9th Aug 2014
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
(குறள் 836: பேதைமை அதிகாரம்)
பொய்படும் - எடுத்தவினை
பொய்த்துப்போகும்
ஒன்றோ - அதுமட்டுமல்லாது
புனைபூணும் - கைவிலங்கை,
தளையைப் பூட்டிக்கொள்ளும் படியாகச் செய்துவிடும்
கையறியாப் - செய்யும்
வகையாறியாது
பேதை - அறிவீனன்
வினை - ஒரு செயலை, வினையை
மேற்கொளின் - மேற்கொள்ளுவான்
எனின்.
ஒரு அறிவீனன்
ஏதேனும் செயலை மேற்கொள்ளுவானாகில், அது பொய்த்துப்போகும்; அதுமட்டுமல்லாது அது கைக்குத்
தளையை, அதாவது விலங்கைப் பூட்டிக்கொள்ளும் நிலையை உண்டு பண்ணிவிடும். இதையே பழமொழிப்பாடலொன்று
“நுணலும் தன் வாயால் கெடும்” என்கிற பழமொழியை
விளக்குவதற்காகக் கூறுகிறது!
“பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன்
சொல்லாலே
தன்னைத் துயர்படுக்கும் - நல்லாய்
மணலுள்
முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன்
வாயால் கெடும்.”
Transliteration:
Poippadum onRo punaipUNum kaiyaRiyAp
pEdhai vinaimER koLin
Poippadum –
what is undertaken will go futile
onRo – not only that, but
punaipUNum –
will be bound in chains
kaiyaRiyAp –
when not knowing how to do it
pEdhai – the fool
vinai - task
mERkoLin – undertakes
If a fool
undertakes any task it will go futile and be false; not only that, but the fool
would put himself in a place to be chained by his own deeds – metaphorically,
prisoner of his own deeds or would do something to bring the wrath of rule, to
be censured, and arrested. A poem from Pazhamozhi nAnUru, uses an old adage
that a frog would show it self to prying snakes or other enemies but making the
noise using its mouth, to exemplify this thought.
“Futile will be the deeds undertaken by a
fool, not knowing how;
and
also, he be bound by chain of his own mistakes somehow”
இன்றெனது குறள்:
மூடன் முனையும் செயல்பொய்ப் பதோடுபலர்
சாட தளையும் படும்
mUdan munaiyum seyalpoip padhODupalar
chADa thaLaiyum paDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam