8th Dec 2013
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
(குறள் 592: ஊக்கமுடைமை அதிகாரம்)
உள்ளம் உடைமை - ஊக்கமாம் பண்பு உள்ளத்துருவாகி நிலைபெறுவதால்,
அத்தகு உள்ளமே
உடைமை - ஒருவருக்கு உண்மையான உடைமை, செல்வம்
பொருளுடைமை - மற்ற செல்வம் கொண்டிருந்தாலும்
நில்லாது - அவையெல்லாம் நிலையில்லாதவை;
ஒருவரிடமும் தங்காதாவை
நீங்கி விடும் - ஊக்கமின்மையால், தேங்கும்,
தேய்ந்து ஓடிவிடும்
ஒருவரிடம் உள்ள உண்மையான
செல்வமென்பது, அவருக்கு உள்ள ஊக்கமுடைமையே. அது இல்லாதவர்க்கு, அவரிடம் உள்ள செல்வமும்
தங்காமல், தேய்ந்து நீங்கிவிடும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.
உள்ளுரைப் பொருளாக, உள்ளமென்பது
ஆத்துமத் தொடர்பினதாகையால், அது நிலைபெறுதலையும், பொருளை உடம்பாக உருவகித்து, அதன்
அழியும் தன்மையும் கூறி செல்வத்தின் நிலையாமையையும் ஒருங்கே கூறுகிறார் வள்ளுவர். அறத்துப்பாலின்
நிலையாமை அதிகாரத்தில் “அற்கா இயல்பிற்று செல்வம்” (333) என்று வள்ளுவர் சொல்லியிருப்பதும்
செல்வத்தின் நிலையாமை பற்றிதானே. இங்கு அது நில்லாமைக்கான காரணமொன்றையும் கூறுகிறார்..
சீவக சிந்தாமணி வரிகள்,
“உள்ளமுடையான் முயற்சி செய்ய ஒருநாளே வெள்ளநிதி வீழும் விளையாததனின் இல்லை” என்று உள்ளமுடைத்தலை
ஊக்கமுடைத்தல் என்னும் பொருளிலே சொல்கின்றன. தவிர வெள்ளமனைய செல்வமும் வீழ்ந்துபடும்
என்று சொல்வது இக்குறளின் கருத்தோடு ஒட்டி வருதலைக் காட்டுகிறது. பழமொழிப் பாடலொன்றும்,
“அருவிலை மான்கலனும்
ஆன்ற பொருளும்
திருவுடைய ராயின் திரிந்தும்
வருமால்
பெருவரை நாட பிரிவின்
றதானால்
திருவினும் திட்பமே நன்று” - [ பழமொழி 136]
திட்பம் என்பது ஊக்கமுடையாகும்.
அது ஒருவரை விட்டு நீங்காத ஒன்றாகும், அதனால் அது செல்வத்தைக்காட்டிலும் நன்றாம்.
Transliteration:
uLLam uDaimai uDaimai poruLUDaimai
nillAdu nIngi viDum
uLLam uDaimai – zealous and energetic is born within, stays
and hece such mind
uDaimai – is the true wealth of a person
poruLUDaimai – other physical manifestations of wealth
nillAdu – will not stay
nIngi viDum – and will vanish in time.
A person’s true
wealth is the zeal and energy they have, that springs within from a soul and a
mind. Wealth of persons that lack zeal and the sprit, will only sprint and not
stay as they inherently lack the ability to keep and multiply such wealth. For
those govern a state, it is an imperative to have that zest to invest and
expand for the economic prosperity of their state. Without that, they may lose
it all in time to their enemies external and internal.
Earlier we have
seen in the canto on ethics, in the chapter of “impermananc” (verse 333)
vaLLuvar saying about the “unstaying nature of physical wealth (ARkA iyalbiRRu
selvam). Subtly once again reminds the thought of impermanence of the physical
body - that whatever is connected to soul stays and the physical body that is
construed as wealth as one that perishes or vanishes.
References in
Cheevaga ChinthAmaNi, and Pazhamozhi nAnURu express similar thoughts. Cheevagan ChitAmani says, “The flood of wealth may even fall, but it
takes just a day for someone to with zeal to materialize anything; there is
none that is impossible for such people”.
Pazhamozhi poem
says, “There is none more a wealth than
zeal as that does not leave a person with energy”.
“The real wealth to have is a zelous,
energetic mind
Material wealth will vanish in time,
impossible to bind”
இன்றெனது குறள்(கள்):
உடைமையென்ப ஊக்கம்
ஒருவருக்கு - ஓடும்
உடைத்தசெல்வம் அஃதிலார்க் கு
uDaimaiyenba
Ukkam oruvarukku – Odum
uDaiththaselvam
ahdilArk ku
ஊக்கவுள்ளம் ஒன்றே உறுசெல்வம் - ஓடுமற்ற
ஆக்கமென்று கொண்டதெல் லாம்
UkkavuLLam onRE uRuselvam – OdumaRRa
AkkamenRu koNDadel lAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam