6th
April,2015
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
(குறள் 1076:
கயமை அதிகாரம்)
அறை பறை அன்னர் - தோல்கருவியாம் பறை அடித்து எல்லோருக்கு
செய்தி சொல்பவர் போல்வர்
கயவர் - கீழோர்கள்
தாம் கேட்ட - தாம் பிறரிடம் இருந்து கேட்ட
மறை பிறர்க்கு - பிறருக்குத் தெரியக்கூடாது என்று தெரிவிக்கப்பட்ட
இரகசியங்களை
உய்த்து - ஆராய்ந்து அறிந்த ஒன்றைப்போல
உரைக்கலான் - பிறரிடம் சொல்லிவிடுவர்.
பெரும்பாலோருக்கு,
மற்றவருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்ட இரகசியங்களைத் தம்மிடம் வைத்துக்கொள்ள
முடியாது. பிறரிடம் சொல்லவில்லையென்றால் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும் போன்ற உணர்வு
இருக்கும். இரகசியம் காப்பது என்பது பெரும்பாலோருக்கு இயலாத செயலே. இதற்காக அவர்களையெல்லாம்
கயவர் என்று சொல்லவியலாது. இது ஊர் வம்பு என்று
சொல்லப்படும் ஒன்றுக்காகவே பெரும்பாலோரும் செய்வது என்றாலும், கயவர்களாம் கீழோர்கள்
பறையென்னும் தோல்கருவியை அறைந்து அடித்து எல்லோருக்கும் கேட்கும்படியாக செய்திகளைச்
சொல்லாக் குறையாக, ஏதோ தாமே அந்த மறைத்துச் சொல்லப்பட்ட பொருளை ஆராய்ந்து உணர்ந்தார்போல்,
எல்லோரிடமும் சொல்லிவிடுவார்கள்.
வள்ளுவர் காலத்தில் சிலர் மட்டுமே இவ்வாறு செய்திருப்பார்கள்
போலிருக்கிறது. இன்றைய உலக வழக்கில், தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு மக்கள் இரகசியங்களைச்
சுமக்கமுடியாமல் பிறரிடம் சொல்லி விடுபவர்களே. இரண்டு பேருக்குத் தெரிந்த ஒன்று இரகசியமாக
இருக்க முடியுமா?
Transliteration:
aRaipaRai annar
kayavartAm kETTa
maRaipiRarkku
uithurikka lAn
aRai paRai annar – like
street anouncers that used flat drums to let draw attention
kayavar – base
people
tAm kETTa – what
they heard as
maRai piRarkku – from
someone as secret not to be revealed to others
uith(u) – as if
they researched and found out
urikkalAn- will
reveal to others.
Most people cannot keep secrets revealed to them, as if
their heads would burst, if they did not share with somebody else. For most it
is almost impossible to keep any secrert; and because of that they can’t be
branded as base. But base people do it as their ardent duty to take the flat
leather drum (paRai) and announce it to the whole world as if they found out
with their research.
Perhaps during vaLLuvars’ time, there were only a few
that would indulge is such gossip. Almost 99% of people indugles and exchange
gossip. After all, if something is known to more than one, then it loses the
value as a secret.
“Base people are
like loud flat drum beaten to announce;
Unload the secrets they know, though matter to
denounce”
இன்றெனது குறள்:
கேட்ட மறைபொருள் மற்றோர்க் குரைகீழோர்
கோட்பறை போன்றவ ராம்
kETTa maRaiporuL maRROrk
kuraikIzhOr
kOTparai pOnRava rAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam