13th Oct 2013
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.
(குறள் 536: பொச்சாவாமை அதிகாரம்)
Transliteration:
izhukkAmai yArmATTum enRum vazhukkAmai
vAyin athuvoppa dil
izhukkAmai – the attribute of not forgetting
yArmATTum – towards anyone
enRum - always
vazhukkAmai- never deviate from that attribute
vAyin – if a person gets it
athuvoppa(du) – to compare with that
il – there is none.
If a person has the
attribute of not being forgetful towards anyone, always, there is none compared
to that attribute is what is said in this verse. The specific word “izhukkAmai”
means lassitude or lethargy that results in forgetfulness. Similarly
“vazhukkAmai” means slipping from something.
In the chapter of
being thankful, vaLLuvar has exempted a situation, forgetfulness is indeed
recommended. “nanRi maRappadu nanRalla nanRalladu anRe maRappadu nanRu”. When a
person is ungrateful and does undesirable deeds, one must forget them
rightaway,
“Not enfeebled and forgetful towards anyone,
always.
None
to compare, when a person has that in place “
தமிழிலே:
இழுக்காமை - மறவாத குணம், தளர்வின்மை
யார்மாட்டும் - யாரிடத்திலும்,
என்றும் - என்றும்
வழுக்காமை - தவறாமை, சீர்குலைவு
வாயின் - வாய்க்குமாயின்
அதுவொப்ப(து) - அதற்கு ஒப்பான சீரிய குணம்
இல் - ஏதுமில்லை.
மறவாமையாகிய
தளர்வின்மை, யாரிடத்திலும், என்றுமே தவறாமை இருக்குமாயின் அதற்கு ஒப்பான சீரியகுணம்
ஒன்றுமில்லை என்பதே இக்குறளின் கருத்து, இழுக்காமை என்பது தளர்வில்லாமையைக் குறிப்பது.
மறதி என்பதே தளர்வினால் வருவதாகையால், அதைக் குறிக்க இழுக்காமை என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்
வள்ளுவர். அதேபோல் வழுக்காமை என்பது தவறாமையை குறிக்கும் சொல்.
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது
நன்று” மறத்தலை நன்றிலாது ஒருவர் செய்த செயலை நாம் உடனே மறக்கவேண்டியதையும்
விலக்காகவும் வள்ளுவரே சொல்லியிருப்பதைக் காண்க.
இன்றெனது குறள்(கள்):
மறவாமை யார்க்கும் இறவாமை என்றும்
சிறப்போடு சீர்மையு மாம்
maRavAmai yArkkum iRavAmai enRum
siRappODu sIrmaiyu mAm
தளராமை யார்க்கும் தவறாமை என்றும்
வளமாக்கும் வாழ்க்கை முறை
thaLarAmai
yArkkum thavaRAmai enRum
vaLamAkkum
vAzhkkai muRai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam