13th
Jan 2015
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(குறள் 993:
பண்புடைமை அதிகாரம்)
உறுப்பு ஒத்தல் - உடம்பால், உருவால், உறுப்புகளால்
மக்கள் ஒப்பு - மனிதர்களைப் போன்றிருந்தாலும்
அன்றால் - அவர்களை மனிதர்களோடு ஒப்பாக வைக்கமுடியாது
வெறுத்தக்க - திண்ணிய, வலிமையான, செறிவான
பண்பு ஒத்தல் - பண்புடையாரோடு
ஒப்பதாம் - ஒத்திருத்தலே
ஒப்பு - மனிதரென்று ஒப்புக்கொள்ள முடியும்.
இக்குறளால் பண்பில்லாதவர்களை மனிதர்களோடு ஒப்ப முடியாது
என்று பண்புடைமையை மனிதத்தன்மைக்குத் தேவையான அடையாளமாக வைக்கிறார் வள்ளுவர். மற்றவர்களை
மாக்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறார்.
வெறும் உடம்பால், உருவால், உறுப்புகளால் மனிதர்களைப் போலிருப்பவர்களை
மனிதர்களோடு ஒப்பாக வைக்கமுடியாது. செறிவான, வலிமையான பண்புகளைக் கொண்டு ஒழுகுவாரோடு
ஒப்பியே அவ்வாறே ஒழுகுவாரோடு ஒருவரை மனிதர் என்று ஒப்புக்கொள்ளமுடியும்.
வெறுத்தக்க என்ற சொல்
ஓரளவுக்கு குழப்புவது உண்மைதான். இதற்கு தொல்காப்பிய சூத்திரமாகன, “விறப்பும் உறப்பும்
வெறுப்பும் செறிவே” என்பதற்கு இளம்பூரணம் எழுதிய உரை துணைகோளாக இருக்கிறது. புறநானூற்றுப்பாடல்
53ல், “வெறுத்த கேள்வி, விளங்கு புகழ் கபிலன்” என்று இளங்கீரனார் பாடுவதைப் பொருள்
செய்கையில், “வெறுத்த” என்ற சொல்லுக்குச் “செறிந்த” என்று இளம்பூரணர் தொல்காப்பியத்தைச்
சுட்டி பொருள் செய்துள்ளார்.
Transliteratrion:
uRuppoththal
makkaLoppu anRAl veRuththakka
paNboththal
oppadAm oppu
uRupp
oththal – By body, form and features
makkaL
oppu – even if looking like a humanbeing
anRAl –
someone cannot be placed as a human being
veRuththakka –
excellent, strong and rich in
paNb(u)
oththal - to people
of character and conduct
oppadAm –
the comparison
oppu –
is true and valid comparison
People of no
character and conduct cannot be placed among humanbeings, is what is implied in
this verse, thus emphasizing the above two as essential features of a human
being. Others are just biological aberrations in the form of human being is
also implied here by vaLLuvar.
Just having the
form, body and the features in body parts as humanbeings cannot place a person
as a humanbeing. Only people of strong and excellent character and conduct be
compared to true humanbeing., says this verse.
It is true that the
usage of word, “veruththaka” is a bit confusing as it seemingly implies “worthy of hate”. Close observation would reveal it is not “verukkath thakka” which
means “worthy of being hated”. The word “veruththakka” means “excellent and
strong”. The meaning is derived from “iLam pUraNars” commentary of a line from tholkAppiyam
poem 53 – “veRuththa kELvi, viLangu pugazh kapilan”.
“Just
the form, or body or features do not make a person human
Strong and excellent conduct and character
place’em in domain”
இன்றெனது
குறள்:
பண்பினரோ
டொத்தலே ஒப்பாகும் ஒப்பன்று
மண்ணுண்
உடலொடு ஒப்பு
paNbinarO
DoththalE oppAgum oppanRu
maNNuN
uDaloDu oppu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam