55: (Righteous Rule - செங்கோன்மை)
[The just and righteous governance of a ruler is discussed in
this chapter. Almost across all cultures in the civilized world, Sceptre,
has been used as a symbol of sovereignty, just and
impartial rule. Ruler has to rule his subjects by laws that render utmost
justice and impeccable administration. Through annals of the Indian literature,
many kings have been glorified for their just rule by unbending Sceptre (a
symbolic expression)]
18th Oct 2013
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
(குறள் 541: செங்கோன்மை அதிகாரம்)
Transliteration:
OrndukaN nODAdu iRaipurindu yArmATTum
thErndusei vahdE muRai
Orndu – Finding the truth (most commentators say: researching into crime of
people)
kaNnODAdu – Without considering the relationship to weigh in
iRaipurindu – being centered and just
yArmATTum – with anyone and everyone
thErndu – As prescribed in the books of ethics
seivahdE – doing as such
muRai – is the right way rendered by justice of sceptre
In this first verse of
this chapter, vaLLuvar defined righteous rule or rule by scepter. Such a rule
will carefully findout the good and bad of its subjects, impartially act and
will be devoid of considerations based on a person being friend or foe.
These thoughts have
been already mentioned in the chapters of “Righteousness
or being just”, (saman seidhu seer
thUkkum kOl”), “Realizing the truth”
(epporuL eththanmaith thAyinum) “Having
wisdom” (epporuL yAryAr vAi kETpinum..) in parts. This definition is the
summation of those individual thoughts said for the rulers as it more important
to rulers to govern subjects. Another
adage of wisdom says, “kOnuyara kuDi
uyarum” meaning “As the ruler raises
in stature, so will the subjects”. After all who does not know the story of
Pandya king of “SilappadikAram” who relinquished his life when he realized that
his septre had bent in rendering the right justice.
“Pursing truth, no leaning towards favorites,
being just to all
Are
the ways to ensure an unbent sceptre of righteous rule”
தமிழிலே:
ஓர்ந்து - ஆராய்ந்து (உரையாசிரியர்கள், மக்களின் குற்றத்தை ஆராய்ந்து
என்பர்)
கண்ணோடாது - இன்னார் நம்மவர் என்னும் சார்பின்றி
இறைபுரிந்து - நடுவு நிலையோடு
யார்மாட்டும் - யாரிடத்தும்
தேர்ந்து - நீதி நூல்களில் சொல்பவற்றை கற்றறிந்து
செய்வஃதே - அவற்றின்படி ஒழுகுவதே
முறை - சரியான செங்கோன்மை முறையாகும்
இவ்வதிகாரத்தின் முதற்குறளில் செங்கோன்மையினை வரையறுக்கிறார் வள்ளுவர். செங்கோன்மை என்பது தம்மக்களின் குற்றங்குறைகளை ஆராய்ந்து,
இவர் நம்மவர், அல்லாதவர் என்று சார்பில்லாது, நடுவு நிலைமையோடு நீதி நூல்களில் சொல்லப்பட்ட வழிமுறைகளை அறிந்து அவற்றில் சொல்ல வழிமுறைகள்படி
நடப்பதே செங்கோன்மைத் தவறாத ஆட்சிமுறையாம்.
குற்றங்குணங்களை ஆராய்தல், நடுவு நிலைமை,
நம்மவர் என்கிற சார்பின்மை என்பவற்றைப்பற்றி அறத்துப்பாலின் கண்ணும் வள்ளுவர்
சொல்லியிருக்கிறார். “ சமன்செய்து சீர்தூக்குங்
கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்று “நடுவு நிலைமை” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள்
எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “மெய்யுணர்தல்” அதிகாரத்துக் குறளாலும், “எப்பொருள்
யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று “அறிவுடைமை” அதிகாரத்துக் குறளாலும் ஏற்கனவே
இக்குறளின் மொத்தக்கருத்தையும் கூறியிருப்பதை நினைவு கூறலாம். மற்ற யாவரையும் விட,
ஆள்வோர்க்கு செங்கோன்மை இன்றியமையாததாகும்.. “கோனுயரக்
குடி உயரும்” என்பதும் சான்றோர் வாக்கே. செங்கோல் தாழ்ந்ததால், மானமுடைய அரசர்
உயிர் துறப்பர் என்பதற்கு சிலப்பதிகாரப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனே சான்று.
இன்றெனது குறள்:
ஆய்ந்து நடுநிலையாய் சார்பின்றி நீதியின்கண்
சாய்தலே செங்கோன்மை யாம்
Ayndu naDunilaiyAi sArbinRi nIdiyinkaN
sAidalE senkOnmai yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam