நவம்பர் 16, 2013

குறளின் குரல் - 577


16th Nov 2013

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
                         (குறள் 570: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

கல்லார்ப் - கல்லாத மூடரை
பிணிக்கும் - தமக்கு அணுக்கமாக ஆலோசனை வழங்கும் பணியிலே கொள்ளும்
கடுங்கோல் - கொடுங்கோலர்
அதுவல்லது - அதைப் போல் அல்லது
இல்லை - வேறு எதுவுமில்லை
நிலக்குப் - இப்பூமியின்
பொறை - பொறுமைக்கு எல்லை.

நிலமகளைப் போல் பொறுமைமிக்க தொன்றுமில்லை. ஏனெனில் அஞ்சத்தக்க வகையிலே ஆளுகின்ற கடுங்கோலரைத் தாங்குகின்றதல்லவா? அதுவும் கூட அதன் பொறுமைக்குப் பெருமை சேர்ப்பதல்ல.  கல்லாத மூடரை தமக்கு அணுக்கமாக, தமக்கு ஆலோசனை வழங்க வைத்துகொள்ளும் கொடுங்கோலனைத் தாங்குவதவிட பொறுமையைச் சோதிப்பது ஏதேனும் உண்டா நிலமகளுக்கு? ஒரு நையாண்டிக் கேள்வியைக் குறளில் தொக்கவிட்டு, மூடரைத் துணைகொண்ட கொடுங்கோலனின் அஞ்சத்தக்க ஆட்சியை உணர்த்தி, அதன்மூலம் அத்தகு ஆட்சிகூடாது என்பதை அறிவுறுத்துகிறார்.

Transliteration:
kallArp piNikkum kaDungkOl aduvalladu
illai nilakkup poRai

kallArp – to have uneducated fools
piNikkum – as their advisory or ministers close to them
kaDungkOl – for a despotic ruler
aduvalladu – other than that
illai – there is none
nilakkup – for this earth
poRai – more testing its patience

There is none other than earth that is more patient as it bears all of us with our follies and atrocious things that we do to it. After all it bears despotic rulers across its vast landscape time and again.  Even that’s not the limit of its patience. When such despotic rulers have unducated fools as their advisory, is there anything more to bear as testimony to earth’s patience.

vaLLuvar has probably employed a sarcastic tone to underline the fearful nature of such rule. 

“None compares to underscore the limit of earths tolerance
that bears tyrants who have as advisory, fools of irreverence”


இன்றெனது குறள்:
கல்லாரைத் தம்முறவாய் கொள்கொடுங்கோல் தாங்குதலின்
ஒல்லையில்லை ஒன்றுமுல குக்கு (ஒல்லை - துன்பம்)

kallAraith thammuRavAi koLkoDungkOl thAngudalin
ollaiyillai onRumula gukku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...