பிப்ரவரி 11, 2014

குறளின் குரல் - 663

11th Feb 2014

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
                        (குறள் 657: வினைத்தூய்மை அதிகாரம்)

பழி - இழிவைத் தரக்கூடிய பழியானது
மலைந்து - மலை என்பது பெரியது; மலைந்து என்ற சொல் இல்லை. மலிந்து மருவியிருக்கலாம்
எய்திய - அடைந்த
ஆக்கத்தின் - செல்வத்தை விட
சான்றோர் - கல்வியில் பெரியார்
கழி நல்குரவே - அனுபவிக்கும் மிக்கதாம் வறுமையே
தலை - உயர்ந்தது

சான்றோர் என்றது, அமைச்சர்களையே. பழி பெருகி, அது செல்வத்தையே தந்தாலும், அச்செல்வத்தைவிட, தாம் அனுபவிக்கும் மிகுந்த வறுமையே மேலென்பர் சான்றோராகிய அமைச்சர்கள். இக்குறள் பயன்படுத்தும் சொல்லாகிய “மலைந்து” என்ற சொல் அகராதிகளில் இல்லாத ஒரு சொல். படிமப் பிழையினால் மலிந்து என்பது மலைந்து என்று ஆகியிருக்கலாம். மலிந்து என்பது பெருகி என்ற பொருளாகும். மலைந்து என்ற சொல்லை, மலை போல என்பதை குறிக்கும் சொல்லாகக் கொண்டால், அதுவும் மலையளவு என்று பெரியதையே குறிக்கும்.

கீழ்வரும் பழமொழிப் பாடல் இக்குறளின் கருத்தையொட்டிருப்பதைக் காணலாம்.

சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப்

பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின்

மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின்

முதுநெய்தீ(து) ஆகலோ இல்.

Transliteration:

Pazhimalaindu eidhiya Akkaththin sAnROr
Kazhinal guravE thalai

Pazhi – with the shameful blame
malaindu – may indicate the bigness like a mountain or simply “malindu” – in excess
eidhiya - obtained
Akkaththin – than such wealth
sAnROr – the learned (ministers)
Kazhi nalguravE – poverty in excess
Thalai – is better

Though the shameful blame in excess brings wealth, the learned will not take it and will take povery in excess in stead as higher in status. The word “malaindhu” is not given in any known Tamil dictionary. Could be  a word coined out of “malai” indicating a mountain and thus meaning a mountainous proportion. Or the word could have “malindu” which means abundance also. 

A pazhamozhi verse echoes the same thought saying better than the small minded one earning abundant wealth, the poverty of learned is better.

“Learned would think even poverty is better and is of higher state
 in comparison to the big wealth, with shameful means brought”


இன்றெனது குறள்(கள்):

இழிந்தெய்தும் செல்வத்தின் இல்லா வறுமை
பழியஞ்சும் சான்றோர்க்கு மேல்

izhindeidum selvaththin illA vaRumai
pazhiyanjum sAnROrkku mEl

சான்றோர்க்கு மிக்க வறுமையும் மேல்பழியில்
ஊன்றிபெற்ற செல்வத்தி னும்

sAnROrkku mikka vaRUmaiyum mElpazhiyil
UnRippeRRa selvaththinum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...