ஆகஸ்ட் 31, 2013

குறளின் குரல் - 500


31st Aug 2013

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
                           (குறள் 493: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
ARRArum ARRi aDUba iDanaRindhu
pORRArkaN pORRich cheyin

ARRArum – Even the weak ones
ARRi – will be like one with strength
aDUba – can win (over enemies)
iDan aRindhu – if the proper place to win is selected
pORRArkaN – when with enemies
pORRich – dealing with (in war) them
cheyin- is done

This verse conveys a simple idea. Even the weak can become strong and win against their enemies. When? When they know which place is appropriate to engage with the enemies (war) and do so. In the chapter on “Patience” earlier VaLLuvar had said the true strength was to be patient with senseless fools. Such patience has no place when it comes to enemies and hence here he says strength is something that shows when engaging with enemies at the appropriate place, of course apart from time,

As already seen in the “Knowing the strength” chapter, knowing what befits self and learning all that must be learned for that is greater strength for someone – In that context, “place” becomes one of the several things that must be known by someone to feel strong.

"If the right place is understood, even the weak can feel strong
 too! Then if they face their enemies can anything go wrong?”

தமிழிலே:
ஆற்றாரும் - வலிமை அற்றவரும்
ஆற்றி - வலிமையுள்ளவர் போல்
அடுப - வெல்வர் (பகைவரிடத்தில்)
இடனறிந்து - வெல்லும் இடம் அறிந்து
போற்றார்கண் - பகைவர்களோடு
போற்றிச் - செய்யத்தக்கதாம் (போர்) வினையைச்
செயின் - செய்தால்

இக்குறள் சொல்வது எளியகருத்து. வலிமையற்றவரும் வலியராக மாறி வெல்லக்கூடும் தம்பகைவருக்கு எதிராக. ஏப்போது? எந்த இடத்தில் வெல்லலாம் என்பதை அறிந்து பகைவர்களோடு செய்யத்தக்கதான வினைகளை (போரினை) ஆற்றும் போது. பொறையுடமை அதிகாரத்தில் “வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” என்று கூறுவார் வள்ளுவர். அறிவிலிகளிடம் பொறுமை காப்பதுதான் வலிமை என்றாலும், பகைவரிடம் அதைக் காட்டுதல் பயனில்லையே என்பதால் இவ்வதிகாரத்தில் வலிமை என்பது பகையை வெல்ல ஏற்ற இடத்தான் வருவதாகக் கூறுகிறார்

வலியறிதல் அறிதல் அதிகாரத்திலே சொல்லியபடி, தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. (ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.) என்ற கருத்தை இங்கு பார்க்கும் போது, அறியவேண்டியவற்றுள் ஒன்றாக, “தக்க இடமும்” ஆகிவிடுகிறது.

இன்றெனது குறள்:

வலியற்றும் வெல்வர் வலியராய் ஒன்றார்
நலியுமிடம் தேர்ந்துசெய் யின்

valiyaRRum velvar valiyarAi onRAr
naliyumiDam thErndhusei yin

ஆகஸ்ட் 30, 2013

குறளின் குரல் - 499


30th Aug 2013

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
                           (குறள் 492: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
muraNsErndha moimbi navarkkum araNsErndhAm
Akkam palavund tharum

muraNsErndha – because of the avarice, not thinking the world belongs to everyone
moimbinavarkkum – for those desire to win, own the whole world with might and strength
araN sErndhAm – even for them, belonging to confined borders like a fortress,
Akkam – the strength and prosperity
palavund tharum – will give many such benefits (belonging to confined borders)

This verse talks about the confined borders for even the most powerful and strong rulers. Though some rulers may think that the whole world belongs to them, (out of avarice and contrary to the fact that the world belongs to everyone) and may even be strong, mighty to win and own the world, having confined borders to operate is good for the prosperity and strength. After all the history reveals repeatedly those who expanded their rule had seen their control slowly weaken and whither away in due course. Though said in a different context, a Tamil adage, “siRugak kaTTi peruga vAzh” seems to reveal more than the context of “saving” it is used for.

May desire the whole world, because of might, though the world belongs to all;
 better to know that the strength and prosperity are in protecting borders after all”

தமிழிலே:
முரண்சேர்ந்த - மாறுபட்ட எண்ணத்தினால் (உலகம் எல்லோர்க்கு என்னாது தமக்கே என்பார்)
மொய்ம்பினவர்க்கும் - தம் வலியால் உலகை வெல்லவும் கொள்ளவும் நினைப்பாருக்கும்
அரண் சேர்ந்தாம் - ஒரு அரணைச் சேர்ந்தே (அதாவது ஒரு எல்லைக்குள் இருப்பதே)
ஆக்கம் - வளத்தையும், வலிமையையும்
பலவுந் தரும் - ஆகிய நன்மைகள் பலவும் தரும்.

