மார்ச் 11, 2014

குறளின் குரல் - 691

11th Mar 2014

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
                        (குறள் 685: தூது அதிகாரம்)

தொகச்சொல்லித் - சொல்வதைச் கோர்வையாக, கருத்துகளைத் தொகுத்து, ஆனால் சுருங்கச் சொல்லி
தூவாத நீக்கி - எவை வேண்டாதவையோ அவற்றை பேசாது நீக்கி
நகச்சொல்லி - மகிழும்படியான சொற்களையே சொல்லி
நன்றி பயப்பதாம் - ஏது கருதி, யாவருக்காகத் தூதோ, அவருக்கு, அதனால் நன்மை தருவோனே
தூது - தூதன் எனப்படுவோன்.

இக்குறளில் தூது சொல்லும் முறை, அதனால் உறுபயன் இவற்றைச் சொல்லுகிறார் வள்ளுவர்.  தூதன் என்போன் கருத்துவாரியாகத் தொகுத்து, ஆயினும் சுருங்கச் சொல்லி விளக்கவேண்டும்; சொற்களை விரயம் செய்யக்கூடாது; எவற்றைச் சொல்லலாம், எவற்றைச் சொல்லக்கூடாது என்பதை அறிந்து, சொல்லக்கூடாதவற்றை பேசாது நீங்கி, எல்லோரும் மகிழும்படியாவும் பேசவேண்டும்; யாருக்காக, ஏது கருதி தூது செல்லப்பட்டதோ, சொல்லப்பட்டதோ, அதனுடைய உறுபயனாய் நன்மையை அவருக்குத்  தரச்செய்வோனே தூதுவன் எனப்படுவோன்.

அனுமனைச் சொல்லின் சொல்வன் என்று சொல்லி, அவன் சுருங்கப் பேசும் திறனுக்கு, “கண்டேன் சீதையை” என்று அவன் தூது முடிந்து வந்து இராமனைக் கண்டுச் சொல்வதையே எல்லோரும் கூறூகிறார்கள். இது அவன் தூதின் பெருமையைக் காட்டுவதல்ல.  அவன் தூது சொன்னதை கம்ப இராமாயணம் பதினேழு பாடல்களில் கூறுகிறது.

கம்பராமாயணம் பிணி வீட்டுப்படலத்தில் தூது செல்லும் அனுமன், இராவணனை வென்ற வாலியின் பெருமை, அவன் இராமனால் கொல்லப்பட்டது என்று பலவும் சொல்லி, அவன் செய்த தீச்செயலால் எப்படி அவன் அழிய நேரும் என்று விளக்கி, சீதையை ஏன் அவன் இராமனிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி முடிக்கிறான்.

இதில் சுருக்கமாகச் சொல்வதைவிட எவற்றைச் சொல்லவேண்டுமோ, எவ்வாறு சொல்லவேண்டுமோ, இராவணன் அவன் செய்யவேண்டிய முடிவுக்கு என்னவெல்லாம் கேட்கவேண்டுமோ அவற்றையெல்லாம் சொல்லுகிறான். மகாபாரதக்கண்ணனின் தூதும் இதைப்போன்றதே. சுருங்கச் சொல்வதே, தொகுத்து முறைபடச் சொல்வதே தேவையாகும்.

எல்லோரும் மகிழச் சொல்வது என்பது விரும்பத்தக்கதே ஆயினும், அது எப்போதும் நடக்கக் கூடியதல்ல. இதிகாசக் காட்சிகளாயினும், பாரிக்காய் ஔவையார் தூது சென்ற சரித்திர காட்சிகளாயினும் இது நடந்ததில்லை; இன்றும் நடப்பதில்லை.

Transliteration:

Thogachchollith thUvAdha nIkki  nagachcholli
nanRi payappadhAm thUdhu


Thogachchollith – what is said must be topically compiled, in order, but with brevity
thUvAdha nIkki  - removing what is not desired to be said
nagachcholli – making both sides happy (which is infact difficult most of the times)
nanRi payappadhAm  - yield good to the side for which emissary is working
thUdhu  one who does so is known as a capable emissary

In this verse, vaLLuvar explains a bit more about articulating ways of an emissary and the good it shall yield. An emissary must be able to compile what needs to be said, yet be brief in how he says it. Words must never be wasted. He shall know what to say and what not to say; must do away with avoidable in what he says, bring happiness to the people involved and yield good to at least the person for whom it was carried out.

Hamuman is priased as the man of “choicest words” and his words “kaNDEn sIthaiyai” (Saw Seetha!) are often cited to exemplify his articulation. This of course is not to glorify his work as emissary, but to show how he handled a situation to alleviate the fears of worrying Rama by saying just two words, in a specific order to convey effectively, and put Rama at ease. The episode of Hanuman going to Ravana as emissary is described in seventeen verses in Kamba Ramayanam.

In “piNi vITTup paDalam” of Kamba Ramayanam, Hanuman reminds Ravana of how he was earlier won by mighty Vali, how the same Vali was killed by Rama to help Sugreeva, and further how Ravana’s  abduction of Seetha was not proper on Ravana’s part etc., to force Ravana to handover Seetha to Rama. In doing so, he says what needs to be said, in a specific order of points for Ravana to make an amicable decision.

Though it is an ideal thought to make everyone in the process happy, it is a far fetched dream, most of the times – amply proved by the epics and also even in the episode of Auvayyar going as an emissary for the munificent patron king Pari to the three kings that wanted to covet Pari’s daughter.

“An orderly articulation, devoid of unnecessary words, bringing happiness
 and yielding good as desired, are the ways of an emissary of greatness”


இன்றெனது குறள்:

சொல்தொகுத்து வேண்டாச்சொல் நீக்கி மகிழ்வுதரச்
சொல்லிநன்மை செய்வதே தூது

solthoguththu vENDAchchol nIkki magizhvuthara
sollinanmai seivadhE thUdu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...