அக்டோபர் 31, 2013

குறளின் குரல் - 561

31st Oct 2013

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
                         (குறள் 554: கொடுங்கோன்மை அதிகாரம்)’

கூழுங் - பொருளாதாரத்தையும் (குடிமக்களின் ஈட்டுதலால் பெருகும், அருகும்)
குடியும் - நல்ல குடிமக்களையும்
ஒருங்கிழக்கும் - சேர்ந்தே இழக்கும் (குடிமக்கள் வேறு இடங்களை நோக்கிச் செல்வதால்)
கோல்கோடிச் - செங்கோல் வளைந்து
சூழாது செய்யும் - பின்விளைவுகளை ஆராயாது செய்கின்ற
அரசு - ஆட்சி

செங்கோல் வளைதலால், பின்னால் வரும் விளைவுகளை ஆராயாமல் ஆட்சி செய்கின்ற கொடுங்கோலரசு, தன் நாட்டின் வளத்துக்காதாரமான குடிமக்களையும், அவர்களால் பெருகும் பொருளாதாரத்தையும் சேர்ந்தே இழக்கும் என்பதிக்குறள் சொல்லும் கருத்து. கொடுங்கோல் ஆட்சியை நீங்கி, நல்லாட்சி நடக்கும் நாடுகளை நாடி நல்லகுடிமக்கள் சென்றுவிடுவார்கள் ஆகையால் நாட்டின் வளமும் அதனால் குன்றி அழிந்துபடும்.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை செங்கோன்மை தவறிய அரசினால் வரும் தொடர் விளவுகளை இவ்வாறு கூறுகிறது.

“கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாறிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை”

இதை வேடிக்கையாகச் சொல்லுமிடத்து, கம்பன் குலோத்துங்கனிடம் கோபித்து சேரநாட்டுக்குச் சென்றதாகக் கூறுவார்கள். கம்பன் கோபித்துச் சொன்ன பாடல்:

“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்-- என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”

ஒரு நாட்டின் அறிவுச்செல்வம் குறைவது, அழிவதும், அந்நாட்டின் அரசு சரியில்லை என்பதையே காட்டுகிறது, “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற சொற்படி, வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், தாய்நாட்டிலிருப்பதையே மக்கள் விரும்புவர். அதற்கு மாறாக, நாட்டைவிட்டு அகலுவார்களேயானால், அந்நாடு அறிவு வளத்தையும், அறவளத்தையும், மற்றும் பொருள் வளத்தையும் மெல்ல இழக்கும். இதை பாரதியின் கோபம் வேறுவிதமாகச் சொல்லியது, “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று.

Transliteration:

kUzhung kuDiyum orungizhakkum kOlkODich
cUzhAdhu seyyum arasu

kUzhung – Prosperity of wealth
kuDiyum – and the citizens that make the wealth of the country
orung(u) izhakkum – will lose together
kOl kODich – with the bent scepter (metaphorically, not literally)
cUzhAdhu seyyum – ruling without thinking about the consequences
arasu – such government

The rule unthinking of the consequences and with the scepter bent (metaphorically, not physically), will lose its prosperity of wealth and the citizens that make the wealth of the state together is the substance of this verse. It is to be inferred that the despotic rule will activate and accelerate the brain drain and the people of value and virtue that are the backbone of the society; hence will the country, without guidance or people that make wealth will diminish in stature, status, wealth and decimate over a period of time.

Manimekalai, one of the five epics of Tamil literature says,

“With bent scepter will affect the dispositions of planets
 With planets dispositions affected, will affect the seasons
 With seasons affected, will fail the rains and hence life on earth”

An incident in Kamban, the great poets’ life: He left the country of KulOthungA for reprimanding him unjustly, not because of arrogance and pride, but because of his confidence and ability to live anywhere with his knowledge.  The poem asks kulOnthunga, “Are you worthy of your statur as a king? Is the prosperity of this land is all because your making? Did I learn all that I know for you to patronize? Is there a land which will not accept me with open arms? Like is there a branch of a tree which will not accept a monkey?” The ending question makes it a little funny, but the meaning cautions the ruler of unjust ruler’s country.

When there is a huge brain drain in the country due to mass scale migrations to prosperous and respecting lands, it means, the rule of the country is not proper and inherently unjust. BhartiyAr said it even more angrily, “When ghosts rule the country, the ethics will eat the corpses”.

