18th Aug, 2015
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
(குறள் 1210:
நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)
விடாஅது - என் நெஞ்சினின்று நீங்காது
இடையறாமல் இருக்கும் என் காதலர்
சென்றாரைக் - இப்போது என்னை விட்டு சென்றிருப்பவரை
கண்ணினால் - நான் கண் கொண்டு
காணப்படாஅதி - காணுமளவுக்காகவாவது
வாழி மதி - நீ மறையாதிருப்பாயாகம, வாழ்க நிலவே.
இக்குறளுக்கான பரிமேலழகர் உரை கற்பனை நயமிக்கதாக
இருக்கிறது! என் காதலர் என் நெஞ்சினிலே இடையறாமல் நீங்காமல் எப்போதும் இருக்கிறார்.
இப்போது அவரோ என்னை நீங்கிச் சென்றிருக்கிறார். ஆயினும் நிலவே, அவரும் பிரிவாற்றாமையால்
என்னைப்போலவே உன்னையேதானே பார்த்துக்கொண்டிருப்பார். அந்தளவிலாவது எங்கள் கண்கள் சந்தித்துக்
கொள்ளுமே, அதற்காகவாவது, நீ மறையாதிருந்து இரவை நீட்டிப்பாயாக என்று வேண்டுகிறாளாம்
காதற்தலைவி.
இரவும் நிலவும் துன்புறுத்துகின்றன, அவை முடியக்கூடாதா
என்ற வழக்கமாக நினைக்கும் காதலியே, அவை இரண்டும் நீடிக்க வேண்டுமென்று சொல்வதிலிருந்து,
காதலின் அவத்தை, இவ்வாறு நிலை கொள்ளாமல் செய்யும் என்பதை வள்ளுவர் அழகாகக் காட்டுகிறார்.
Transliteration:
viDAadu chenRArai kaNNinAl kANap
paDAadi vAzhi madi
viDAadu – My over who lives in my heart for
ever
chenRArai – but now left me on his work
kaNNinAl – with my eyes
kANappaDAadi – at least for me to see him
vAzhi madi – please continue stay
Parimelazhagars’ commentary for this
verse is very imaginative. She requests the nightly moon thus: “My lover lives
in my heart forever; but he has left me on his work. But he must be, like me,
looking at you, with the pangs of separation, during this nighttime; at least
through you, our eyes have the opportunity meet; so please don’t leave and stay
with us”
Typically night and the moon are painful
to lovers who are separated reminding them of their time together; but here
VaLLuvar presents an alternate scenarios where the maiden in loves want them to
stay; In essence he tries to depict an unstable state that love can set the lovers in.
“O! nightly moon! do not vanish from the
sight
I
can see my lover who forever is in my heart”
இன்றெனது குறள்:
நிலவேநீ
காணா தொளியாது நெஞ்சில்
நிலவிப்பின்
சென்றாரைக் காட்டு
nilavEnI
kANA doLiyAdu nenjil
nilavippin
senRAraik kATTu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam