மார்ச் 31, 2015

குறளின் குரல் - 1076

31st March, 2015

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
                        (குறள் 1070: இரவச்சம் அதிகாரம்)

கரப்பவர்க்கு - தம்மிடம் உள்ளதை மறைப்போர்க்கு மட்டும்
யாங்கு - எங்கே சென்று
ஒளிக்கும் கொல்லோ? - ஒளிந்துகொள்ளும் அவர்கள் உயிர்?
இரப்பவர் - இரந்து கேட்பவர்களுக்கு
சொல்லாடப் - இல்லையென்று கரப்போர் சொல்லைக் கேட்க
போஒம் உயிர் - அவர்கள் இறக்கப் போக நீங்கும் உயிர்?


தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, 'ஒன்றைத் தரவேண்டும்' என இரப்பானாகில், அச்செல்வன் 'இல்லை' என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? மானத்தால் உயிர் துறப்பான்! என்று கீழ்காணும் நாலடியார் பாடல் கூறுகிறது.

புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.

இக்கருத்தையே வள்ளுவர் கேள்வியாய் வைக்கிறார் இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளில். தாம் ஒருவரை இரந்து கேட்க அவர் இல்லையெனும் போது, மானத்துக்கஞ்சி போகின்ற இரப்போர்க்குள்ள உயிர், இல்லையென்று வாய் கூசாமல் சொல்லி உள்ளதை ஒளிக்கும் கஞ்சர்களைப் பொறுத்தவரை எங்கே ஒளிந்துகொள்கிறது. ஒன்றைத் துறந்தே ஒன்றைப் பெறுவது உலக நியதியாயின், கரவோர், தங்கள் மனங்களில் இரக்கத்தைத் துறந்ததால்தான் அவர்கள் உயிர் நீங்கா நின்றதோ?

Transliteration:

Karappavarkku yAngoLikkum kollO irappavar
sollADap pOom uyir

Karappavarkku – For those that hide their wealth from those seek alms or beg
yAng(u) - where will it go
oLikkum kollO – and hide their life force?
Irappavar – which for those who beg
sollADap – to hear the word “No” from those who hide
pOom uyir – the life force that leaves

When the poverty is painful to the body, to go and beg blocking the sense of true knowledge, those who hide and refuse to give, men of pride and honor would die for that – says a nAlaDiyAr poem. vaLLuvar says the same thing by posing a question in the final verse of this chapter.

Where does the life force, that leaves those who beg out of necessity, fearing shame, hide for those who without that sense of shame hide their possession and readily refuse a helping hand? – asks vaLLuvar in this verse.

“Where does life-force hide for those misers that hide their wealth of greed
 When it leaves when refused out of shame for those that beg for their need?”


இன்றெனது குறள்:

இரப்பர் இறப்பரே இல்லையென எங்கே
கரப்போர்க் கொளியும் அது?

Irappar iRapparE illaiyena engE
karappOrk koLiyum adu?

மார்ச் 30, 2015

குறளின் குரல் - 1075

30th March, 2015

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
                        (குறள் 1069: இரவச்சம் அதிகாரம்)

இரவு உள்ள - ஒருவர் தன் வாழ்வாதரத்துக்கா இரக்க வேண்டியதை நினைக்கும்போது
உள்ளம் உருகும் - உள்ளமானது நெகிழ்ந்துபோகும்
கரவு உள்ள - ஆனால் ஒருவர் செல்வத்தை மறைக்கும் கஞ்சர்களிடம் இரப்போரைக் கண்டால்
உள்ளதூஉம் - அவ்வுள்ளமும் நெகிழ்வதும்
இன்றிக் கெடும் - இன்றி அழிந்துபடும் நைந்து

இக்குறளும் வள்ளுவர் தம்மை முன்னிலைப் படுத்தி சொல்வதாகக்கொள்ளலாம். பிறர் தம் வாழ்வாதாரத்துக்காக இரந்து செய்வதைக் எண்ணிப்பார்த்தால் கருணயுள்ளம் கொண்ட ஒருவருக்கு உள்ளம் நெகிழும், உருகும். ஆனால், அப்படி இரக்கும் இழிநிலையிலும், அவர்கள் தம்செல்வத்தை ஒளித்துக்காக்கும் கஞ்சர்களிடம் இரக்கும் நிலையைக் நினைக்கும் போது, அவ்வுள்ளமே இல்லாது அழிந்து படும் நைந்து.

Transliteration:

iravuLLa uLLam urugum karavuLLa
uLLadUum inRi keDum

iravu (u)LLa – To think that some may have to beg for their living
uLLam urugum – the heart melts and cries out
karavu (u)LLa – To think they have to beg a miser who hides his wealth from beggers
uLLadUum – even that heart
inRi keDum will wilt and perish

Even this verse appears as if vaLLuvar directly says about how he feels. But it is true for any compassionate heart. To think that some may have to beg for their lively hood, the heart melts for them and cries out. But to think, that they may have to beg misers for their living, is even more painful for compassionate hearts for them to completely wilt and perish,

“ At the thought of begging for livelihood, compassionate hearts will melt;
  But to think they will do so with misers that hide their wealth, it will wilt”


இன்றெனது குறள்:

உள்ளம் நெகிழும் இரவுள்ளி நெஞ்சொளி
கள்ளத்தால் இன்றாகும் நைந்து

uLLam negizhum iravuLLi nenchoLi
kaLLattAl inRAgum naindu

மார்ச் 29, 2015

குறளின் குரல் - 1074

29th March, 2015

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
                        (குறள் 1068: இரவச்சம் அதிகாரம்)

இரவென்னும் - பிறரிடம் இரப்பதாகிய
ஏமாப்பு இல் - சேமம் இல்லாத, சேமக்குறைவு பட்ட
தோணி - மரக்கலம்
கரவென்னும் - உள்ளத்தை மறைக்கும் கஞ்சத்தனம் என்னும்
பார் தாக்கப் - கடினமான நிலத்தில் மோதி
பக்கு விடும் - பிளவு பட்டுவிடும்
பிறரிடம் இரத்தல் என்பது சேமக்குறைவு உடைய மரக்கலம் போன்றது. அது தன்னுடைமைகளை இரப்பாரிடமிருந்து மறைக்கும் கஞ்சத்தனம் என்னும் கடினமான வன்னிலத்தில் மீது மோதி பிளவுபட்டழியும் என்கிறது இக்குறள். இரத்தல் என்பது ஒரு மதிக்கத்தக்க செயல் அல்ல. அதுவே ஒருவருடைய வலியற்ற நிலையை வெளிக்காட்டுவது. அவ்வலியின்மை உடைய மரக்கலம், உள்ளதை மறைக்கும் வன்னிலம் போன்ற கஞ்சர்களிடம் சென்று இரக்குபோது, அவர்களின் வறுமையெனும் கடலைக் கடக்க உதவாமல், ஒன்றுக்கும் பலனில்லாது போய் உடைப்பட்டுவிடும்.

Transliteration:

Iravennum EmAppil thONi karavennum
pArthAkkAp pakku viDum

Iravennum – Begging others
EmApp(u) il – is unsafe
thONi – sail vessel
karavennum – the hiding of possession by misers
pAr thAkkAp – hit by such hard land that such miserly mind is
pakku viDum – will break.

To beg in general is like sailing in unsafe sail-boat. When it encounters the hard land of miserliness that hides its possesions, it will break and will not be able to cross the ocean of miserie that poverty is Begging shows weakness and inability in a person. Miserliness that hides possessions is like a land of hard rock. When that sail-raft hits the hard rock, it will only break, not help the person to cross the ocean.  Excellent metaphorical thought and example!

“The unsafe sail-raft of begging will collide to ruin and disband
 by hitting the hard shores of miserly refusal, not reaching land”


இன்றெனது குறள்:

மறைத்தலாம் வன்னிலம் பட்டுடையும் சேமக்
குறைகொள் கலமாம் இரப்பு

maRaittalAm vannilam paTTuDaiyum sEmak
kuRaikoL kalamAm irappu

மார்ச் 28, 2015

குறளின் குரல் - 1073

28th March, 2015

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
                        (குறள் 1067: இரவச்சம் அதிகாரம்)

இரப்பன் - யாசிக்கிறேன் (வள்ளுவர் தம்மையே முன்னிலைப் படுத்தி வேண்டுகிறார்)
இரப்பாரை எல்லாம் - பிறரை யாசிப்பவர்களை எல்லாம்
இரப்பின் - நீங்கள் அப்படி யாசித்துத்தான் ஆகவேண்டுமெனில்
கரப்பார் - தங்களிடம் உள்ளதை மறைக்கின்ற கருமிகளிடம்
இரவன்மின் என்று - தயைகூர்ந்து யாசிக்க வேண்டாமென்று

இக்குறளிலே வள்ளுவரே, தமது ஆக்கத்தைப் படிப்போர்க்கு வேண்டிக்கொள்வது போலே ஓர் அமைப்பு. இரப்பது இளிவருவது என்று, இழிவானது என்றும் ஓதிய பிறகு, அப்படி இரந்துதான் ஆகவேண்டுமெனில், தயைகூர்ந்து தங்களிடம் உள்ளவற்றை மறைக்கும் கருமிகளிடம் தயவு செய்து இரக்க வேண்டாம் என்று வள்ளுவர் கேட்டுக்கொள்கிறார்.

Transliteration:

Irappan irappArai ellAm irappin
karappAr iravanmin enRu

Irappan – I beg you (vaLLur places him in the position of requesting the readers)
irappArai ellAm –Who ever seeks alms from others (begging)
irappin – if you must beg
karappAr – from the misers that hide what they have
iravanmin enRu – don’t beg them, please!

This verse sounds as if vaLLuvar himself requests all the listeners, not to beg from the misers that hide their possessions from the even deserving poor that would beg; After all, is it not demeaning to their pride if they beg such misers? – A simple verse  speaking about how despicable and dishonorable begging is from miser. Reminds us of the story of AuvvayyAr went seeking alms to a miser!

“Please, I beg of you, never beg misers that hide
 what they have; if you do, it is hurt to you pride”


இன்றெனது குறள்:

ஒளிப்பார் இடம்யாசிக் காதீர்யா சிப்பின்
இளியன்றோ என்றும் அது

OlippAr iDamyAsik kAdIryA sippin
iLiyanRO enRum adu?

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...