7th Jun, 2015
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
(குறள் 1138:
நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)
நிறை அரியர் - நிறைமிக்கார், இவர் உறுதியை குலைப்பதற்கு
அரிதென்றோ
மன் அளியர் - மிக்கவும் குழைவுடன் இருக்கிறார்
என்னாது - என்று இரங்கியோ
காமம் - காமமென்னும் வேட்கை
மறை இறந்து - தன்னை மறைப்பதை துறந்து
மன்று படும் - எல்லோரும் காணுமாறு அரங்கிலே வெளிப்படும்
மகளிர்க்குக், காமம்
என்பது தன்னை மறைப்பதைத் துறந்து அரங்கிலே எல்லோரும் காணுமாறு அரங்கேறிவிடும்; அது
இன்னார் நிறை மிக்கவர், இவர் மனவலியை உடைப்பதற்கு அரியர் என்று அஞ்சாது; அல்லது,, இவர்
ஏற்கனவே குழைவானவராக இருக்கிறார் என்று இரங்கவும் செய்யாது. மகளிர் தம் காமம் என்பது
எந்த கட்டுக்காவலுக்கும் கட்டுப்படாது காட்டாற்று வெள்ளம்போல் பெருகிவழிவது என்பதை
உணர்த்தும் குறள்;
இக்குறள் சென்ற குறளுக்கு
முரணாக உள்ளதோ என்று தோன்றும். ஆழ்ந்து படிக்க இல்லையென்று புலனாகும். இக்குறளில் சொல்வது
போல், மறைக்கவொண்ணாது காமப் பெருகினாலும், அவர்கள் அதற்காகவும் நாண் துறந்து மடலூர்தலைச்
செய்யார்.
Transliteration:
niRaiyariyar manaLiyar ennAdu kAmam
maRaiyiRandu manRu paDum
niRai ariyar – strong in their hearts and can control; difficult
to break theie resolve
man aLiyar – or very weak and pliable
ennAdu – not thinking as such
kAmam - lust
maRai yiRandu – without hiding itself
manRu paDum – will display in the arena for others to see.
For love struck-maiden, lust would not hide itself
and show, for every one to see. It does not fear to break the resolve of a
person because she is strong and can be controlled in her mind, nor does it pity
seeing a person pliable and weak.
In general the lust of ladies is like the wild flash
flood, not controllable is what is alluded in this verse. This verse may appare
as a contradiction to the previous verse, but truly not so. Though they have
uncontrollable lust, they still would not stoop down to climb- palm-horse like men
would do.
“Neither
fears they are chaste nor pity they are weak innate,
Lust shows itself for others to see, like
flood that inundate”
இன்றெனது
குறள்:
மறையாத்தோன்
றும்காமம் மன்றில் நிறையால்
நிறைந்தார்
குழைந்தாரென் னாது
mAriyAttOn
RumkAmam manRil niRaiyAl
niRaindAr
kuzhaindAren nAdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam