ஆகஸ்ட் 31, 2014

குறளின் குரல் - 864


31st Aug 2014

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு.
                        (குறள் 858: இகல் அதிகாரம்)

இகலிற்கு - பகையுணர்வுக்கு
எதிர்சாய்தல் - எதிராக அதனைப் போற்றாமய் (பகையுணர்வின்கண் சாய்ந்து வீழ்ந்துபடாமை)
ஆக்கம் - வளமும் செல்வமுமாம்
அதனை - அப்பகையுணர்வை
மிகல் ஊக்கின் - கிள்ளியெறியாது, மிகைக்கும்படியாக ஊக்குவித்தால்
ஊக்குமாம் - அது எண்ணத்தில் புரையோடி, ஊக்குவிப்பது
கேடு - அழிவையே

பகையுணர்வுக்கு இடம் கொடாமல், அதன்பக்கம் சாய்ந்து வீழ்ந்துபடாமல் இருத்தலே ஒருவருக்கு எல்லா வளமும் செல்வமுமாம்; மாறாக அப்பகையுணர்வை கிள்ளியெறியாமல், அதனை மிகைக்கவிடல் அது எண்ணத்தில் ஊறி, அழிவையே ஊக்குவிக்கும். இகல், மிகல் என்ற சொற்களை வைத்து எழுதப்பட்ட மூன்றாவது குறள்.

மிகல் என்பதற்கு பெருமை என்றும் வெற்றி என்றும் பொருள்கொள்ளலாம் என்பதால், பகையுணர்விலிருப்பதை பெருமை என்றும், வெற்றியென்று கருதி, அதனை ஊக்கினால் என்ன விளையும் என்பதையும் இக்குறள் சொல்லுவதாகக் கருதலாம்.

Transliteration:

igaliRku edirsAidal Akkam adanai
migalUkkin UkkumAm kEDu

igaliRku – For the hostile posture
edirsAidal – to be against that, not leaning towards and be fallen
Akkam – is all wealth
Adanai – that hatred or hostility
migal Ukkin – encourage it to be excessive measure
UkkumAm – even that thought will encourage and bring about
kEDu – destruction.

Not yielding more to hostility towards others, or in other words leaning on the side of hatred will bring all wealth to a person. Instead, if he harbors more hatred, not getting rid of it, it will seep deep in the mind and will only encourage destruction to be set in. out of the four verse with the same words, “igal” and “migal”, in this chapter, this verse is the third verse.

The word “migal” means “excess”, “pride”, and “ victory”, Though it seems natural to go with the first meaning – “excess”, other two also make sense. Some people, out of their stupidity, think, hostility is a matter of pride or a victory to their foolish stance. If they only encourage such thought, what will come to them is what is expressed in this verse clearly.

“Standing opposed to hatred, hostility is one’s wealth
 Excess of it encourages destruction looming in stealth”


இன்றெனது குறள்:

பகையுணர்வைப் போற்றாமை செல்வமாம் அன்றி
மிகைக்கவிடல் தீமைக் கழைப்பு

pagaiyuNarvaip pORRAmai selvamAm anRi
migaikkaviDal thImaik kazhaippu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...