அக்டோபர் 25, 2013

குறளின் குரல் - 555


25th Oct 2013

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
                         (குறள் 548: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:
eNpadaththAn OrA muRaiseyyA mannavan
thaNpadaththAn thanE keDum

eNpadaththAn – Being easy to approach (is not suitable for a king)
OrA - without thinking
muRai seyyA – not doing what is just rule for citizens
mannavan – a ruler, king
thaNpadaththAn – will face disgrace
thanE keDum – and on his own will perish.

A king who lets himself for easy manipulation by being accessible to everyone without discretion, unthinking, and does not give a just rule to citizens will disgrace himself and perish.

This verse seems to depict the story of PANDiyan Nedunchezhiyan of SilappadikAram. Swayed by the malicious words of goldsmith, not inquiring into the case in detail, he orderd Kovalan to be killed assuming Kovalan to be guilty of stealing his wifes’ anklet; later realizing his folly through Kannagi’s argument, he ceased to have his throne and died of his guilt of bent scepter.

The word “eNpadaththAn” means being simple and easy to approach. This attribute has been praised by vaLLuvar in the chapter of “Ruler’s glory” (verse 386). There he said, if the ruler is of simple demeanor, and does not have harsh words for others, such a ruler would be praised and celebrated even by celestials.  A similar thought has been espoused in “PuRanAnURu” also using the same word “eNpadam”.

When such is the case, in the current verse, vaLLuvar has used the same word to imply that as a weakness of a ruler. May be we must construe that being simple does not mean being weak. Though a ruler may be easily accessible to deserving people, he should not let others to manipulate him thinking of that trait as weakness.

“Easy to manipulate, not thinking, and hence not being just
 A king will bring himself disgrace and will he perish to dust”

தமிழிலே:
எண்பதத்தான் - காட்சிக்கு எளியனாய் (ஆளுவோருக்கும் எல்லா நேரங்களிலும் ஏற்றதல்ல)
ஓரா - ஆராயமல்
முறை செய்யா - செங்கோல் முறைபடி ஆளாத
மன்னவன் - அரசனாகிய ஆளுவோன்
தண்பதத்தான் - தாழ்ந்து
தானே கெடும் - தானாகவே அழிந்துபடுவான்

எடுப்பார் கைப்பிள்ளையாய் (காட்சிக்கு எளியனாய்), இருந்து, தம்மிடம் முறைசெய்ய வருபவர்களது வழக்குகளை, ஆராயாமல் ஆளுகின்ற மன்னவன், தன் நிலையில் தாழ்ந்து தாமாகவே அழிந்துவிடுவான்.

சிலப்பதிகாரத்து பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி கூறும் குறளாக இது உள்ளது. பொற்கொல்லன் சொல்கேட்டு வந்த வழக்கை தீர விசாரிக்காமல், கோவலனைக் கொல்லச் சொல்லி, பின்பு கண்ணகியால் தவறு உணர்த்தப்பட்டு, தன் கொற்றம் தாழ்ந்து, செங்கோல் வளைந்து இறந்து பட்டதை இக்குறள் உணர்த்துவது தெளிவு.

காட்சிக்கு எளியனாய் இருத்தலை வள்ளுவரே சிறப்பித்து இறைமாட்சி அதிகாரத்தின் ஆறாவது குறளில் இவ்வாறு கூறியுள்ளதைக் கண்டிருக்கிறோம்.

“காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.” (386 - இறைமாட்சி அதிகாரம்)

ஆள்வோர் எளிமையான தோற்றமும் இயல்பும் உடையவராகவும், பிறரைக் கடிந்து தடித்த சொற்களைச் சொல்லாதவராயும் இருந்தால், வானகமும் அவ்வாள்வோரின் புகழைப் போற்றிக் கொண்டாடும். இதையே புறநானூற்று வரியும், இன்சொல் எண்பதத்தை யாகுமதிப் பெரும  (புறம்: 40:9) என்று போற்றியே சொல்லுகிறது.

இவ்வாறிருக்க, இக்குறளில் “எண்பதனாய்” இருப்பதை ஒரு சோர்வாக அரசனுக்குச் சொல்லியிருப்பது ஏன் என்பது வள்ளுவருக்கே வெளிச்சம். ஓர் அரசன் எளியனாய் இருக்கவேண்டும், ஆனால் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கக்கூடாது என்று நாமாகப் வலிந்து பொருள்கொண்டால் பொருந்திவருகிறது.

இன்றெனது குறள்:
காட்சிக் கெளியனாய் ஆய்ந்தொழுகா தாள்மன்னன்
மாட்சி குலைந்தழி யும்

kAtchik keLiyanAi AyndhozhugA dALmannan
mATchi kulaindhazhi yum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...