நவம்பர் 13, 2013

குறளின் குரல் - 574

13th Nov 2013

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
                         (குறள் 567: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

கடுமொழியும் - கடுமையான சொற்களையும்
கை இகந்த - அளவுக்கு அதிகமாக அரசன் கையினால் வழங்கப்படும்
தண்டமும் - தண்டனையும்
வேந்தன் - அரசனின்
அடு முரண் - அருகிலிருந்தே பகையாய் இருந்து
தேய்க்கும் - தேய்த்து, சிறுகச் சிறுகக் குறைத்து அழிக்கின்ற
அரம் - அரமென்னும் அறுக்கும் கருவி

ஆள்வோன் குடிகளிடம் கடுமையான மொழியும், குற்றத்தின் அளவுக்கு மிஞ்சிய தண்டனையும் கொடுத்து அஞ்சும்படியாக இருந்தால் அவனது அத்தகைய பண்பற்ற செயல்களே அவனருகிலேயே இருந்து பகையாய் அவனை சிறுகச் சிறுகக் குறைத்து அழிக்கின்ற அரமாகிய கருவியாக இருக்கும்.

இக்குறளில் “வேந்தன்” என்பதை “வேந்தனின்” அல்லது “வேந்தனை” என்று கூட்டிப் பொருள் கொண்டாலும், அடு முரண், தேய்க்கும் அரம் என்பவற்றை அருகிலிருக்கும் பகையென்பதாகவும், அழித்துக் குறைக்கும் அரமென்னும் கருவியென்றும் கொள்ளலாம்.

உரையாசிரியர்கள் எல்லோரும் இக்குறளிலும் தடுமாறியிருக்கிறார்கள். ஒரு மேம்போக்கான உரையைத் தந்திருக்கிறார்கள், அதுவும் பரிமேலழகர் உரையை மூலமாகக் கொண்டு, பரிமேலழகர், “வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்” என்பதற்கு, “அரசனது பகை வெல்லுதற்கு ஏற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்” என்பார்.  இது முழுவதுமாக அவராக உருவகித்துக்கொண்ட பொருளாகத்தான் இருக்கிறது.

வேந்தை அடியோடு அறுக்கும் அரம்” அல்லது, “வேந்தின் அடியைச் சாய்க்கும் அரம்” என்று கொண்டால் பொருந்தி வருகிறது. இன்றைய குறளாக்கத்திலும் அவ்வாறே செய்யப்பட்டுள்ளது.

Transliteration:
kaDumozhiyum kaiyiganda danDamum vEndan
aDumuraN tEikkum aram
kaDumozhiyum – Ruler of harsh words
kai yiganda – more than needed
danDamum – punishing for a crime
vEndan – a ruler of such despotic ways
aDu muraN – enemies which are within, not external
tEikkum – that will diminish by sawing the rulers standing
aram - saw

If a ruler is fearful for his subjects with harsh words and giving punishment more severe than the crime itself, his despotic acts will becomes enemies within and diminish him slowly to eventually destroy him. This verse is also another example of simply beating around the bush by saying the same with different word combinations.

The structure of the verse itself is misleading and confusing; it is also seen through the commentary of various authors, especially that of Parimelazhagar. The word “vEndan” can be interpreted as “vEndanai” or “vEndanin” meaning “to the ruler” or “that of ruler”.  The words “aDu muraN” and “thEikku aram” mean the enemies living with or within and “destroying saw”.

The commentaries invariably for this verse of superficial and just based on what ParimElazhagar has done.  Parimelazhagars’ interpretation of  “The instrument that will decay the iron used to conquer the enemies” seems completely construed and fanciful one. There is none in the verse implying that. vaLLuvar could have simply said “the saw that saws the base of a tree” to imply the destruction of foundation. 

“The rulers harsh words and the excessive punishments
 are like “the saw” that ruin the base of his establishment”

இன்றெனது குறள்(கள்):

கடிமொழியும் எல்லையில் தண்டனையும் வேந்தின்

அடிமரம் சாய்க்கும் அரம்

kaDimozhiyum ellaiyil taNDanaiyum vEndin
aDimaram sAikkum aram

கடிமொழியும் கங்கிலா தண்டனையும் வேந்தை
அடியோ டறுக்கும் அரம்  (கங்கு - எல்லை)

kaDimozhiyum kangil taNDanaiyum vEndai
aDiyO daRukku aram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...