மார்ச் 03, 2014

குறளின் குரல் - 683

3rd Mar 2014

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
                        (குறள் 677: வினைசெயல்வகை அதிகாரம்)

செய்வினை - செய்யப்படுகிற வினையை
செய்வான் - செய்பவன்
செயன்முறை  - அதை செய்யும் வழியானது
அவ்வினை - அச்செயலைப் பற்றி
உள்ளறிவான் - நன்கு அறிந்தவனது
உள்ளம் - எண்ணத்தை, அச்செயலைப் பற்றிய அனுபவக் கருத்துக்களை
கொளல் - அறிந்து கொள்ளுதல்

ஒரு செயலில் இறங்குமுன், அச்செயலை ஏற்கனவே செய்து அறிந்து தேர்ந்த ஒருவரின் அவ்வினைத் தொடர்பான நெடுங்கால அனுபவத்தினை தனக்குத் துணையாகக் கொள்ளவேண்டும். அதுவே அச்செயலை எத்தடையுமின்றி முடிக்க வழியாம். பிறர் அனுபவத்தை தனக்குப் பாடமாகக் கொள்பவரே வினையாற்றலை தெளிவாகச் செய்பவர். செய்யும் செயலைப் புரிந்துகொண்டு செய்வதே அறிவுடமை. எளிய குறள்; எல்லோரும் அறிவில் நிறுத்தவேண்டிய கருத்து.

Transliteration:

Seivinai seyvAn seyanmuRai avvinai
uLLaRivAn uLLam koLal

Seivinai – for the task that is done
seyvAn – one who does it
seyanmuRai – the procedure, process to do that is to know
avvinai – about the task
uLLaRivAn – from the person who has knowledge of innerworkings of that task
uLLam – his experience
koLal – to be taken as guiding light

Before getting into doing a project or a task, it is better to take the experience of someone who has done it before as guiding light; Only such guidance can help the task to be completed successfully. Only those who take others experience wil function with clarity. Such execution with understanding is intellect. A very simple verse, but an important one to keep in mind by everyone!

“Before venturing into executing any project, prudent it is get
 The experience of people on similar projects as guiding light”


இன்றெனது குறள்:

செயல்தேர்ந்தான் தேர்ந்ததை கற்றறிந்து கொள்ளல்
செயல்முறையாம் செய்வினைக் கு

seyalthErndAn thErndadai kaRRaRindu koLLal
seyalmuRaiyAm seivinaik ku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...