ஏப்ரல் 05, 2014

குறளின் குரல் - 716

5th Apr 2014

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
                        (குறள் 710: குறிப்பறிதல் அதிகாரம்)

நுண்ணியம் என்பார் - நுண்ணறிவு கொண்டோர் என்பாரை
அளக்குங்கோல் - ஆள்வோரும் மற்றோரும் அளக்கின்ற அளவானது
காணுங்கால் - பார்த்தால்
கண்ணல்லது - அவருடைய கண் எத்துணை கூர்மையாகக் குறிப்பு அறிகிறது என்பதைத் தவிர
இல்லை பிற - வேறு எதுவும் இல்லை.

ஒருவரை நுண்ணிய அறிவுமிக்கவர் என்று பிறர் அளக்கும் அளவையானது எதுவென்று பார்த்தால், அவர் கண்ணால் குறிப்பறியும் திறனை வைத்தே. ஆள்வோர்கள் தங்களுக்கு கீழ் வேலைசெய்யும் அமைச்சர்கள் நுண்ணறிவாளர் என்று அறிய பயன்படுத்துகிற அளவை, அவர்கள் எந்த அளவுக்கு தம் கண்ணால் பிறர் காட்டும் குறிப்பை அறிகிறார்கள் என்பதே!

Transliteration:

nuNNiyam enbAr aLakkumkOl kANungAl
kaNNalladhu illai piRa

nuNNiyam enbAr – those who are known to have sharp intellect
aLakkumkOl – the scale that ruler use to measure their efficacy
kANungAl – if we see what it is
kaNNalladhu – how sharply they gauge others using their eyes
illai piRa – nothing else.

The scale that is used to measure the sharp intellect of someone is the ability to use their eyes to measure what’s in others mind. Rulers measure the efficacy of ministers that work for them by this scale of how sharp their eyes are in gauging people by the signs they see in others.

“The sharp intellect of someone is measured the scale of what
they see through others with their eyes; none other than that”


இன்றெனது குறள்:

கண்ணினும் காண்பதில்லை நுண்ணறிவை காட்டுங்கோல்
எண்ணுவோர் எண்ணமறி ய

kaNNInum kANbadhillai nuNNaRivai kATTungkOl
eNNuvOr eNNamaRi ya

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...