st Jul 2014
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
(குறள் 797: நட்பாராய்தல் அதிகாரம்)
ஊதியம் என்பது ஒருவற்குப் - ஒருவருக்கு
ஈட்டம் அல்லது வருவாய் என்பது
பேதையார் - அறிவிலிகளின்
கேண்மை - நட்பை
ஒரீஇ விடல் - கொள்ளாது
கைவிடுதலாம்; கொண்டிருந்தால் துறப்பதாம்.
ஒருவர் அவர் வாழ்வில் ஈட்டிய வருமானம் என்பது
நல்ல நண்பர்கள் என்பதை விட, அறிவிலிகளின் நட்பைக் கைக்கொள்ளாது தவிர்ப்பதாம். அப்படியே
கொண்டிருந்தாலும் துறப்பதாம். இக்குறளின் கருத்தையே வேறுவிதமாக நட்போடு சொல்லாமல்,
பேதைமை மற்றும் ஊதியத்தை மையமாகக் கொண்டு பின்வரும் பேதைமை அதிகாரம் இவ்வாறு சொல்லுகிறது,
“பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். அதாவது, “பேதைமை என்று சொல்லப்படுவது யாது
என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்” உள்ளுரையாக
கேடு தருவதில் ஒன்றாக அறிவிலிகளின் நட்பையும் கொள்ளலாம்.
Transliteration:
Udiyam enbadu oruvaRkup pEdaiyAr
kENmai orIi viDal
Udiyam enbadu oruvaRkup – True earnings of a person is
pEdaiyAr - fools
kENmai - friendship
orIi viDal – not have in the first place; or forsake, if
already is in friendship
More than having a
good friend, the real earnings of a person, is to avoid first fools’
friendship; if there is a friendship already, renounce it with without remorse.
A similar verse centered around foolishness and earnings is said in the chapter
of “foolishness”. That verse says, the foolishness is, going for bad and
letting go, the real earnings; fools friendship is to be construed as one of
the bad things.
“To avoid or forsake the friendship with
fools
is the
true earnings and shall avoid redicules”
இன்றெனது குறள்:
அறிவிலிகள் நட்பைத் துறப்பதே
ஈட்டம்
அறிந்திதைக் கொள்வதாம் நட்பு
aRiviligaL naTpaith
thuRappadE ITTam
aRindidaik koLvadAm
naTpu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam