27th Aug, 2015
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
(குறள் 1219:
கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)
நனவினால் நல்காரை - விழித்திருக்கையில் என்மீது அன்பாக இல்லாதவரை
நோவர் - இவர்கள் நொந்து கொள்கிறார்களே (மற்ற கன்னியர்கள்)
கனவினால் - கனவிலே
காதலர்க் காணாதவர் - காதலரின் (அன்பை) அறிந்திராதவர்கள் இவர்கள்
என்னுடைய காதலர் விழித்திருக்கும் போதெல்லாம்
என் மீது அன்பாக இல்லையே என்று பிற கன்னியர்கள், அதாவது காதல் என்ன என்பதையே அறியாதவர்கள்
நொந்து கொள்கிறார்கள். அவர்கள் இவர் கனவினிலே என்னோடு கூடி, இன்பம் அளிப்பதைக் கண்டிலரே
என்று தன் காதலரைப் பழிக்கும் கன்னியரின் அறியாமையைக் கூறுகிறாள் காதற் தலைவி.
Transliteration:
nanavinAl nalgArai nOvAr kanavinAl
kAdalark kANA davar
nanavinAl nalgArai – During wakeful hours, he is not
compassionate to me
nOvAr – so say, these other young unmarried
maidens
kanavinAl – In my dreams
kAdalark kANAdavar – they do not how compassionate he is!
Why these unmarried young maidens that
do not know what love is, complain that during wakeful hours, he is not
affectionate to me and hence he knows no love. Do they know, how compassionate
he is in my dreams? – the maiden in love, though painful of his going away, is
not able to bear others speaking ill of her estranged lover and points out
their ignorance of what love is.
“Not knowing how loving he is to me in my dreams during my sleep
these girls fault him that
his has no affection and his love not deep”
இன்றெனது குறள்:
காதலரைத்
தங்கனவில் கண்டறியாக் கன்னியர்
நோதலேன்
நல்காரே என்று
kAdalarait tangkanavil kaNDaRiyAk kanniyar
NodalEn nalgArE enRu.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam