டிசம்பர் 31, 2014

குறளின் குரல் - 987

99: (Sublimity- சான்றாண்மை)

[This chapter is about sublimity – characterized by nobility, majesty, spiritual, moral and intellectual – all combined in one form. Hitherto VaLLuvar has talked about several desired virtues in people, each one in detail. Here in one word, he talks about the awe inspiring and highly impressive qualities expected in people known as sublimity or சான்றாண்மை)

1st Jan 2015

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
                                    (குறள் 981: சான்றாண்மை அதிகாரம்)

கடன் என்ப - ஒருவருக்கு உரிய கடமையாவது
நல்லவை எல்லாம் - இவையெல்லாம் நல்லன, செய்யத்தக்கன என்னும்
கடன் அறிந்து - ஆற்றுதற்குரிய கடமையை அறிந்து
சான்றாண்மை -அவற்றை மேன்மையோடு செய்து
மேற் கொள்பவர்க்கு - ஒழுகுபவர்க்கு

சான்றாண்மை என்பது மேன்மையான குணங்களாம் உயர் பிறப்பு, ஆளுமை, இறை நோக்கு, ஒழுக்க நெறி இவற்றை ஒன்றே திரட்டியதாம். தமக்கு உரிய கடமைகள் இன்னவென்று அறிந்து, அவற்றை நல்லவையென்றும், செய்யத்தக்கன என்றும் அறிந்து ஆற்றும் இயல்பே மேன்மையான குணங்களை ஒருங்கே திரட்டிய சான்றாண்மை உடையவர்க்கு உரித்தாம்

Transliteration:

kaDanenba nallAvai ellAm kaDanaRindu
sAnRANmai mERkoL bavarkku

kaDan enba – What is rightful duty for a person is
nallAvai ellAm – knowing what is right and good to do
kaDan aRindu – understanding that’s their duty
sAnRANmai – with excellence
mER koLbavarkku - doing them exceedingly well

The word ‘chANRANmai” implies the amalgamation of all noble virtues such as nobility, oriented towards godliness, having the ability to take charge, and having impeccable character. Knowing what ther right duties that are appropriate to self, knowing them to be good and need to be done, diligently performing those duties belong to the people of such high sublime nature.

Sublimity is in knowing the duties meant for self to do
And delivering them with excellence, without much ado


இன்றெனது குறள்:

ஆற்றுங் கடனறிந்து மேன்மையாய் செய்தவற்றை
ஆற்றுவதே போற்றும் கடன்

ARRung kaDanaRindu mEnmaiyAi seidavaRRai
ARRuvadE pORRum kaDan

குறளின் குரல் - 986

31st Dec 2014

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
                                    (குறள் 980: பெருமை அதிகாரம்)

அற்றம் - உண்மை (உண்மையிலே குற்றமோ குறையோ இருப்பினும்)
மறைக்கும் - அவற்றை மறைப்பர் (நிறையே காண்பர்)
பெருமை - நிறைமிக்க பெருமை மிக்கோர்
சிறுமைதான் - சிறுமைக் குணம் உள்ளோர்தான்
குற்றமே - நிறையைச் சற்றுக் காணாது, தேடித் தேடி குற்றங்களையும், குறைகளையும் கண்டு
கூறிவிடும் - கூறுவர்

சிறுபஞ்சமூலப் பாடலொன்று, இதே கருத்தை, “பிழைத்தல் பொறுத்தல் பெருமை - சிறுமை இழைத்ததீங் கெண்ணியிருத்தல்” என்று சொல்லும். பெரியோரான பெருமை மிக்கோர், பிறரிடம் குறைகள் இருந்தாலும் அவ்வுண்மையை மறைத்து, அவர்களைப் பற்றிய நிறைகளை மட்டுமே உரைப்பர். ஆனால் சிறுமதியினர், நல்லோரிடமும் குறைகளையே காண்பர் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.

உண்மையை மறைப்பதா? அதுவும் பெருமைக்குரியோர் என்ற கேள்வி எழுமல்லவா? அதற்காகத்தான் வள்ளுவர் முதலிலேயே, பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த; நன்மை பயக்கு மெனின்” என்றாரோ?

Transliteration:

aRRam maRaikkum perumai siRumaithAn
kuRRamE kURi viDum

aRRam – Truth (in truth even if there are faults and blemishes)
maRaikkum – hides ( and find only good in anyone)
perumai – the people that are great
siRumaithAn – only low in character
kuRRamE – only fault in others (even in good people)
kURiviDum – will speak (of others faults only)

A poem in SirupanchamUlam reflects the same thought. Great people forgive others mistakes; only low characters remember only faults of others.  Truly great people, even if somebody has blemishes, would hide that truth and not indulge in badmouthing about them. Only people that are low in character shall indulge in badmouthing even the blemishless people.

A question may arise to how truth can be hidden! VaLLuvar has covered his bases well in an earlier verse saying that, “Even a lie is not wrong and is considered truth if it can cause good.

“Greatness will hide the truth of othes ill!
 Only the base will speak ill even when nil.


இன்றெனது குறள்:

குறையை மறைக்கும் பெருமை - சிறுமை
நிறைமறைத்து குற்றமுரைக் கும்

kuRaiyai maRaikkum perumai – siRumai
niRaimaRaiththu kuRRamuraik kum

டிசம்பர் 29, 2014

குறளின் குரல் - 985

30th Dec 2014

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
                                    (குறள் 979: பெருமை அதிகாரம்)

பெருமை - ஒருவருக்கு பெருமை தருவது
பெருமிதம் இன்மை - அவர் தற்செருக்கு (பெருமைக்குரியவராக இருந்தும்) இல்லாதிருத்தல்
சிறுமை - சிறுமையாவது
பெருமிதம்  - தற்செருக்கு
ஊர்ந்து விடல் - மெதுவாக ஆனால் உறுதியாக நுழைந்து விடுவது.

ஒருவருக்கு உண்மையான பெருமை தருவது, அவரது தற்செருக்கற்ற தன்மையாகும். பெருமைக்குரியவராக இருப்பினும், அது தம்மை சற்று பாதிக்காமல் இருத்தலே உண்மையான பெருமையாகும். சிறுமையெனப்படுவது தற்செருக்கை தாமாக இல்லாவிட்டாலும், எப்படியோ மெதுவாக நுழைய விட்டுவிடுவது. ஊர்ந்து விடல் என்னும் சொல் மிகவும் சரியாக இக்குறளில் பயனாகியிருப்பது கவனிக்கத் தக்கது.

இக்குறளின் கருத்தையே “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற குறளும் வேறுவிதமாக உணர்த்துகிறது. அடக்கம், அதாவது தற்பெருமை இல்லாமல் இருப்பதே, தேவர்களுள் ஒருவராக வைக்கப்படும் பெருமையைத் தருவதுதானே?

Transliteration:

Perumai perumidham inmai siRumai
Perumidam Urndu viDal

Perumai – That which gives glory to someone
perumidham inmai – is being devoid of self-bloatedness (though truly great)
siRumai – lowly demeanor
Perumidam – that self-arrogance
Urndu viDal – letting that (self-arrogance) inadvertently crawling in

True glory or great of someone is in their being devoid of pride of arrogance; Though a person is of great many accomplishments, worthy of glory, it is ony exemplified when not affected by such glory. Lowlyness is letting even inadvertently that arrogance seep in, The word use of “Urndu viDal” implies crawling in – such an apt usage.

Another verse earlier said, “aDakkam amararuL uykkum” had a similar connotation. Not being affected by glory or being proud will place somebody among the celestials, true glory.

