ஜனவரி 15, 2015

குறளின் குரல் - 1001

15th Jan 2015

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
                                    (குறள் 995: பண்புடைமை அதிகாரம்)

நகையுள்ளும் - நகைப்புக்குள்ளாகும்
இன்னாது - துன்பத்தைத் தருவதாகும்
இகழ்ச்சி - இகழ்ச்சி என்பதால்
பகையுள்ளும் - பகைமை இருப்பினும் (அவர்களிடத்திலும், அதைச் செய்யாது - உள்ளுரை)
பண்புள - இனியவாகிய பண்பே இருக்கும்
பாடறிவார் மாட்டு - அத் துன்பத்தின் வீச்சத்தை அறிந்தவர்களிடத்தில்

இகழ்ச்சி என்பது பிறருடைய நகைப்புக்கு உள்ளாக்கும் துன்பம் என்பதால், பகையுள்ளமே கொண்டிருந்தாலும் இனிய பண்புகளே விஞ்சி நிற்கும், அத்துன்பம் எத்தகையது என்று அறிந்த பண்புடையோரிடத்தில்.

இக்குறள் சொல்லப்பட்ட வழியிலே பொருள் செய்வது சற்று கடினமானது. பரிமேலழகர் உரையிலே “விளையாட்டுக்காக என்றாலும்” இகழ்ச்சி துன்பமுடையது என்று கூறுகிறார். இது முற்றிலும் அவராகக் கொண்டு கூட்டியதாக இருப்பினும், பொருள் பொதிந்த ஒன்றே. அதன் காரணமாகவே, அத்துன்பம் எத்தகையது என்று உணர்ந்த இனிய பண்புடைமையே உள்ளவர்கள், ஒருவர்மேல் பகையே கொண்டிருந்தாலும், அதை அவ்வாறு செய்யார் என்ற உரை பொருந்துகிறது.

Transliteration:

nagaiyuLLum innA digazhchi pagaiyuLLum
paNbuLa pADaRivAr mATTu

nagaiyuLLum – will subject to ridicule
innAdu – that’s painful is
igazhchi – reproach, rebuke
pagaiyuLLum – even to enemies (won’t do the same to them – implied meaning)
paNbuLa – will be courteous
pADaRivAr mATTu – those who understand such pain

Rebuke is redicule and painful; understanding that, courteous people won’t even do that to their enemies, says this verse.
The verse is rather difficult to interpret as written. Parimelazhagar in his commentary has added an implied phrase - “even if done as a sport!”, to explain it better, perhaps, his own interpretation!. However, it is meaningful and has helped other commentators. Only people of virtue of courtesy would not rebuke even their enemies, says this verse.

“Rebuke is painful; hence courteous
 won’t do that even to their enemies”


இன்றெனது குறள்(கள்):

துன்பாம் இகழ்ச்சிநகைப் பாமதனால் பண்புளோர்
ஒன்னார்க்கும் செய்யார தை

thunbAm igazhchinagaip pAmAdanAl paNbuLOr
onnArkkum seyyAra dai

மாற்றுக்குறள் நகை என்பதை மகிழ்வு என்ற பொருள் தருகிறதோ ஐயம் ஏற்பட்டு, மற்றுமொரு மாற்றுக்குறளும் எழுதலானேன்.

நகைக்குளாக்கும் துன்பாம் இகழ்வைப்பண் பாளர்
பகைவர்க்கும் செய்யார் உணர்ந்து

nagaikkuLAkkum thunbAm igazhvaippaN bALar
pagavarkkum seyyAr uNarndu

1 கருத்து:

  1. ஒன்னார்க் குமரிதாம் பேதையர் தாமேகொள்
    இன்னாவும் துன்புமெண்ணு தற்கு.

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...