இக்குறள் பாதுகாப்பான அரண் தேவையென்பதை வலிமையும், உலகையே ஆளவேண்டும் என்று விரும்புகிற ஆள்வோர்க்கு உணர்த்துகிறது. உலகை வென்று தானே ஆட்சிசெய்யவேண்டும் என்று எத்தனை அரசர்கள் முனைந்திருக்கிறார்கள்? சரித்திரத்தின் பக்கங்களில் எத்தனைப் பேரரசுகள், வல்லரசுகள், கிரேக்க, உரோமானிய, மௌரிய, சேர, சோழ, பாண்டிய, பல்லவ, குப்த என்று தோன்றி, தனிப்பட்ட அரசர்களின் ஆதிக்க வெறியினாலே, படையெடுப்புகளின் விரிந்து, பின்பு பாதுகாக்க முடியாமல் அவர்கள் காலத்திலோ, பின்போ சுருங்கி, தேய்ந்து, அழிந்திருக்கின்றன, மறைந்திருக்கின்றன?

வலிமையுடன் ஆள்வோர்கள், உலகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற கருத்துக்கு முரணாக இருந்தாலும், தமது அரணாக உள்ள இடத்தைத் தக்கவைத்தலே அவர்களுக்கு, உண்மையான வலிமையும், வளமுமாம் என்பதே இக்குறளின் கருத்தாக இருக்கமுடியும். பொதுவாக எல்லா உரைகளும், ஓரளவுக்கு மழுப்பலாகவே சொல்லப்பட்டுள்ளன, அல்லது உட்கருத்தை ஆராயாமல் செய்யப்பட்டுள்ளன.

இன்றெனது குறள்:

உலகுபொது வென்னாதம் திண்மையில்கொள் வார்க்கும்
அலகுவரண் ஆக்கம் அது

ulagupodhu vennAtham thINmaiyilkoL vArkkum
alaguvaraN Akkam adhu

ஆகஸ்ட் 29, 2013

குறளின் குரல் - 498


50: (Knowing proper place - இடனறிதல்)
[In the sequence of strength, time, and other factos to mind before venturing into doing deeds, this chapter focuses on knowing the appropriate place to perform any deed to be successful, useful. Vantage point of operation is an important factor for rulers to mind in all their deeds. For farmers it is important to know which land to farm what. Every profession has its own advantageous place of operation for it to flourish and function effectively]

29th Aug 2013

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
                           (குறள் 491: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
thoDangaRka evvinaiyum eLLaRga muRRum
iDangkaNDa pinal ladhu

thoDangaRka – Don’t commence
evvinaiyum – to do any activity
eLLaRga – without knowing the nature of activity, don’t underestimate also
muRRum iDang – meeting place and the ending place of the activity
kaNDapin alladhu – without knowing that

This verse places two thoughts before us. First, before commencing an activity, one must know where and how it will end. Second, not knowing the nature of job, underestimating it. When the opponent is unknown, both must be considered.

The most powerful rulers have lost wars to their enemies, not knowing what their strength; and where they would meet the opponent, how long it would take, what the end game and place of the war would be.

A ruler, having a huge army like an ocean must not underestimate the opponet, just because of that. This has been captured in a beautiful poetry in puralpporuL venpA mAlai.

Never begin anything underestimating an opponent
And not knowing where, and how the end will be met

தமிழிலே:
தொடங்கற்க - செய்யத் தொடங்காதீர்
எவ்வினையும் - எச்செயலையும்
எள்ளற்க - செயலின் தன்மையையும் தெரியாமல் இகழலும் செய்யாதீர்
முற்றும் இடங்- அச்செயலினைச் சந்திக்கும், முற்றுகின்ற
கண்டபின் அல்லது - அறிந்தபின்அல்லாமல்

இக்குறளில் இரண்டு கருத்துக்கள் கூறப்படுகின்றன. முதலாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பு, அச்செயலை எவ்விடத்தில் எப்படி முடிவுறும் என்று அறிந்துகொள்ளாமல் செல்வது; இரண்டாவது அச்செயலின் தன்மையறியாது, அதை துச்சமாக எண்ணி எள்ளுதல்.