“Not being proud and arrogant with glory ever, is true pride
 Even inadverdently letting arrogance seep in is lowly abide”


இன்றெனது குறள்:

செருக்கற்ற பண்பே பெருமை - சிறுமை
செருக்கு நுழைந்து விடல்

serukkaRRa paNbE perumai – siRumai
serukku nuzhaindu viDal

டிசம்பர் 28, 2014

குறளின் குரல் - 984

29th Dec 2014

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
                                    (குறள் 978: பெருமை அதிகாரம்)

பணியுமாம் என்றும் - பணிவுடைமை என்னும் பண்பினை என்றும் கொண்டொழுகுவர்
பெருமை - உண்மையில் பெருமை உடைய மேலோர்
சிறுமை - கீழோர், தாழ்வான எண்ணங்களையும் செயல்களையும் கொண்டவர்கள்
அணியுமாம் - தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக்கொண்டு
தன்னை வியந்து - தம்முடைய சிறு செயல்களையும் வியத்தகு சாதனைகளாகக் கொள்ளுமாம்.

உண்மையானப் பெருமை உள்ளோர்கள், சாதனையாளர்கள், பணிவென்னும் அடக்கம் உள்ளவர்கள். தங்களுடைய பெரிய சாதனைகளைக் கூட வெளியில் தெரிவித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒன்றுக்கும் உதவாத செயல்களையும் கூட உலகளாவிய சாதனைகளாக் வியந்து கருதி தமக்குத்தாமே புகழாரம் சூட்டிக் கொள்ளுவர் கீழோர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்று ஏற்கனவே அறத்துபாலின் அடக்கமுடைமை அதிகாரத்தில் பணிவின் பெருமையை வள்ளுவர் வலியுறுத்தியுள்ளதை நினைவுகொள்ளலாம்.

உலகத்தில் நாம் இன்று காணும் இவ்வுண்மையை அன்றே படம் பிடித்துக் காட்டியதுதான் வள்ளுவரின் பெருமை. சுய விளம்பரங்களும், சுவரொட்டி ஆடம்பரங்களும், பாராட்டி கொடுத்துக்கொள்ளும் பட்டங்களும், மலர் மகுடங்களும், அதற்கு துணையாகும் பலரது செயல்களாகிய அவலங்களைத்தான் வள்ளுவத்தினை ஓவியமாகத் தீட்டியவர்களும், பேச்சிலும் எழுத்திலும் மேற்கோளாகக் காட்டுபவர்களும் செய்வது.

Translliteration:

paNiyumAm enRum perumai siRumai
aNiyumAm thannai viyandu

paNiyumAm enRum – They will uphold virtue of humility
perumai – those that are truly glorious
siRumai – people of lowly thoughts and deeds
aNiyumAm – will wear self-gloating praises
thannai viyandu – wondering about their near to nothing accomplishment

People of true glorious accomplishments have humble demeanor. They will not even mention of their accomplishment to show off their greatness ever to others. It is for others to observe and wonder. But the people of lowly thoughts, deeds and conduct will incessantly be bloated in vainglory and would give themselves all the accolades as if they have done exemplary accomplishments.

It is good to recall that VaLLuvar has already stressed humility as the virtue for everyone, in the chapter on Humiity earlier.

This verse makes so much sense in todays’ world of vainglory, arrogated self-praise with wall posters, banners, cutouts, flower ornamentations, solicited honorary doctorates, and other forms of self-glory, desired by even those who speak and write about vaLLuvar’s great work. Perhaps, vaLLuvars’ period also had such vainglorious people.

“Vainglory is the way of lowly in thoughts and deeds
 Humility is what sprouts out of truly glorious seeds”


இன்றெனது குறள்:

தற்பெருமை கொண்டலைவர் கீழோர் - பணிவென்னும்
நற்பெருமை பொற்பாம்மே லோர்க்கு

thaRperumai koNDalaivar kIzhOr – paNivennum
naRperumai poRpAmmE lOrkku

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...