30th
Dec 2014
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
(குறள் 979:
பெருமை அதிகாரம்)
பெருமை - ஒருவருக்கு பெருமை தருவது
பெருமிதம் இன்மை - அவர் தற்செருக்கு (பெருமைக்குரியவராக இருந்தும்)
இல்லாதிருத்தல்
சிறுமை - சிறுமையாவது
பெருமிதம்
- தற்செருக்கு
ஊர்ந்து விடல் - மெதுவாக ஆனால் உறுதியாக நுழைந்து விடுவது.
ஒருவருக்கு உண்மையான பெருமை தருவது, அவரது தற்செருக்கற்ற
தன்மையாகும். பெருமைக்குரியவராக இருப்பினும், அது தம்மை சற்று பாதிக்காமல் இருத்தலே
உண்மையான பெருமையாகும். சிறுமையெனப்படுவது தற்செருக்கை தாமாக இல்லாவிட்டாலும், எப்படியோ
மெதுவாக நுழைய விட்டுவிடுவது. ஊர்ந்து விடல் என்னும் சொல் மிகவும் சரியாக இக்குறளில்
பயனாகியிருப்பது கவனிக்கத் தக்கது.
இக்குறளின் கருத்தையே “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற
குறளும் வேறுவிதமாக உணர்த்துகிறது. அடக்கம், அதாவது தற்பெருமை இல்லாமல் இருப்பதே, தேவர்களுள்
ஒருவராக வைக்கப்படும் பெருமையைத் தருவதுதானே?
Transliteration:
Perumai
perumidham inmai siRumai
Perumidam
Urndu viDal
Perumai –
That which gives glory to someone
perumidham
inmai – is being devoid of self-bloatedness (though truly
great)
siRumai –
lowly demeanor
Perumidam –
that self-arrogance
Urndu
viDal – letting that (self-arrogance) inadvertently
crawling in
True glory or great of someone is in their being
devoid of pride of arrogance; Though a person is of great many accomplishments,
worthy of glory, it is ony exemplified when not affected by such glory.
Lowlyness is letting even inadvertently that arrogance seep in, The word use of
“Urndu viDal” implies crawling in – such an apt usage.
Another verse earlier said, “aDakkam amararuL
uykkum” had a similar connotation. Not being affected by glory or being proud
will place somebody among the celestials, true glory.
“Not
being proud and arrogant with glory ever, is true pride
Even inadverdently letting arrogance seep in is
lowly abide”
இன்றெனது
குறள்:
செருக்கற்ற
பண்பே பெருமை - சிறுமை
செருக்கு
நுழைந்து விடல்
serukkaRRa
paNbE perumai – siRumai
serukku
nuzhaindu viDal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam