டிசம்பர் 14, 2014

அண்மையில் எழுதிய கவிதைகள்..

இவை எந்த பொதுத் தலைப்பிலும் இல்லை.. அவ்வப்போது முகநூலில் காணும் இடுகைகளுக்கு ஏற்ப மனதில் தோன்று பதிலிடுகையாக இட்டவை..


வாழ்வெனும் சூதில் உருட்டும் பகடையில்
வாழ்வதும் தாழ்வதும் காணும் விகடமும்
சூழ்வினை பாழ்செயும் கோலமும் ஜாலமும்
ஏழ்பிறப்பின் தாயமென்று ணர்.


( தாயம் - inheritance)

பாரதியின் பிறந்த நாளன்று எழுதப்பட்ட கவிதை (சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொண்டாடினாலும், அரசாங்கமே முன்னின்று நடத்தவேண்டிய இவ்விழா நாளை ஏனோ தானோ என்று ஒரு சாதாரண நாள்போல ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது கண்டு பொறாமல் எழுதிய கவிதை. (குறிப்பாக, மறுநாள் உலகளாவிய அளவில் கொண்டாடப்படப்போகும் ரஜினியின் பிறந்தநாள், மற்றும் பட வெளியீட்டுக்கு இருந்த பரபரப்பும், பேச்சும், இதைப்பற்றி தமிழர்களிடையே இல்லாமல் போனதை நினத்து வருந்தி..)


நாட்டுக் குழைத்தபல நல்லோர் நினைவிலில்லை
நாட்டால் பிழைத்தோரை தூக்கிபுகழ் பாட்டுபல!
பாட்டாலே பாரதத்தில் வீரத்தின் வீங்குகனல்
நீட்டியெழ பாடியநம் பாரதியை ஏன்மறந்தோம்?
ஓட்டுக்காய் ஓலமிட்டு கூட்டாகக் கொள்ளையிடும்
தீட்டென்று தள்ளுதற்கும் தீண்டவொண்ணா தோரையெல்லாம்
ஊட்டியிங்கு தேற்றுகின்றோம் ஒண்புகழான் பாரதியை
காட்டுவழி கண்கட்டி விட்டாராய் வாழ்ந்தோர்க்கு
காட்டவழி தீபத்தை ஏற்றவந்த தீக்கவியை
நாட்டினரே ஏன்மறந்தோம் நாம்நினைக்க இந்நாளில்?
கூட்டாகக் கூடிநாளை கொண்டாடு வீர்பார்ப்போம்!
ஈட்டியதை உம்தலைவன் வீட்டுக்கும் நாட்டுக்கும்
ஏட்டெழுதும் என்றாநி னைப்பு?

தி ஹிந்து தமிழ் பதிப்பில் வரும் “க்ரேஸியைக் கேளுங்கள்” தொடரை என்னுடைய அண்ணா முகநூலிலில் பகிர்ந்திருந்தார். படித்தவுடன் எனக்குத் தோன்றியது.. இவ்வாறு! தனி மனிதத் துதிபாடலை நான் விரும்புவதில்லை என்றாலும், க்ரேஸி மோஹன் ஒரு வியத்தகுப் பன்முகக் கலைஞர்..  அவரைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது!

மோகனவன் ரேஸி நகைச்சுவையில் க்ரேஸியாக
தாகமுண்டு யாருக்கும் ஏனென்றால் வேகமும்வி
வேகமும் கொண்டெ வரையுமவர் கோபிக்க
நோகச்சொல் லாதசிறப் பால்

தொட்டதெல்லாம் பூவாணம் தொடுத்ததெல்லாம் சரவெடியாம்
விட்டமெல்லாம்  அதிர்ந்திடுமே வேடிக்கை நிறைந்திடுமே
கட்டுகட்டாய் க்ரேஸியவன் பிட்டுபிட்டு தூவுகின்ற
விட்டுஎல்லாம் வாய்விட்டு சிரிக்கநோய் விட்டுபோக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...