“The prosperity of wealth and the people will be lost together
 By the despotic ruler, unthinking of consequences, to wither”

இன்றெனது குறள்:

செல்வமும் மக்களும் சேர்ந்திழக்கும் செங்கோலால்

அல்லவைசெய் ஆட்சி அழிந்து

selvamum makkaLum sErndhizhakkum senkOlAl
allavaisey ATchi azhindhu

அக்டோபர் 30, 2013

குறளின் குரல் - 560

30th Oct 2013

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
                         (குறள் 553: கொடுங்கோன்மை அதிகாரம்)

தமிழிலே:
நாடொறும் - ஒவ்வொரு நாளும்
நாடி - நாட்டு மக்களின் குறைகளை, நாட்டின் நடக்கும் தீமைகளைத் தக்கவாறு ஆராய்ந்து
முறைசெய்யா - மக்களுக்கு வேண்டிய நீதிமுறையான ஆட்சியைத் தராத
மன்னவன் - நாட்டின் தலைவன்
நாடொறும் - ஒவ்வொரு நாளும்
நாடு கெடும் - தன்னுடைய நாட்டினரின் அன்பும், நாட்டுபற்றையும் இழந்து, விரைவில் தன் நாட்டையே இழந்து விடுவான்

இக்குறள், தன் நாட்டு மக்களின் குறைகளை, நாட்டில் நடக்கும் தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்கும்படியான நீதிமுறையான ஆட்சியைத்தராத ஒரு கொடுங்கோல் மன்னன் (கொடுங்கோல மன்னன் என்பதை நாமே உள்ளுரையாக பொருள் கொள்ளவேண்டியது), அதனாலேயே நாள்தோறும் சிறிது சிறிதாக தம் நாட்டையே இழந்துவிடுவான் என்கிறது.  அது எவ்வாறெனின், கொடுங்கோல் ஆட்சியால் நாட்டு மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இழக்கும் அரசன், உள்நாட்டிலேயே உருவாகும் எதிரிகளாலோ, அல்லது வெளிப்பகையினாலோ சிறிது சிறிதாக அழிந்துபடுவான்.

இக்குறளைக் கூர்ந்துபடித்தால், இதில் நீதிமுறையில்லா மன்னன் என்றது முறையறியா மன்னன், அறிந்தும் சரிவர தன்கடமையைச் செய்யாதவன் என்று கொள்ளலாமே தவிர கொடுங்கோல் மன்னன் என்பது தருவித்துக்கொள்ளப்பட்ட கருத்தேயாகும். செங்கோல் ஏந்தியமைக்கு முறை செய்யாத மன்னன் என்பதால், கொடுங்கோலான் என்பது தானாக வரும் பொருளெனில், பொருந்துகிறது.

முதுமொழிக்காஞ்சி, “ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் முறையில் அரசன் நாடுதல் கூர்ந்தன்று” என்று இக்குறளை ஒட்டிச் சொல்கிறது.

திருமூலரின் திருமந்திரப்பாடல், ஒன்றும் இக்குறளின் கருத்தை ஒட்டியதே.

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடோறும் நாடுகெடும் மூடம் நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே"

"ஆவையும் பாவையும் மற்றற வோரையுந் தேவர்கள் போற்றுந் திருவேடத்தாரையுங் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே" என்றும், செங்கோல்முறை தவறும் மன்னர்க்கு நரகமே என்றும், அவரே கூறுவார்!

Transliteration:
nADoRum nADi muRaiseiyA mannavan
nADoRum nADu keDum

nADoRum – Every day
nADi – keeping a vigil on citizens woes and problems
muRaiseiyA – not giving the just rule for his citizens
mannavan – such a ruler
nADoRum – day by day
nADu keDum – will lose the love and loyalty of his citizens and lose control of his country and lose his country itself

This verse alludes that a ruler who does not tend to his citizens woes on a daily basis, is directly or indirectly a despotic ruler and such a ruler will lose the love and loyalty of his countrymen to eventually lose his country itself to his enemies within and external. In a roundabout way, this verse defines what a despotic ruler would do and what would be the consequences for him and for his country.

On careful reading this verse seems to only talk about careless and cleless ruler, not a tyrannical ruler. There are poetical verses in Sangam literature “Mudumozhi kAnchi” and ThiurmUlar’s Thirumanthiram that reflect the idea of this verse also.

