13th Jun 2014
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
(குறள் 779: படைச்செருக்கு அதிகாரம்)
இழைத்தது - தாம் இவ்வாறு பகைவரை முடிப்பேன்
என்று வஞ்சினம் (சபதம்) செய்துவிட்டு
இகவாமைச் - அச்சொல்லைத் தப்பாமால், கைவிடாது
போரிட்டு
சாவாரை - மடிந்தவரை
யாரே - யார்தான்
பிழைத்தது - அவர்
தாம் சொன்ன வஞ்சினத்தை நிறைவேற்றாது விட்டாரென்று
ஒறுக்கிற்பவர் - பழிச்சொல்லால்
தண்டிக்க வல்லவர்?
பெரும் படைவீரரது பெருமையைக்
கூறுகின்ற மற்றொரு குறளிது. பகைவரைப்
போரிட்டுக் கொல்வேன் என்று சூளுரைத்து வஞ்சினம் கூறிய வீரர், அச்சொல்லைக் கைவிடாது
போரிட்டு, அப்போரிலே பல பகைவரைக் கொன்றாலும், தானும் மடிந்து பட்டால், அவ்வீரன் சொன்ன
சூளுரையில் தவறிவிட்டான் என்று யார் பழிக்கவும் இடித்துரைக்கவும் முடியும்?
Transliteration::
Izhaiththadu igavAmaich chAvarai yArE
Pizhaithtadu oRukkiR pavar
Izhaiththadu – After taking a vow that he would finish off
the enemies
igavAmaich – not relinquishing his word, fighting till the end
chAvarai – and the one who dies in his fight
yArE – who
Pizhaithtadu – saying that he did not fulfill his vow
oRukkiRpavar – can blame him?
Another verse which
speaks of the glory of valiant warrior. After taking a vow that he would finish
off the enemies, not renouncing his vow, if that valiant warrior fights till
his last breath and dies a glorious death for the cause, who can blame him
saying that he did not fulfill his promise or word?, asks this verse.
“Who can blame the valiant warrior that vowed
to defeat
enemies, but died in war, as deserter of
undertaken feat?”
இன்றெனது குறள்:
பொய்யாச்சொல்
போர்களத்துப் பட்டவீரர் தம்மையார்
பொய்த்ததாய் காய்வரி கழ்ந்து?
poiyAchchol
pOrkaLaththup paTTavIrar thammaiyAr
poithtadAi
kAivari gazhndu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam