டிசம்பர் 04, 2013

குறளின் குரல் - 596

5th Dec 2013

ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
                            (குறள் 589: ஒற்றாடல் அதிகாரம்)

ஒற்றொற்று - ஒற்று ஒற்று - ஓரொற்றர் தம்மோடு பணிபுரியும் பிற ஒற்றரை கூட
உணராமை - அறிந்துகொள்ளா வண்ணம் ஒற்றர் படையை
ஆள்க - ஒருவர் ஆள வேண்டும்
உடன்மூவர் - ஒரு பொருள் பற்றி தெளிந்து கொள்ள மூன்று ஒற்றர்களை தனித்தனியே ஏவி (ஒருவருக்கொருவர் அறியாமல்)
சொற்றொக்க - சொல் ஒக்க - அவர்கள் தனித்தனியே கண்டவற்றை ஒப்பு நோக்கி,
தேறப்படும் - அப்பொருளினைப்பற்றிய உண்மையினை உணர்ந்து கொள்ளப்படும்.

ஒற்றர் படையை ஆள்கையிலே, ஒர் ஒற்றர் மற்றோர் ஒற்றைரை அறிந்திலாத வண்ணம் ஆளவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஒற்றர் படையினரின் பணியில் குறைபாடுகளும் இல்லாமலிருக்கும். அவ்வாறு இருக்கும் போது, கூட்டுச் சதிகளும் நிகழாது, ஒற்றர் தம் தொழிலிலும் முனைப்புடன் இருப்பர். ஒரு பொருளைப் பற்றி உளவறிய ஒற்றரை பணிக்கையில், குறைந்தது மூவரையாது ஒருவரை ஒருவர் அறியாது பணித்து, மூவர் சொல்லும் உளவுத்தகவல்களும் ஒத்திருந்தாலே அப்பொருளைப் பற்றிய உண்மையினில் தெளிவு பெற முடியும் - இது இக்குறளின் கருத்து.

பெருங்கதையும், சீவக சிந்தாமணியும் ஒற்றர்களை ஆள்வது பற்றி விரிவாகவே பேசுகின்றன. இக்குறளின் கருத்தை ஒட்டி அவற்றிலுள்ள பாடல் வரிகள்:

“அறிந்தஒற் றாளர் செறிந்தனர் உரைப்ப
 ஒற்று மாக்களை ஒற்றரின் ஆயா
முன்தனக் குரைத்த மூவர் வாயவும்
ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி” ( பெருங்கதை: 3.25: 47-50)

“ஒன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந்
தின்றி தாற் பட்டதென்றியம்புகின் றார்களே” (சீவக 1829)

குறிப்பாக இரண்டு பாடலுமே மூன்று ஒற்றர்கள் கண்டு சொல்லியதை ஒப்பு நோக்குதலைக் கூறுவதைக் காணாலாம்.  மேலும் குமர குருபர சுவாமிகளின் பிரபந்தத் திரட்டிலே வருமொரு பாடல் வரியாம்  வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி” (ஒற்றர் மூலம் அறியப்பட்டுப் பொருளால் ஒத்த உண்மைச் சொற்களைப் போல) என்பது எண்ணைக் குறிப்பிடாது ஒத்த கருத்தைக் கூறுவதைக் காணலாம்.

Transliteration:

oRRoR RuNarAmai Alga uDanmUvar
soRRokkath thERap paDum

oRRu – A spy
oRRu uNarAmai – not knowing another working for the same ruler
Alga – such should be the management of spies by a ruler
uDanmUvar – When trying find truth on anything, commsion three independent spies
soRRokkath – and compare their independent finding as they say
thERappaDum – only if they corroborate then understand the truth in it

When managing spies, a ruler must make sure that each spy does not know the existence of the other so that the secrecy of the operations is maintained well and his purpose of having spies is fulfilled.  When trying to find the truth behind something, typically three spies must be employed to independently, unknown to each other work on the same. The information found through them must be corroborated to assess the veracity of the information to act on it. Thus says the verse.

It is interesting two of the five Tamil Epics Perungadai and Cheevaga ChinthaamaNi have verses that say the same thing and agree on sending three independent spies to verify the truth about a thing. Perhaps, they all including vaLLuvar captured the existing practice of their times. Later poet, Kumargurpara Swamigal also says in his “prabandath thirattu”, a similar thought.

“Rule such that spies working under, to each other, are unknown;
 Use three spies for veracity to safeguard the interests of throne”


இன்றெனது குறள்:

பிறவொற்றை ஓரொற்றும் காணாதாள் - மூவர்
திறமதிலே ஒப்பவொன்றைக் கொள்

piRavoRRai OroRRum kANAdAL mUvar
thiramadilE oppavonRaik koL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...