“Ruler not keeping vigil on his citizens woes daily, and renders justice promptly
 Will lose the love and loyalty of citizens, day by day and lose the country swiftly”

இன்றெனது குறள்:

நாட்டோர்க்கு நாள்தோறும் நீதிசெய்யான் நாடிழந்து

வாட்டமுற்று வீழும் விரைந்து

nATTOrkku nALthORum nIdiseyyAn nADizhandhu
vATTamuRRu vIzhum viraindhu

அக்டோபர் 29, 2013

குறளின் குரல் - 559

29th Oct 2013

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                         (குறள் 552: கொடுங்கோன்மை அதிகாரம்)

தமிழிலே:
வேலொடு நின்றான் - பயணிக்கும் மக்களை வழிப்பறிக்க கொடிய வேலோடு நிற்கும் கள்வன்
இடு என்றது போலும் - “உடமைகளை கொடுத்துவிட்டு செல்” என்று மிரட்டிப் பறிப்பதைப் போன்றது
கோலொடு நின்றான் - செங்கோலை ஏந்தி அரசாட்சி செய்யும் ஆள்வோன்
இரவு - மக்களிடம் “கைப்பொருள்” தரும் படி தன் அதிகாரத்தினால் கேட்பது (தராவிட்டால் தண்டனை உறுதி)

ஆறலைக் (ஆறு - வழி, அலை - மக்கள் நடமாடுகை) கள்வர், எனப்படும் வழிப்பறிக் கள்வன் கையில் வேலென்னும் கொலைக்கருவியைக் கொண்டு, வருவோர் போவோரிடம், “கையிருப்புகளைத்” தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்டலைப் போன்றதே, கையில் செங்கோல் ஏந்தி, தன்குடிமக்களிடம் ஏதேனும் ஒரு காரணம்பற்றி வரி என்னும் பெயரில் நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டே போகும் ஆள்வோன் செய்வதும்!

இருவருமே காக்கும் கருவிகொண்டாலும், மக்கள் தராதிருந்தால் அவர்களை துன்புறுத்தவும் தயங்காத கொடிய உள்ளம் கொண்டவர்கள்; வரிச்சுமை என்னும் பெயரில் ஆள்வோன் செய்வது “கௌரவப் பிச்சை” போன்றதே! இத்தகையோரை, “குடிப்புரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன்  (புற: 75: 4-5) என்று கூர்மை இல்லாத சிறியோனாகச் சொல்கிறது புறநானூற்றுப் பாடலொன்று!  இக்குறளின் கருத்து முந்தைய குறளின் கருத்தினுள் அடக்கமேயாயினும், முதற்குறளில் வேந்தனை குடிமக்களின் பொருளுக்காய் வெஃகி, அவர்களை அலைப்பானாகக் கூறியதும், இக்குறளில் இரந்து கொள்வானாகக் கூறியதுமே வேற்றுமை.

Transliteration:

vEloDu  ninRan iDuen RadhupOlum
kOloDu ninRAn iravu

vEloDu  ninRan – A highway robber, holding a killing spear in his hand
iDu enRadhu pOlum – like, demanding to handover the belogings, stopping someone on the road
kOloDu ninRAn – Ruler holding the scepter (which is there to protect citizens)
iravu – Asking people to pay more (in terms of taxes etc.) using his power (if people don’t payup, they would be punished)

Highway robbers wielding a spear in their hand, would stop travellers walking alone to harass them to handover all their belongings. Knowing what would happen, if they did not yield, people would have no option but to handover what they have in their possession fearing their lives. Such is the ruler who has the scepter to protect his citizens, but misuses his power to demand more from his citizens slapping them with more tax burden. Citizens that fear punishment to the extent of losing lives would have no option but to pay up, unhappily.

In both cases, the “vEl” and “kOl” are misused from their intendted purpose. puRanAnURu, metaphorically mentions such a ruler as lacking in sharpness of masculinity required of ruler. The meaning of this verse is embedded in the previous itself. In previous verse, he refers to a despotic ruler who gives trouble to his own citizens to embezzele their wealth. Here is the same thing is done in a different way by slapping citizens with more taxes with the misuse of scepter.

“Refusal to the demands of a roadside robber with his spear, would flame
 No difference between him and the king, wielding scepter doing the same”


இன்றெனது குறள்:

குடிதன் பொருளிரந்து வேந்துகொளல் கள்வர்
தடிகொண்டு கொள்வது போல்

kuDithan poruLirandu vEndukoLal kaLvar
thaDikoNDu koLvadhu pOl

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...