அக்டோபர் 28, 2013

குறளின் குரல் - 558


56: (Tyrannical Rule - கொடுங்கோன்மை)

[After the chapter on, righteous rule, vaLLuvar devotes the immediately next chapter discussing the despotic governance, of rulers wielding power oppressively. In this chapter vaLLuvar defines, the tyrannical ruler, rule and the effects of such a rule, the losses such a ruler will incur; how citizens will suffer, how seasons fail in such a rule etc. As always, after a detailed discussion on the benefits of doing something good, the ill-effects of not doing the same have to be said, to drive home the point to the benefactors, the ruling class. Better than ParimElazhagar, maNakkuDavar has done a comprehensive brief on this chapter.  He says, a tyrannical rule, is that which is not ruled by sceptere, not being compassionate to citizens, not ruling to save people from misery, punishing wrongly, doing things which are not ethical and improper, begging or demanding the citizens and hence depriving them of their due inheritance or earnings.]

28th Oct 2013

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
                         (குறள் 551: கொடுங்கோன்மை அதிகாரம்)

தமிழிலே:
கொலை மேற்கொண்டாரிற் - அருளற்று பிறரைக் கொலைசெய்யும் கொலைத்தொழிலோரினும்
கொடிதே - கொடியதாம்
அலை மேற்கொண்டு - பொருட்களை குடிகளிடமிருந்து பறிப்பதை ஆளும் உரிமையிலே
அல்லவை - முறையற்ற வழிகளில்
செய்தொழுகும் வேந்து - செய்து அதையே தன் சுயநல அறமாக வாழும் அரசன்

தனக்கு வழிவழியாக வந்த அல்லது மக்களால் வழங்கப்பட்ட ஆளும் பொறுப்பை தவறாகப் பயன்படுத்தி, முறையற்ற வழிகளில் அதிகாரத்தினால்  மக்களைத் துன்புறுத்தி, அவர்களிடமிருந்து பணமும் பொருளும் பறிக்கும் அரசன், ஆள்வோன், கொலையையே தொழிலாகக் கொண்ட கொடியவர்களையும் விட கொடியன் என்பதே இவ்வதிகாரத்தின் முதற்குறளில் வள்ளுவர் சொல்லுவது.

இக்குறளில் “வேந்து” என்று அஃறிணைப் பொருளாகக் ஆள்வோனைக் குறித்ததால், அக்கொடியனை உலகம் எவ்வாறு காணும் என்பதும் உணர்த்துகிறார் வள்ளுவர். அதனால் கொலை மேற்கொண்டோரை உயர்திணையாகச் சொல்லி, அவர் செய்வதிலும் ஆள்வோனின் கொடுங்கோன்மைக்காக அவனையே “கொடிது” என்று அஃறிணையாகக் குறித்தலையும் காண்க.

Transliteration:

kolaimERkoN DAriR koDidE alaimERkoNDu
allavai seidozhugum vEndu

kolai mERkoNDAriR – worse than the professional killers with no compassion
koDidE – cruel is
alai mERkoNDu – a ruler that harasses citizens always
allavai – injustice
seidozhugum vEndu – the ruler, by doing such (injustice)

The right to rule that has come to power through inheritance or given by the people, when misused by the tyrannical ruler towards citizens that harasses them in various ways, such a ruler is worse than a murderer that does it as a profession. So says vaLLvar in this first of verse of this chapter.

The usage of work “veNdhu” is typically used to mean lowly beings other than human beings. By using this word, vaLLuvar implies, how citizens would view such a ruler. This is doubly made sure by calling such a ruler as “koDidhu”. Here the word is used for both the rulers and his despotic rule.

“A despotic ruler who does injustice is worse in cruelty
  than a professional murderer that is appallingly guilty”

இன்றெனது குறள்(கள்):
பொருளுக்காய் துன்புசெய் தாள்வோர் கொடியர்
அருளில் கொலைஞரி னும்

poruLukkAi thunbusei dALvOr koDiyar
aruLil kolainjari num

தன்குடிக்குத் துன்புசெய் தாள்வோன் கொடுங்காலன்
வன்கொலைச் செய்வோனி னும்

thankuDikkuth thunbusei dALvOn koDungkAlan
vankolaich seivOni num

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...