25th Mar 2014
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
(குறள் 699: மன்னரைச் சேர்ந்தொழுகல் அதிகாரம்)
கொளப்பட்டேம் - நம்மை
அரசன் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டான்
என்றெண்ணிக் - என்று
தவறாக எண்ணி
கொள்ளாத செய்யார் - அரசற்கு
ஏற்பிலாதன செய்யமாட்டார்
துளக்கற்ற - துளக்கு
அற்ற - அசைவில்லாத
காட்சியவர் - பார்வையினை
உடையவர்!
அசைவிலா தெளிந்த பார்வையும்,
அறிவையும் உடையவர்கள் ஆள்வோர் தம்மை முழுமையாக நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று
தவறாக எண்ணி, அவர்க்கு ஏற்பிலாதன செய்யமாட்டார், என்பதே இக்குறளின் கருத்து. எவ்வளவுதான்
நெருக்கம் இருந்தாலும், ஒரு கை அளவு தூரத்தையாவது பதவியிலுள்ளவர்களுடன் ஒருவர் காக்கவேண்டும்
என்பதே அடிக்கோடிட்ட கருத்து.
Transliteration:
koLappaTTEm enReNNik koLLAdha seyyAr
thuLakkaRRa kATchi yavar
koLappaTTEm – That the ruler has accepted “him” as a confidante
enReNNik – thinking as such
koLLAdha seyyAr – will never indulge in anything that the
ruler does not like!
thuLakkaRRa – so, stable and clear they are
kATchiyavar – in senses and intellect
A person who has
clarity of mind and is stable in intellect, will never do what the ruler does
not desire, however much he has been accepted as a close confidante, says this
verse. However close a person to a ruler is, maintaining an arms length is
highly recommended for everyone – is the underlined thought of this verse!
“A stable minded person will never take a
ruler’s acceptance
to do anything
undesirable interpreting as faith of confidance”
இன்றெனது
குறள்(கள்):
அசைவிலா நெஞ்சினர் ஏற்றானென் றெண்ணி
நசையறு செய்யார்வேந் தற்கு
asaivilA nenjinar ERRAnen ReNNi
nasaiyaRu seyyAvEn dhaRku
தெளிவுளோர் ஆள்பவன் ஏற்றானென் றெண்ணி
இளியுற, ஏற்பிலசெய் யார்.
theLivuLOr
ALbavan ERRAnen ReNNi
iLiyuRa,
ERpilasey yAr.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam