அக்டோபர் 20, 2013

குறளின் குரல் - 550


20th Oct 2013

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
                         (குறள் 543: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:
andaNar nURkkum aRaththiRkkum AdiyAi
ninRadu mannavan kOl

andaNar nURkkum – the gospel of wisdom of wisemen
aRaththiRkkum – the virtues for humanity written in them
AdiyAi ninRadu – one that has been the origin and source of it
mannavan – is kings
kOl – scepter (unbent) or just rule

Without the just rulers that rule with their unbent scepter, there is no use for the books of gospel or the words of virtues found in them. So even for such gospel and virtuous words a rulers' just rule is a prerequisite. This verse also speaks of the glory of just rule like the first one.

Because it says, “AndaNar nUl” it does not mean it talks about the people belonging to one of the varNas (caste categories) in an elevated way.  It simply means the books typically studied by them to be the guiding light of the society. vaLLuvar has already called Godhead as “aRavAzhi andaNan” in the iRai mAtchi chapter. Hence it could very well be construed as the gospel given by Godhead.

“The rule of unbent scepter is the origin
Of gospel and the virtuous words therein”

தமிழிலே:
அந்தணர் நூற்கும் - மறைவழியாளர்களின் மறைமொழிக்கும்
அறத்திற்கும் - அந்நூல்களில் காணப்படும் அறவழிகளுக்கும்
ஆதியாய் நின்றது - மூலமும் முதலுமாய் இருப்பவை
மன்னவன் - ஆளுவோரது
கோல் - கோணாத செங்கோலாம்

கோணாத கோல் கொண்டு ஆட்சிசெய்வோர் இல்லாது போனால்,  மறை நூல்களுக்கும் அவை சொல்லும் அறமொழிகளுக்கும் யாதொரு பயனுமில்லையாதலின் அவற்றுக்கும் மூலமுதலாயது நல்ல ஆட்சியாளரின் செங்கோன்மை என்கிறார் வள்ளுவர். இக்குறளும் செங்கோன்மையின் சிறப்பைக் கூறுவதாகும்.

அந்தணர் நூல் என்றதால் ஒரு வருணத்தாருக்கும் மட்டுமான நூல் என்று பொருளில்லை. அந்தணர் ஓதுவது என்றும், இறைவனையே அறவாழி அந்தணன் என்று வள்ளுவரே சொல்லுவதால், இறைவன் அளித்த மறைமொழி என்று கொள்ளுதலே நன்றாகும்.

இன்றெனது குறள்:

மறைக்கும் உரைக்கும் அறத்திற்கும் மூலம்
இறையதன் கோணாத கோல்

maRaikkum uraikkum aRaththiRkum mUlam
iRaiyadan kONAda kOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...