செப்டம்பர் 30, 2013

குறளின் குரல் - 530


30th Sep 2013

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
                             (குறள் 523: சுற்றந்தழால் அதிகாரம்)

Transliteration:
aLavaLA villAdAn vAzkkai kuLavaLAk
kODinRi nIrniRain daRRu

aLavaLAv(u) – To converse freely to share what is in mind
illAdAn – one without close associates
vAzkkai – his life
kuLavaLAk – the water holding public tank
kODinRi – without the boundary or banks built to hold the water inside
nIr niRaindaRRu – is like filled with water

When there is no close associates (kindred) to converse with freely, frankly and intimately to share all good and bad things, a persons wealth would be dried up or misused just like a water in a public tank without safeguarding banks is misused by any passerby. Though the verse does not directly convey the meaning, and even confusing for casual readers, the implied meaning is this: Only when a person has kindred that he or she can talk to freely sharing their woes or otherwise, they would be given caring suggestions and be taken care of, by them. Otherwise, it would be like  a water tank without proper banks to safeguard.  Any and every passerby would simply use it for their own gains, good or bad.

When lack the kindred for intimate, free and frank conversations
A person would be misued like a public watertank without banks

தமிழிலே:
அளவளாவு - மனம் கலந்து பேசிட
இல்லாதான் - (சுற்றம்) இல்லாதவனுடைய
வாழ்க்கை - வாழ்க்கையானது
குளவளாக் - குளப்பரப்பானது
கோடின்றி - கரையில்லாமல்
நீர் நிறைந்தற்று - நீர் நிறைந்து இருப்பதுபோலாம்

மனம் விட்டுப் பேசி, கலந்து ஆலோசைனை செய்திட சுற்றம் என்னும் நெருக்கமானவர்கள் இல்லாதவனுடைய வளங்கள் எல்லாம், கரையற்ற குளத்து நீரைப்போல காணாது சென்றுவிடும். வந்தவர்களெல்லாம் தங்கள் பயனுக்குக் கொண்டு, நீரை இறைத்தோ அல்லது அசுத்தமாக்கியோ அதனை ஒருவருக்கும் பயன்படாத வகையாக்க்கிவிடுவர். நெருங்கிய சுற்றம் ஒருவனுடைய நலங்களைப் பாதுகாக்கும் அரிய ஆலோசனைகளை வழங்கும். அச்சுற்றம் எப்படி நெருங்கியதாகும்? ஒருவன் அவர்களோடு மனம்விட்டு கலந்து பேசி தன்னுடைய நலன்கள், குறைகள், விருப்பங்கள் இவற்றைப் பகிர்ந்து கொண்டால்தான் அவர்களும் நெருக்கமானவர்களாக உணர்வார்கள்.

இன்றெனது குறள்:
உட்கலந்து பேசசுற்றம் அற்றவாழ்வு நீர்குளம்
கட்டுகரை அற்றது போல்

uTkalandu pEsasuRRam aRRavAzhvu nIrkuLam
kaTTukarai aRRadu pOl

செப்டம்பர் 29, 2013

குறளின் குரல் - 529


29th Sep 2013

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
                             (குறள் 522: சுற்றந்தழால் அதிகாரம்)

Transliteration:
viruppaRAch suRRam iyaiyin aruppaRA
Akkam palavum tharum

viruppaRAch – Unfailing love or affection
suRRam iyaiyin – if the kindred( for anyone) have,
aruppaRA – without fading to have new blossoms of
Akkam palavum – wealth of many forms
Tharum – will bring forth

When a person is bestowed with kindred of unfailing love and affection, the person will have unfading blossom of wealth in many forms. The word “viruppaRa” implies the kindred without any inner agenda or enmity. For people to have unconditional and unfailing love, a person must deserve it too. It must be costrued that this verse is said in the context of ruler who has the qualities described in the previous chapters.

“Bestowed with kindred with unfading love and affection
 Wealth in many a form will multiply for, as a benefiction

தமிழிலே:
விருப்பறாச் - விருப்பு அறா - அன்பு அகலாத
சுற்றம் இயையின் - சுற்றம் சூழ்ந்திருப்பின்
அருப்பறா - அரும்புதல் (துளிர்த்தல்) கருகி ஓயாது
ஆக்கம் பலவும் - பல செல்வங்களையும்
தரும்- கொடுக்கும்

அன்பு அகலாத சுற்றம் வாய்த்த ஒருவருக்கு, செல்வம் கன்றாமல் அரும்பிக்கொண்டே இருக்கும். இங்கே அரும்புதல், கிளைத்தல், துளிர்த்தல் என்ற பொருள்களில் வரும். விருப்பு அறா சுற்றம் என்றது, உட்பகை அற்று உடனுறையும் சுற்றமாகக் கொள்ளப்பட வேண்டும். எளிய குறள். எளிய கருத்து. இக்குறளையும், முந்தைய அதிகாரங்களின் குறட்பாக்களுக்கு சொல்லப்பட்ட ஆள்வோரின் குணநலன்களுக்குப் பொருத்தி உள்ளுரையாகச் சொல்லப்பட்டதாகக் கொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:

அன்பகலா சுற்றமுற செல்வம் கிளைத்தருகா
தென்றும் வளரும் நிறைந்து

anbagalA suRRamuRa selvam kiLaitharugA
thenRum vaLarum niRaindhu

செப்டம்பர் 28, 2013

குறளின் குரல் - 528


53: (Embracing kinship- சுற்றந்தழால்)

[In the middle of chapters discussing politics, and the aspects of a rule, ruler etc., this chapter that seems to mean embracing and be supportive to relatives or kith and kind. Here vaLLuvar does not necessarily mean the close blood relatives of a ruler. People that are closely associated with a ruler become his close relatives and associates.  Such associates should be embraced by the ruler and be kept close as they will come in support during difficult times. ]

28th Sep 2013

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
                             (குறள் 521: சுற்றந்தழால் அதிகாரம்)

Transliteration:
paRRaRa kaNNum pazhamiayaip pARTTudhal
suRRaththAr kNNE uLa

paRRaRa kaNNum – even during the times of no prosperity but utter poverty
pazhamiayaip – relationship of old times
pARTTudhal – thinking of such old time relationships
suRRaththAr kNNE – only with people that have close associates
uLa - is possible

Only closely associated people (the word suRRam does not necessarily mean kinfolks alone) will stick to a rulers even when they have lost all their wealth, status, power and the title as the ruler. They cherish the past glorious days that they stayed with the ruler to enjoy all the benefits. They are the ones to be called as relatives.

Auvayyar, in her work of  “mUdurai” thus says, those that leave like birds from the dried up pond, are not to be considered kindred.  The lily, and kuvaLai and koTTi plants that stay low and high and still  stay in the pond, during the times when it has dried up or full, are the good examples of what kind of relatives one must have. In another verse, Auvayyar also caustions that sometimes, relatives would be like disease that brews inside to kill and such relatives one should be cautious of.

“Kindred are the ones that cherish the glorious past
 to stay as support to their ruler - friendships that last.”

தமிழிலே:
பற்றற்ற கண்ணும் - ஒரு பற்றுமில்லா வறுமையில் வாடுங்காலத்தும்
பழைமை - முன்பிருந்த வாழ்வையும் உறவையும்
பாராட்டுதல்  - எண்ணி நினைவுகூர்தல்
சுற்றத்தார் கண்ணே - சுற்றத்தார் ஆகிய நெருக்கமானவர்களின் பொறுப்பிலேயே
உள - இருக்கிறது.

இவ்வதிகாரத்தின் முதற்குறளில், ஓர் ஆள்பவருக்கு அணுக்கமானவர்கள், ஆள்பவர் செல்வம், பதவி, பட்டம், செல்வாக்கு இவற்றைத் தொலைத்துவிட்ட காலத்திலும், அவரோடு இருந்த பழநாட்களை நினைந்து போற்றுபவர்கள் என்கிறார் வள்ளுவர். அவர்களே சுற்றம் என்று கூறப்படுபவர்கள். ஔவையாரின் மூதுரையில், சுற்றத்தைப் பற்றி கூறும்போது, அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போன்றவர்கள் அல்லர் உண்மையான சுற்றம் என்பார்.  அந்த  முழுப்பாடலும், அதனுடைய விளக்கமும்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.

நல்ல சுற்றம் எத்தகையது என்று சொல்லும் ஔவை, மற்றொன்றையும் சுற்றம் பற்றி கூறுவது கவனிக்கத் தக்கது.

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி “

சுற்றமும் பல நேரங்களில் உடனிருந்து கொல்லும் வியாதிபோன்றதாகையால், அவரிடத்தும் கவனமும் எச்சரிக்கையும் தேவையென்று உணர்த்துகிற பாடலும் மூதுரைப் பாடல்தான்.

இன்றெனது குறள்:

சுற்றமென்ப யாதெனின் அற்றநாளும் அற்றைநாள்
உற்றவுற வெண்ணிச் செயல்

suRRamneba yAdhenin aRRanALum aRRainAL
uRRavuRa veNNdich cheyal

செப்டம்பர் 27, 2013

குறளின் குரல் - 527


27th Sep 2013

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
                             (குறள் 520: தெரிந்து வினையாடல் அதிகாரம்)

Transliteration:
nADOrum nADuga mannan vinaiseivAn
kODAmai kODA dulagu

nADOrum – every day
nADuga mannan – ruler must keep vigil (in what)
vinaiseivAn – in people that work under him
kODAmai – not to go astray in their functioning or honesty
kODAd(u) ulagu – if such is the governance, the world under him will behave properly

When the administration’s workforce is honest and sincere to their work, the rule of the administration and the people under that administration will be prosperous and honest too.  So the administration must keep a vigil on its subjects to keep them in the path of honesty and discipline with respect to their work. “as the subjects raise in their stature, so will the ruler” is an old adage. This can be fit aptly in to the context of this verse too.

Another adage, “ As is the king so are the subjects”, tells when the rule’s scepter, the symbol of authority and justice is held unbent, the subjects will live a life of honesty and dignity as their virtues. After all, the ruler is doing the duty or job of governing his subjects. If the ruler is honest in his job, so will his subjects in their respective duties and jobs.

“A ruler must keep vigil of his work force every day
 As their honesty will keep the ruled land that way “

தமிழிலே:
நாடோறும் - தினமும்
நாடுக மன்னன் - ஆள்வோர் கவனத்துடன் இருக்க வேண்டும் (எதில்)
வினைசெய்வான் - தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின்
கோடாமை - நேர்மையும், ஒழுங்கும், கோணாமை, தவறாமை
கோடாது உலகு - அவ்வாறு ஒழுகின், அவன் ஆளுகின்ற உலகும் தவறாக இயங்காது

தனக்குக்கீழ் பணிபுரிவர்கள் தவறான பாதையில் செல்லாது, நேர்மையும், ஒழுங்குடனும் பணிசெய்ய, ஒரு அரசின் குடைகீழ் இருக்கும் நாடும், நேர்மையுடன் இருக்கும். ஆதலால் ஒரு அரசன் தனக்குக்கீழ் பணிபுரிவர்களை நேர்மையும், ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்க தினமும் கண்காணிக்க வேண்டும். “குடி உயரக் கோன் உயரும்” என்ற வாக்கினை இங்கு, கீழே இருக்கும் பணிபுரிவர்களின் நேர்மையிலே பொருத்திப் பார்க்கலாம்.

“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர். அரசனும் காக்கும் தொழிலாகிய வினையைச் செய்கிறவன்தானே!  அவனே நேர்மையாயிருந்தால், அவனுடைய குடிமக்களும் அவரவர் ஆற்றும் வினைகளிலே நேர்மையாகத்தான் இருப்பர்.

இன்றெனது குறள்:
வினைவல்லார் நேர்மையினை நாளுமாள்வோர் காக்கும்
வினையாலே வாழும் உலகு

vinaivallAr nErmaiyinai nALumALvOr kAkkum
vinaiyAlE vAzhum ulagu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...