ஜூன் 09, 2015

குறளின் குரல் - 1146

9th Jun, 2015

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
                        (குறள் 1140: நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

யாம் கண்ணின் காண - என் கண்ணெதிரேயே நான் காண
நகுப அறிவில்லார் - என்னைக் கண்டு நகைக்கின்றா அறிவற்ற மூடர்
யாம்பட்ட - நான் அவத்தையுறும் காம நோய்த் துன்பத்தை
தாம்படா ஆறு.- அவர்கள் படாததினாலே

அவர்களுக்கு என்ன தெரியும் நான் காம நோயினால் படும் துன்பத்தின் அளவு? அவர்கள் அந்நோய் உற்றிருந்தால்தானே அதன் வீச்சு அவர்களுக்குப் புரிந்திருக்கும்? என்னப் பார்த்து முற்றிய மூடரைப் போல நகைக்கின்றாரே! என்று தோழியிடம் தன் நிலை பார்த்து கேலி நகையாடுபவர்களைச் வெறுத்து தலைவி கூறுகிறாள்! காமம் மீதுறும் போது, கட்டுகளை மீறி அது தம்மை வெளிக்காட்டிவிடுவது உண்டென்பதால், அதுவே பிறர் கண்டு நகைப்பதற்கும் இடமளித்துவிடுகிறது!  அவளின் நாண் துறந்த வெளிப்பாடு பிறர்கண்டு நகைப்பதற்கு இடமாகிறது. அதற்காக தலைவி அவர்கள் மேல் சினந்து இவ்வாறு கூறுகிறாள்.

Transliteration:

yAmkaNNin kANa naguba aRivillAr
yAmpaTTa tAmpaDA ARu.

yAm kaNNin kANa – For me to see, before my eyes
naguba aRivillAr – the fools laugh at me
yAmpaTTa – what I endured (because of lustful desire)
tAmpaDA ARu – because they have not endured that

What would they know about the extent of my suffering, because of lustful desire for my lover? Had they gone through the experience of such pain, they would perhaps understand! They laugh at me like fools. – says, the women in love, loathing the mockery from other ladies. When the lust overwhelms it breaks all barriers and shows itself for other to see making the person, a subject of redicule. Here vaLLuvar just wants to underscore that for the woman also, it becomes a matter of redicule however controlled their exhibition of desire is.

“Those senseless mock me not
 experiencing my pains of lust”


இன்றெனது  குறள்:

என்துன்பை தாமுணரா முற்றிய மூடரே
இன்றென்கண் காணநகைப் பர்

entunbal tAmuNarA muRRiya mUDarE
inRenkaN kANanagaip par.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...