ஜூன் 16, 2014

குறளின் குரல் - 788

16th Jun 2014

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
                        (குறள் 782: நட்பு அதிகாரம்)

நிறைநீர - வளரும் தன்மையது (நாள்தொறும் வளர்ந்து முழுமதியாகும் பிறை நிலவு போல)
நீரவர் - அறிவுடையார்
கேண்மை - நட்பு
பிறைமதிப் - பிறை நிலவு
பின்னீர - தேய்பிறையின் தன்மையதாம் (நாள்தொறும் குறையும் தன்மையது)
பேதையார் - அறிவில்லா மூடர்தம்
நட்பு - நட்பு

பெரியோர், அறிவுடையோருடன் கொள்ளும் நட்பு நாள்தோறும் வளரும் நிலவினைப்போன்று வளர்ந்து முழுமதிபோல் நிறையும் தன்மையது. அறிவில் மூடரோடு கொள்ளும் நட்பானது, நிறைந்தது போல் தோன்றினும், தேய்பிறை போல குறைந்து, சுருங்கி, அமாவாசைப் போன்று இல்லா நிலவாகிவிடும் - இதுவே குறள் சொல்லும் கருத்து!

வளர்மதி, தளர்மதி இவற்றை உவமையாகக் கொண்ட இலக்கிய எடுத்துக்காட்டுகளும், காட்சிகளும் ஏராளம். கி.வா.ஜா-வின் ஆராய்ச்சி பதிப்பு இக்கருத்தையொட்டிய பலபாடல்களைக் எடுத்துக்காட்டினாலும், கீழ்கண்ட பாடல் குறள்கருத்தையொட்டியே உள்ளது.

“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு”

Transliteration:

niRainIra nIravar kENmai piRaimadhip
pinnIra pEdhaiyAr naTpu

niRainIra – like growing phase and nature ( of the cresent moon )
nIravar – wisemen’s
kENmai - friendship
piRaimadhip- cresent moon
pinnIra – like when it is in the decay phase
pEdhaiyAr – is fools
naTpu - friendship

Friendship with wisemen will grow like the waxing phase of cresent moon to be a full moon. Friendship with fools is like waning phase of the cresent moon to a noon moon, says this verse.

Many a literary works have used waxing and waning phases of moon as a metaphor in various contexts of growth and decay. Ki.Va.Ja’s research compilation points out many such verses from literature.  nAlAdiAr, one of the foremost of works on ethics of Sangam period, has many poems expressing the thought of this verse, one exactly with the same metaphor.

“Friendship with wisemen is a like waxing phase of moon;
 but Friendship with fools is a like waning phase of moon.”

இன்றெனது குறள்:

வளர்மதி போன்றாம் அறிவுடையோர் நட்பு
தளர்மதியாம் மூடர்தம் நட்பு

vaLarmadhi pOnRAm aRivuDaiyOr naTpu

thaLarmadhiyAm mUDartham naTpu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...