14th
March, 2015
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
(குறள் 1053:
இரவு அதிகாரம்)
கரப்பிலா - தன்னகத்தில் உள்ளதை மறைக்காதவரும்
நெஞ்சின் - தன் மனத்திலே
கடனறிவார் - தான் பிறரைப் புரக்கவேண்டிய கடமையும் அறிந்தார்
முன்நின்று - முன்பாக நின்று
இரப்புமோர் - யாசிப்பதும் ஒரு
ஏஎர் உடைத்து - பெருமையும், பீடும் உடைத்ததே
தன்னிடம் உள்ளதை பிறரிடம் ஒளிக்காத பண்பும், தனது நெஞ்சிலே தான் பிறரை
புரக்கவேண்டிய கடமையும் அறிந்த ஈகை குணம் உள்ளாரிடம் இரந்து பெறுதலே பெருமையும்,
அழகுமாம் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.
தன்னிடம் இன்னதுள்ளது என்று வெளிக் காட்டிக்கொள்ளாதார்
தாம் ஈவதற்குரியன என்று ஒரு வரையறை வைத்துக்கொள்ளுவார். அவரின் ஈகை அம்மட்டே. அதேபோல்
ஈவது தன்கடன் என்ற நிலைப்பாடு இல்லாதவரிடம் இரப்பதும் இழிவே. அதனாலே இவ்விரண்டையும்
வள்ளுவர் இங்கு வலியுறுத்திக் கூறுகிறார்.
Transliteration:
karappilA
nenjin kaDanaRivAr munninRu
irappumO
rEer uDaiththu
karappilA –
one that does not hide anything in his heart
nenjin –
in heart
kaDanaRivAr –
also aware of what his duties as a patron to others,
munninRu –
standing before them
irappumOr -
to beg for alms
Eer
uDaiththu – is prideful
It is indeed prideful to seek alms from those that
have the good trait of not hiding what they have, and also being aware of the
duties of a benovelent to provide for others, says vaLLuvar.
Those that are not open about what they have in
their mind, would have a restrictions as to what they would want to part with,
when someone approaches them for alms. Likewise, if someone does not have it as
his duty to provide for those that seek alms, then it would be shameful to seek
from them also. Hence vaLLuvar has emphasized both.
“it
is indeed prideful and beautiful to seek alms from
those
that give without hiding, as their duty and norm”
இன்றெனது
குறள்:
இரத்தலும்
பீடே ஒளிவிலா உள்ளம்,
புரக்கும்
கடனறிந்தார் மாட்டு
iraththalum
pIDE oLivilA uLLam,
purakkum
kaDanaRindAr mATTu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam