30th
Oct 2014
ஆயும்
அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய
மகளிர் முயக்கு
(குறள்
918:
வரைவில்
மகளிர் அதிகாரம்)
ஆயும்
அறிவினர் -
ஆய்ந்து,
இவை
நல்லன,
அல்லது
அல்லன என்று பாகுபடுத்தி
ஆராயும் அறிவுடமை
அல்லார்க்கு
-
இல்லாதவர்க்கு
அணங்கு
என்ப -
துன்பம்
என்பதாம் (காம
வயப்படுத்தி அழிக்கு மோகினி
என்றும் கூறுவர்)
மாய
மகளிர் -
வஞ்சத்தை
நெஞ்சில் சுமந்த வஞ்சியராம்
விலைமகளிர்
முயக்கு-
அவர்களோடு
கூடிக் கொள்ளும் உடலுறவால்
இவையிவை
நல்லன அல்லது அல்லன என்பதை
பாகுபடுத்தி ஆராய்ந்து
நல்லவற்றைக் கொள்ளும் அறிவுடமை
இல்லாதவர்க்கு,
வஞ்சத்தை
நெஞ்சில் சுமந்த வஞ்சியராம்
விலைமகளிரைக் கூடுவதால்
துன்பமேயாம்.
"அணங்கு"
என்பதை
பரிமேலழகர் "காம
நெறியால் உயிர்கொள்ளும்
தெய்வம்"
என்று
கூறி,
அவ்வாறு
ஆராயாது முயங்குவோர் உயிரிழக்க
நேரிடும் என்று எச்சரிக்கையாகக்
கூறுகிறார்.
“காமப்
பிசாசு"
என்றிருக்கவேண்டும்.
விலைமாதரை
ஒரு பேச்சுக்காகக் கூட
தெய்வத்தின் நிலைக்கு
உயர்த்துவது சரியில்லை.
"அணங்கு"
என்ற
சொல்லுக்கு வருந்துகிற துன்பம்
என்றும் பொருள் கொள்ளலாம்
ஆகையால் அவ்வாறு கொள்ளுதலே
மேலும் பொருத்தமாயிருக்கும்.
Transliteration:
Ayum
aRivinar allArkku aNangenba
mAya
magaLir muyakku
Ayum
aRivinar – Being wise with deep thinking and knowing what is
good or bad
allArkku
– people devoid of such thinking
aNang(u)
enba – misery befalls
mAya
magaLir – with cunning women that sell pleasure
muyakku
– physical relationship with them.
Those
who do not have the wisdom to differentiate between good and bad and
tread only the path of good, shall have misery, because of their
embrace and relationship with the prostituting women that carry only
thoughts of exploitation in their minds.
Parimelazhagar
interprets the word “aNangu” as the goddess of lust and desire
that will give death to such fools by dragging them into its vicious
net. To give goddess status to an instigating evil nature does not
fit somehow. The word also means, “misery”; hence it makes sense
to interpret that such fools will fall into misery because of their
indiscriminate acts.
“Relationship
with cunning women, that to covet, lure
shall bring
only misery to thoughtless fools, for sure”
இன்றெனது
குறள்(கள்):
வஞ்சம்
சுமந்தவஞ்சி யர்முயக்கம்
துன்பமாம்
கொஞ்சமும்
ஆய்ந்தறிவற் றார்க்கு
vanjam
sumandavanji yarmuyakkam thunbamAm
konjamum
AyndarivaR RArkku
வஞ்சனெஞ்ச
வஞ்சியர்க்கண் துஞ்சதுன்பே
விஞ்சுமாம்
கொஞ்சமும்
ஆய்ந்தறிவற் றார்க்கு
vanjanenja
vanjiyarkaN thunjathunbE vinjumAm
konjamum
AyndarivaR RArkku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam