ஏப்ரல் 09, 2014

குறளின் குரல் - 720

9th Apr 2014

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
                        (குறள் 714: அவையறிதல் அதிகாரம்)

ஒளியார்முன் - அறிவில் மிக்கோரின் அவையிலே
ஒள்ளியராதல் - தம்மறிவின் சிறப்பை (தன்னடகத்தோடு) வெளிக்காட்டுவதும்
வெளியார்முன் - அறிவில்லாதாரே நிறைந்த அவையிலே
வான்சுதை வண்ணம் - வெண்சுண்ணாம்பைப் போல் (கற்றறிந்தும் அறிவைக் காட்டாதபடி)
கொளல் - இருந்து கொள்க

கற்றலின் ஒளிர்வு, கற்றோர் அவையிலே அவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவேண்டும். கல்லாத மூடரின் தலைமையில் கல்லாதவரே நிறைந்த அவையில், வெண்சுண்ணம் போல அவரினும் அறிவில்லாதவர்போல் தோற்றமும் கொள்வதே அவையறிதல் ஆகும் என்கிறார் வள்ளுவர். வெண்சுதையடிக்கப்பட்ட சுவர் வெற்றாக இருப்பதுபோல, அறிவே கல்லோருக்கு கறையாகத் தோன்றக்கூடும் என்பதால், அதனினும் வெண்மையாக இருத்தலையே இங்கு அவையறிதலுக்கு இலக்கணமாகக் கூறுகிறார்.

Transliteration:

oLiyArmun oLLiya rAdhal veLiyArmun
vAnsudhai vaNNam koLal

oLiyArmun – in the assembly of learned men
oLLiyarAdhal – one must exhibit his brilliance (of course with humility)
veLiyArmun – in the assembly of fools headed by a fool
vAnsudhai vaNNam – like white lime used for walls (as plain and white as can be)
koLal – one must be.

Scholarly speak should be exhibited before the learned assembly, that too in an acceptable way. In an assembly of illiterate fools, though learned, a peson must look as blank and white like the color or white lime used to paint walls. In a fools assembly even a little learning would appear as blemish on white. So, it is prudent to feign ignorance. So says vaLLuvar as the appropriate conduct in an assembly.

“A person aware of assembly etiquette must exhibit brilliance in the assembly of learned;
and also must feign ignorance in the assembly of fools as bright as white-lime as required”


இன்றெனது குறள்(கள்):

அறிவுளோர்முன் சான்றாண்மை வெண்சுண்ண வெற்றாய்
அறியாமை அஃதிலார்முன் கொள்

aRivuLOrmun sAnRANmai veNsuNNa veRRai
aRiyAmai ahdilArmun koL

கற்றோர்முன் கற்றோனாய் கல்லார்முன் கற்றிருந்தும்
வெற்றுவெண் சுண்ணம்போல் நில்

kaRROrmun kaRROnAi kallArmun kaRRirundhum
veRRuveN suNNambOl nil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...