18th
Feb 2015
இடும்பைக்கே
கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
(குறள் 1029:
குடி செயல்வகை அதிகாரம்)
இடும்பைக்கே -
துன்பத்துக்கே
கொள்கலம்
கொல்லோ - அதைக்கொள்ளும் பாத்திரம் அன்றோ?
குடும்பத்தைக் -
தன் குடிக்கு
குற்றம் மறைப்பான் - தம்மாலும், பிறராலும், தெய்வத்தாலும் துன்பங்கள்
நேராதிருக்க உழைப்போன்
உடம்பு -
யாக்கை
தன் குடிக்கு மூவகைத் துன்பங்களும், (அதாவது தம்மாலும்,
பிறராலும், தெய்வத்தாலும் நேரக்கூடிய துன்பங்களைத் தரும் குற்றங்கள்), நேரா வண்ணம்
காப்பதற்கு எப்போதும் உழைப்போனுடைய உடலும் துன்பத்திற்கே பாத்திரம் அன்றோ? துன்பங்கள்
தரக்கூடிய குற்றங்களிலிருந்து தம்குடியை எப்போதும் காப்பதும் குடியை உயர்த்தும் பணியேயன்றோ?
பரிமேலழகர் உரையில், தன்குடி உயர்தலால் ஒருவருக்கு இம்மையும் மறுமையும் செம்மைப்படுதலால்,
அப்பணியில் ஈடுபடுவோர் மெய்வருத்தம் பார்க்கமாட்டார் என்றும், அது அவரது இயல்பு என்றும்
கூறப்படுகிறது.
கி.வா.ஜ தம் ஆராய்ச்சிப் பதிப்பில், கம்பராமாயணம், சேதுபந்தனப்
படலத்தில், வரும் கீழ்கண்ட பாடலை இக்குறளின்
முழுப்பொருளையும் உணர்த்துவதைச் சுட்டுகிறார்.
நெடும்
பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்,
துடும்பல்
வேலை துளங்கியது இல்லையால்-
இடும்பை
எத்தனையும் படுத்து எய்தினும்,
குடும்பம்
தாங்கும் குடிப் பிறந்தாரினே.
துன்பங்கள் எத்தனையும்
வந்து தடுத்து எய்தினாலும், மனம் தளர்ந்து போகாமல், தமது குடும்பத்தை ஆதரித்துக்
காப்பாற்றும் உயர் குடியில் பிறந்தவர்களைப்போல நீண்ட பெரிய பல மலைகள்
தூர்த்து நெருக்கிய போதும் அலைகள் பேரொலி எழுப்பும் பெரிய கடல் சிறிதும்
கலங்க வில்லை என்று கடலுக்கு உவமையாகச் சொல்கிறார்.
Transliteration:
iDumbaikkE
koLkalam kollO kuDumbaththaik
kuRRam
maRaippAn uDambu
iDumbaikkE –
For sufferings
koLkalam
kollO – is not the container
kuDumbaththaik –
his family
kuRRam
maRaippAn – saves from the miseries from their mistakes to
uplift or preserve
uDambu –
his body?
Is he not the
container of all sufferings, a person that strive to save his clan from the
miseries of mistakes of them, to preserve and uplift them. After all, saving from miseries itself is an
activity towards upliftment.
Parimelazhagar
states it clearly that a persons’ present and future births are mended, by
helping their clan and people engaged in such pursuit will not mind their
bodily sufferings ever.
Kambar uses a
metaphor of comparing, how even when big mountains close in to shrink the
expanse of the sea, it does not cringe in misery to the people that save their
clan amidst all the challenges and sufferings; a verse that conveys the same
thought of this kuraL.
“Is not his body, the container that
hold all miseries for clan
in pursuit to save them from the spate of all miseries’
span”
இன்றெனது
குறள்:
தன்குடிக்குத்
துன்பம் வராதுழைப்போன் யாக்கையும்
துன்பத்தைக்
கொள்கலமன் றோ?
thankuDikkuth
thunbam varAduzhaippOn yAkkayum
thunabththaik
koLkalaman RO?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam