lust that causes misery in me, without mercy, even in the middle of the night, when everybody is resting from their daily chores and work, rules my heart. This verse is probably said the maiden in love to her friend who advises that the lust in the heart can be subdued by conversing with the heart.

Even in the middle of the night, this incessant lust
Without mercy rules, not giving my soul any rest”


இன்றெனது  குறள்:

என்நெஞ்சை கண்ணோட்டம் இன்றியே நள்ளிரவும்
துன்பேவல் செய்யுமிக்கா மம்

ennenjai kaNNOTTam inRiyE naLLiravum
thubEval seyyumikkA mam

செப்டம்பர் 28, 2015

குறளின் குரல் - 1257

126: (Modesty lost  - நிறையழிதல்)

[By her conversations with her heart, as in previous chapter, the maiden in love, loses her self-control and modesty; reveals her inner, hidden desires for others to know, due to her extreme desire for her beloved.]

28th Sep, 2015

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
                           (குறள் 1251: நிறையழிதல் அதிகாரம்)

காமக் கணிச்சி - காமமாகிய மழு
உடைக்கும் - உடைத்துவிடும்
நிறையென்னும் - மாண் என்கின்ற
நாணுத் தாழ் - நாணமென்னும் தாழ்ப்பாளைப்
வீழ்த்த - நொறுக்கி
கதவு - கதவினை (மாண் என்கிற என்பதோடு படிக்கவும்)

பெண்ணின் நாணத்தால் ஆகிய தாழ்ப்பாளால் பூட்டப்பட்ட மாண்பு என்னும் கதவினை நொறுக்கி பெண்ணின் காமமென்னும் மழு (கோடாலி) உடைத்துவிடும் என்கிறது இக்குறள். இது நாணமும், நிறையும் அழியாது காக்கவேண்டும் என்ற தோழிக்குத் தலைவி இவ்வாறு கூறுவதாம்.
இக் கற்பனை பல சங்க இலக்கியங்களிலும் ஏற்கனவே செய்யப்பட்டதே!  அவற்றுள் சில:

“முலையும் மார்பும் முயங்கணி மயங்க
 விருப்பொன்று பட்டவர் உளம்நிறை உடைத்தென” (பரிபாடல் 6:20-21)

“காமக் கணிச்சியால் கையுறவு வட்டித்து” (பரிபாடல் 10:33)

“யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக்
 காவலன் நெஞ்சமென்னும் கன்னிமாடம் புகுந்து
 நோவவென் உள்ளம் யாத்தாய்” (சீவக சிந்தாமணி: 714)

 கம்பராமாயண, மிதிலைப் படலத்திலும் கம்பர் இதையே இவ்வாறு காட்சிப் படுத்துகிறார்.

 “பிறந்துடை  நலநிறை பிணித்த வெந்திரம்
  கறங்குபு திரியுமென் கன்னி மாமதில்
  எறிந்தவக் குமரனை”

Transliteration:

kAmak kaNichchi uDaikkum niRaiyennum
nANuttAzh vIzhtta kadavu

kAmak kaNichchi – the axe that the lust iis
uDaikkum – will break
niRaiyennum - modesty
nANut tAzh – shame, the door lock
vIzhtta – to goto pieces
kadavu – the door (it has to be read with modesty)

The door that modesty is, locked with the lock that sense of shame is, broken into pieces by the axe or hatchet of lust, says this verse. This is probably said the friend of the maiden to advise to preserve her sense of shame and modesty. This seems to be a popular imagination even during Sangam poets.  Works of ParipADal, Cheevaga ChintAmaNi, and even Kambar have said similarly.

“The axe of lust will break the door that modesty is
 locked with the bolt, the sense of shame into pieces”


இன்றெனது  குறள்:

நாணத்தாழ் பூட்டும் நிறைக்கதவை காமமழு
காணடித்துச் செய்யும் உடைத்து

nANattAz pUTTum niRaikkadavai kAmamazhu
kANaDittuch cheyyum uDaittu

செப்டம்பர் 27, 2015

குறளின் குரல் - 1256


27th Sep, 2015

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
                           (குறள் 1250: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

துன்னாத் - நம்மை அன்பொடு கூடாமல்
துறந்தாரை - விட்டொழித்தாரை
நெஞ்சத்து - உள்ளத்தில்
உடையேமா - கொள்வோமாயின்
இன்னும்  - இருக்கின்ற
இழத்தும் கவின் - அழகையும் இழப்போம்

காதலாழ்பட்ட பெண், தன்னை விட்டுச் சென்ற காதலனை நொந்து, நெஞ்சுக்கு இவ்வாறு கூறுவாள்: “நெஞ்சே! நம்மை அன்போடு கூடாமல், விட்டொழித்துச் சென்றவரை, நீ இன்னும் உள்ளத்தில் கொள்வாயாயின், உன்னுடைய உள்ளத்தழகையும் இழந்துபடுவாய்; ஏற்கனவே அவனை நினைந்து, பிறிவாற்றாமையில் உறுப்பு நலன்களை இழந்திருக்கிறோம்”. இவ்வாறு கூறி, நெஞ்சோடு பேசும் இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

Transliteration:

thunnAt tuRandArai nenjattu uDaiyEmA
innum izhattum kavin

thunnAt – Not being with me with love
tuRandArai – he who renounced and went away
nenjattu – in the heart
uDaiyEmA – if we still carry
innum – even the left out
izhattum kavin – beauty will be lost

The maiden in love, complains about the lover that has left her, to her heart thus: “O! My heart!, If you still carry the man that left me abandoning, not being bonded in love, in your abode, even the beauty left out will corrode and be lost; As such not able to bear his being away we have lost the beauty of the body, eyes and shoulders etc. Only the heart is intact. Even that inner beauty shall be lost. Saying this vaLLuvar completes this chapter on Speaking to heart.

“If you still carry him, that left abandoning, in your abode,
 O! my heart! Even the beauty that remains, shall corrode!”


இன்றெனது  குறள்:

உள்ளத்தில் கூடாது விட்டொழித் தாருடைக்கின்
கொள்ளைபோகும் உள்ளவழ கும்

uLLattil kUDAdu viTTozhi tAruDaikkin
koLLaipOgum uLLavazha gum

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...