11th Apr 2014
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
(குறள் 716: அவையறிதல் அதிகாரம்)
ஆற்றின்நிலை - நன்னெறி
ஒழுக்கென்னும் நிலைப்பாட்டிலிருந்து
தளர்ந்தற்றே - ஒருவர்
வழுவியதை ஒக்கும்
வியன்புலம்
- அகன்ற நுண்மாண் நுழைபுலம்
ஏற்றுணர்வார் முன்னர் - கொண்ட
ஆன்றோர் நிறைந்த அவை முன்பாக
இழுக்கு - ஒருவர்
அவையறியாது பேசுதலால் கொள்ளும் இழுக்கு
நல்ல நெறிகளைக் கொண்ட
ஒழுக்கவழி நிலைப்பாட்டிலிருந்து, ஒருவர் வழுவுதலைப் போன்றதேயாம், ஆன்றோர் நிறைந்த அவையிலே
ஒருவர் தம்முடைய அவைக்கொப்பாப் பேச்சினால் படும் இழுக்கானது. ஒழுக்க நிலைப்பாட்டில் நின்றவரின் மாண்பு அது பிறழ்ந்தபோது
தாழுதல் எவ்வளவு இழிவாகுமோ, அந்த அளவுக்கு இழிவு என்று சொல்லி, அவையறியாப் பேசுதலின்
இழிவை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.
Transliteration:
ARRin nilaithaLarn dhaRRE viyanpulam
ERRuNarvAr munnar izhukku
ARRin nilai – from the stance of the repute of virtuous conduct
thaLarndhaRRE – equal to falling or slipping from such
repute
viyanpulam – widely read in many facets of life
ERRuNarvAr munnar – before the assembly of such intellectuals
Izhukku – the disgrace one suffers because of his
unsolicited, foolish speaking
From the stance of
reputable and virtuous conduct, when one falls or eve slips, it is such a
disgrace to him. Likewise, before the august assembly of well-read
intellectuals, if a person slips in his speech, it is considered an equally
worse disgrace.
“Before the erudite
assembly of intellectuals, for someone to blunder in speech
is such a disgrace as falling from a reputable
conduct that is so hard to reach”
இன்றெனது
குறள்:
நெறிபிறழ்ந்தார்ப் போன்றதே ஆன்றோர் அவைமுன்
அறிவிழுக்கைக் காட்டுகின்ற பேச்சு
neRipiRazndhArp pOnRadhE AnROr avaimun
aRivizhukkaik
kATTuginRa pEcchu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam