ஆகஸ்ட் 28, 2014

குறளின் குரல் - 861

28th Aug 2014

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்.
                        (குறள் 855: இகல் அதிகாரம்)

இகல் - பகையுணர்வுக்கு
எதிர்சாய்ந்து - இடங்கொடாது, அதற்கெதிராக, அப்பகையுணர்வை வென்று
ஒழுக வல்லாரை - (நட்புறவிலே) அந்நெறி நின்று வாழ வல்லவர்களை
யாரே மிகல் ஊக்கும் - யார்தான் வெல்லக்கூடிய
தன்மையவர் - தன்மையினை உடையவர்?

பகையுணர்வுக்குச் சற்றும் இடங்கொடுக்காமல், அதை வென்றவர்க்கு, அவரை வெல்லக்கருதுகிற எண்ணமுடையவர் யார் இருக்கமுடியும்? ஏனெனில் அவருக்கு பகைவர்களே இல்லையே. இக்குறளின் கருத்து எல்லோருக்கும் பொதுவென்றாலும், குறிப்பாக, அரசாட்சியில் இருப்பவர்களுக்கு, பகையுணர்வு இல்லாமல் இருத்தல் எளிதில்லை என்பதால், “எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை” என்று வள்ளுவர் கூறுகிறார்.

Transliteration:

Igaledir sAindozhuga vallArai yArE
migalUkkum thanmai yavar

Igal – enemity
edir sAind(u) – against it, winning over (the feeling of enemity, not giving room to it)
ozhuga vallArai – live in such stance
yArE migal Ukkum – who can victory over them?
Thanmaiyavar – with the posture of enemity?

Who can even think of a victory over a person who has won over the feeling for enemity, taking a stance against enemity?  For a person devoid of enemies, the alternate posture is only friendship. Though it is applicable to everyone in general, for rulers it is even more pertinent, as it is in general not possible for rulers to be devoid of enemies; hence vaLLuvar specifically says about the capability by using the phrase “edir sAindu ozhuga vallArai

“Who shall gain victory over a person
 who is against enemity of any reason?”


இன்றெனது குறள்:

இகல்வென் றொழுகுவாரை வெல்லக் கருதிப்
புகவெண்ணல் யார்க்கிய லும்?

Igalven RozhuguvArai vellak karudip
pugaveNNAl yArkkiya lum?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...