டிசம்பர் 06, 2014

குறளின் குரல் - 962

7th Dec 2014

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
                                    (குறள் 956: குடிமை அதிகாரம்)

சலம் பற்றிச் - வஞ்சனையினால்
சால்பில - பண்பற்ற, முறையற்ற, தகாதன
செய்யார் - செய்யமாட்டார்
மாசற்ற - குற்றமற்ற
குலம்பற்றி - உயர் குலத்தில் பிறந்து
வாழ்தும் என்பார் - வாழ்கிறோம் யாம் என்பார்.

தாம் குற்றமற்ற நற்குடியினர் வாழுமாறு வாழ்வோம் என்ற உறுதியில் நிலைபெற்றவர், வஞ்சனையால் தகாதனவும், முறையற்றனவும் செய்யார். வஞ்சனைத் தோன்ற காரணமாகக் வறுமை அடைதலை பரிமேலழகர் கூறுகிறார்.

நாலடியார் பாடல் வரிகள் இக்கருத்தை ஒட்டியது.

நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொ ண்டேறார்; -

அதாவது, உடம்பில் நரம்பு மேலே தோன்றும்படி வறுமையெய்தினாராயினும் மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில் தொடர்ந்து செல்லமாட்டார்.

Transliteration:

chalampaRRich sAlbila seyyArmA saRRa
kulampaRRi vAzhdumen bAr

chalampaRRich – by trickery, vicious deeds
sAlbila – acts that are detrimental
seyyAr – won’t do
mAsaRRa - spotless
kulampaRRi – honour of the lineage
vAzhdum enbAr- those that live thus.

Those that are resolved to preserve the fame of their noble lineage shall not by vicious deeds indulge in acts that are detrimental to the glory of their lineage. What makes somebody turn vicious? Perhaps the poverty from the state of well being can turn a person bitter and vicious, hints Parimelazhagar

Lines of a nAlaDiyAr poem reflect a similar thought. Even if somebody becomes so poor for the nerves to show up on the body (due to hunger and not eating), people of great lineage and noble birth shall not ween and do detrimental deeds.

“Resolved to preserve their noble lineages’ fame
 shall not indulge in deeds detrimental to the same “

இன்றெனது குறள்:

குற்றமற்ற நற்குடிவாழ்ந் தோமென்பார் வஞ்சனையால்
சற்றும் தகாதனசெய் யார்

kuRRamaRRa naRkuDivAzhn thOmenbAr vanjanaiyAl

chaRRum tagAdanasey yAr.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...