ஆகஸ்ட் 05, 2015

குறளின் குரல் - 1203

5th Aug, 2015

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
                           (குறள் 1197: தனிப்படர் மிகுதி அதிகாரம்)

பருவரலும் - துன்பமும்
பைதலும் - பசலையும் (அதுவும் துன்பம் என்பதால், அகராதி துன்பம் என்கிறது)
காணான்கொல் காமன் - பாரானோ இந்த காதற்கடவுள்
ஒருவர்கண் நின்றொழுகுவான் - அவன் ஒருவரிடத்திலே மட்டும் (பெண்ணிடத்து) இவற்றைத் தருகிறானே

மாரனாகிய காதற் கடவுள், இவ்வாறு என்னிடத்தில் மட்டும் நின்று ஒழுகுகிறானே, காதலால் உண்டான துன்பத்தை எனக்கு மட்டும் தந்து.  அது எனக்கு துன்பத்தையும், பசலையையும் தருகிறதே; அதைக் காணானோ! ஏன் இவ்வாறு ஒரு பட்சமாக அவன் செயலாற்றுகிறான்?, என்று காதற்தலைவி குறைபட்டுக்கொள்கிறாள் இக்குறளில்

Transliteration:

Paruvaralum paidalum kANAnkol kAman
oruvarkaN ninRozhugu vAn

Paruvaralum - suffering
paidalum – and loss of luster
kANAnkol kAman – doesn’t he see?
oruvarkaN ninRozhuguvAn – (Why) he is on only one side (referring to the maiden)?

Why does the love lord maran only give suffering to me, being one sided? That suffering gives me pain and loss of hue. Doesn’t he see that?, laments the maiden in love and complaining that the love lord is not fair and does not give the same suffering to her lover.

“Why is the love lord maran not impartial?
 Doesn’t he see my pain and growing pale?


இன்றெனது  குறள்:

மாரன் ஒருவர்பால் நின்றதால் நல்குமோ
பாராப் படரும்துன் பும்?

mAran oruvarpAl ninRadAl nalgumO
pArAp paDarumthun bum?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...