மார்ச் 01, 2015

குறளின் குரல் - 1046


1st March, 2015

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
                    (குறள் 1040: உழவு அதிகாரம்)
இலமென்று - எம்மிடத்தில் பொருளில்லை என்று
அசைஇ - தம்மிடம் விட்டு நகராது சோம்பி
இருப்பாரைக் காணின் - இருப்போரைக் கண்டால்
நிலமென்னும் - நிலமாகிய
நல்லாள் - மங்கை நல்லாள்
நகும் - எள்ளி நகையாடுவாளாம்

யாம் வறியர்; எம்மிடத்தில் பொருள் வசதியில்லை அங்கலாய்த்து, அதனாலேயே சோம்பித் திரிவோரைக் கண்டால், தன்னை உழவு செய்து உணவும், பொருளும் ஈட்டும் நிலையிலுள்ள ஒருவன் இவ்வாறு ஒன்றும் செய்யாது வாளா இருக்கிறானே என்று நிலமங்கை எள்ளி நகையாடுவாள் என்று சொல்லி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

Transliteration:

ilamenRu asaiI iruppAraik kANin
nilamennum nallAL nagum

ilamenRu – We are poor, saying so
asaiI – without actively doing something about it, one that’s lazy
iruppAraik kANin – if such a person is seen
nilamennum – the earth
nallAL – that’s like a nice lady
nagum – will only laugh, mocking

We are poor; we have no means to do anything – saying so, some people keep quiet without doing anything to mend the situation. It is out of sheer laziness. Seeing such a person and thinking, a person that can something about it, the earth likened to nice lady, would only laugh mocking them – Saying such vaLLuvar concludes this chapter.

“The nice lady that land on earth is, would only laugh mocking
 if anyone is lazy and does n’t even fix their attitude, of flopping


இன்றெனது குறள்:

வறியேம் என்றொருவர் வாளா இருப்பின்
சிறித்தெள்ளு வாளாம் நிலம்

vaRiyEm enROruvar vALA iruppin
siRiththeLLu vALAm nilam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...