நவம்பர் 10, 2014

குறளின் குரல் - 935

10th Nov 2014

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
                             (குறள் 929: கள்ளுண்ணாமை அதிகாரம்)

களித்தானைக் - கள் களித்து போதையில் மூழ்கியவர்க்கு
காரணம் காட்டுதல் - அது தவறென்று அறிவுறுத்தி தெளிவிக்க முயலுதல்
கீழ்நீர்க் - நீருக்குக் கீழே மூழ்கி
குளித்தானைத் - குளித்துக் கொண்டிருப்பவரை
தீத் துரீஇ அற்று - தீப்பந்தத்தால் தேடுவரோ?

கள்குடியில் களித்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி, மூழ்கி இருப்பவரைத் திருத்துவதற்காக அவருக்கு தெளிவுறுத்தல் என்பது, நீருக்கு அடியிலே மூழ்கி குளிப்பவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவதற்கு ஒப்பாகும், என்கிறார் வள்ளுவர்.

நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்..! ராத்திரிக்குத் தூங்கவேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்" என்ற கவித்துவமாகத் திரைப்படப் பாடலொன்று சொல்லுவதுண்டு. "குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு" என்பதும் பழக்கமான சொலவடைதானே! அவர்களுக்கு அறிவுறுத்தித் திருத்துவது என்பது நடவாத காரியம். அது தீப்பந்தம் கொண்டு நீருக்கடியில் மூழ்கிக் குளிப்பவர் ஒருவரைத் தேடுவதற்கு ஒப்பாகும் என்கிற உவமை சொல்லவந்த கருத்துக்குப் பொருத்தமே! ஆனால், மின்சார தீவட்டிகள் நிறைந்துவிட்ட நாட்களில் நீருக்குள் தேடுவது எளிதல்லவா?

"குடி குடியைக் கெடுக்கும்", “புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்துக்கு ஊறுவிளைவிக்கும்" என்ற அபாய அறிவிப்பினைச் ஒரு கடமைக்காகச் செய்துவிட்டு அவற்றை ஒரு கேளிக்கைக்காகக் காட்டும் திரைப்படங்கள் மலிந்துவிட்ட நாட்களில், அரசாங்கமே, "குடி"மகன்களின் விருப்பம் என்ற போர்வையில், அரசாங்கத்துக்கு வருவாய் ஈட்டுதல் என்ற காரணத்துக்காகச் சாராயக்கடைகளை நடத்தும்போது இக்குறளால் ஆகக்கூடிய பயனென்ன? தவிர இக்குறளில் ஒரு நம்பிக்கையின்மை தெரிகிறது. குடிகாரர்களைத் திருத்த முடியும் என்பதற்காக பல அமைப்புகள் முயலுகையில் குடிப்பழக்கதிருந்து ஒருவரை மீட்பது இயலாது என்பது எதிர்மறையான சிந்தனைதானே? இவ்வமைப்புகள் மின்சாரத் தீவட்டிகளைப் போன்றவையே, எரிப்பந்தங்களைப் போல் நீரில் அவிந்துவிடக்கூடியவை அல்ல.

Transliteration:

kaLithtAnaik kAraNam kATTudal kIzhnIrk
kuLiththAnaith thIththurIi aRRu

kaLithtAnaik – To an addicted person
kAraNam kATTudal – reason out and explain the ill-effects to correct them
kIzh nIrk – under water
kuLiththAnaith – that who is swimming (to look for him)
thIth thurIi aRRu – attempting to search using a torch fire.

To advice an addicted person is a wasted effort, is the underlying thought expressed in this verse. It is like searching a person swimming under water with torch fire, impossible and foolish, implies vaLLuvar.

It is my promise that I won't drink from tomorrow; but tonight, to sleep, I will indulge a bit” is a rough translation of a movie song, underscores the behavioral pattern of addicts. “What an addict promises will hold no good when it is dawn”, says an adage, implying it is impossible to correct them by advising. Though the metaphorical reference of this verse, would make sense for vaLLuvar's times, in the days of electric torch lights, that function very well underwater, it makes it irrelevant.

Also, there are many public hoardings as well movie messages, vein-preaching that drinking and smoking are injurious to health as well as family and continue to show the same in entertainment, what good this verse would do? When governments, under the promise of freedom of action, and revenue generation, promote toddy drinking through their own outlets, what effect such preaching would have?

Also this verse sets an undertone of hopelessness, which is unnecessary these days, as there are many organizations that work tirelessly with programs that recovers people from such habits. The negativity of this verse is inappropriate in the days of perpetual hope of, “there is an alternative”, for every adverse situation.

Does it make sens to search a person underwater with a fire-torch?
Likewise, it is of no use to advice a toddy-addict to change as such”

இன்றெனது குறள்(கள்):

தேடுவரோ தீபந்தால் நீருள்ளே? காரணங்கள்
கூடுமோ கள்களிப்பார்க் கு?

thEDuvarO thIpandAl nIruLLE? KaraNangaL
kUDumO kaLkaLippArk ku?

இதே கருத்தை (பொருத்தமற்ற) உவமையை நீக்கிவிட்டு மீண்டுமொரு குறள்:

கள்ளுண்பார் காரணம் காணாரே கற்பிக்க
உள்ளுவரோ உண்மையறிந் தார்?

kaLLuNbAr kAraNam kANArE kaRpikka

uLLuvarO uNmaiyaRin dAr?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...