டிசம்பர் 18, 2013

குறளின் குரல் - 610

19th Dec 2013

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.          
                            (குறள் 603: மடியின்மை அதிகாரம்)

மடி  - சோம்பலில்
மடிக்கொண்டு ஒழுகும் - அளவிறந்த சோம்பலினால், தள்ள முடியாது, கைவிடாமல் கொண்டிருக்கும்
பேதை - அறிவிலியால்
பிறந்த குடி - அவன் பிறந்த குடியானது
மடியும் - அழிந்து சாகும்
தன்னினும் முந்து - அவன் அழிவதற்கு முன்பாக.

“மடிமடி” என்று சொல்லி அளவு மிகுந்த சோம்பலினால், சோம்பலைத் தள்ளமுடியாமல், சோம்பி வாழ்கின்ற ஒருவன் பிறந்த குடியானது, அவனுடைய சோம்பலினால், அவன் அழிவது உறுதியே ஆனாலும், அவனுக்கு முன்பாகவே அழிந்துவிடும் என்னும் கருத்தைக் கூறுகிறது இக்குறள். மடிமடிக் கொண்டு என்பதை, சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு என்று பரிமேலழகர் உரை செய்துள்ளார்.

ஒருவனுக்கு தாம் சோம்பியிருக்கிறோம் என்பதை பலர் உணர்த்தியும், அதை தள்ளவும், கைவிடவும் முடியாத அளவுக்கு சோம்பியிருக்கு அறிவிலி என்பதை இக்குறள் சொல்லுகிறது, முதல் வரியில். சோம்பலினால் ஒருவன் கெடுவதும், அவனால் அவன் குடி கெடுவதும் நடப்பதுதான். அளவிறந்து சோம்பித்திரிபவர்களால், அவர்களுடைய குடும்பத்துக்கு, சுமை, அவமானம், பழி எல்லாம் வந்து சேரும் என்பது, அதனால் குன்றி அவர்கள் சாவார்கள் என்றும், உள்ளுரைப் பொருளாகக் கொள்ளவேண்டும்.

Transliteration:

Madimadik koNDozhugum pEdai piRanda
kuDimaDiyum thanninum mundu

Madi – having laziness
madik koND(u) ozhugum being excessively lazy and inactive to get rid of sluggishness
pEdai – fool
piRanda kuDi – the family he is born into
maDiyum – will perish
thanninum mundu – even before he is doomed

The use of  “maDimaDi” in this verse has been cleverly employed to imply, excessive laziness to get rid of laziness by somebody. Such excessively lazy fools family will perish even before him. The verse seem to say something as a matter of fact invoking a posture, “so what”; and also a question as to why that should be the case. Why somebody’s laziness should let his family perish?

The implication is such fools are only a burden, bring shame, blame etc., to their families to make them perish . After all which family would want to live in perpetual shame, blame?

 “Being excessively lazy to be rid of laziness, the family
 of a fool will die even before him burdened, immensely”


இன்றெனது குறள்:

சோம்பலினால் சோம்பலைத் தள்ளா அறிவிலியால்
கூம்புமவர் இல்லவர்க்கு முன்

sOmbalinAl sOmbalaith thaLLA aRiviliyAl
kUmbumavar illavarkku mun

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...