உலகின் மிகப்பெரிய வலிமைமிக்க அரசர்கள் நிகழ்த்திய போர்களெல்லாம் எதிரிகளின் வலிமையையும், போர் நிகழும் களம், மற்றும் முடிவுறும் இலக்கும் இவை அறியாமல் மேற்கொண்டதால் படுதோல்வியைச் சந்தித்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று:

வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை
எள்ளி உணர்தல் இயல்பன்று - தெள்ளியார்
ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார்
நீறுமேல் பூத்த நெருப்பு.

கடல் போல் பெரிய படையை உடையேம் என்று எண்ணிப் பகைவரை இகழ்தல் நல்ல இயல்பன்று. அறிவு மிக்கோர் நீறுபூத்த நெருப்பை அது ஆறிவிட்டது என உறுதிசெய்த பின்பே கையில் எடுப்பர். தம் வலிமையொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து. இடம்பற்றிய கருத்து இதுவல்லவென்றாலும், எள்ளுதலை தவறென்று உணர்த்தும் பாடலிது.

இன்றெனது குறள்:

எச்செயலும் எள்ளலும் ஏற்றவிடம் எண்ணாமல்
அச்செயலில் செல்லலும்நன் றன்று

echcheyalum eLLAlum ERRaviDam eNNAmal
achcheyalil chellalumnan RanRu

ஆகஸ்ட் 28, 2013

குறளின் குரல் - 497


 28th Aug 2013

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
                          (குறள் 490: காலமறிதல் அதிகாரம்)

Transliteration:
Kokkokka kUmbum paruvaththu maRRadhan
Kuththokka seerththa idaththu

Kokkokka – one must patiently wait like a heron
kUmbum paruvaththu  - when they have to be restrained
maRRadhan – other than that,
Kuththokka – like how it strikes like its prey in lightening speed
seerththa idaththu – must finsh the undertaken deed when the time comes.

Auvayyar in her mUdhurai says, “A heron will wait letting all the fishes runaway until the right fish comes along as its prey”. In this last verse, vaLLuvar says, like a heron waits for the right fish to pass by to strike and pick up, one must wait till the right time and be swift in action to do the deed when the time has arrived.

The two important thoughts conveyed through this verse are: Patience till the time arrives; Whenthe time arrives getting into swift action.

“Patience for prey, when restraint is needed
 Strike in time for the action must be heeded”

தமிழிலே:
கொக்கொக்க (கொக்கு ஒக்க) - கொக்கைப் போல பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்
கூம்பும் பருவத்து - ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில்
மற்றதன் - மற்றபடி அது தன்னுடைய
குத்தொக்க (குத்து ஒக்க) – (இரையை) மின்னல் வேகத்தில் குத்தி எடுத்துக்கொள்ளுமோ
சீர்த்த இடத்து - அவ்வாறு தகுந்த காலம் வாய்க்கும் போது (செயலாற்றி விடவேண்டும்)

“மடைத் தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு” என்பது ஔவையாரின் மூதுரை, எல்லோரும் அறிந்ததே. இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளிது. கொக்கு அல்லது நாரை போன்ற பெரும் பறவைகள் ஆற்றின் கரையிலோ, அல்லது நீரிலோ பொறுமையுடன் காத்திருக்கும். நீரில் இருக்கும் மீன்களெல்லாம் காத்திருக்கும் ஆபத்து தெரியாமல் நீந்திக்கொண்டிருக்கும். அதன் இரைக்குத் தேவையான மீன் தன்னருகில் நீந்தும் வரை காத்திருக்கும் அக்கொக்கு வந்தவுடன் ஒரே கொத்தாகக் குத்தி அதைக் கவ்வி உட்கொண்டுவிடும்.

இதில் இரண்டு கருத்துக்களைச் சொல்லுகிறார் வள்ளுவர்.  காலம் கனியும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கனிந்தவுடன் விரைந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டு செயலாற்ற வேண்டும். கொக்கின் குத்து ஒக்க என்று சொன்னதன் மூலம் உலகின் முதல் குத்துப்பாடலுக்குச் சொந்தக்காரராகிறார் வள்ளுவர். குத்து என்பது குத்தி எடுத்தலைக் குறிக்கும்.  பரிமேலழகர் இருப்பிற்கும் செயலுக்கும் இலக்கணம் கூறுவதாகக் இக்குறள் உள்ளது என்கிறார்.

பெருங்கதைப் பாடல் ஒன்றும் இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. தெளிவுரை இல்லாமலே விளங்கும் கருத்து.

ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும்
               
கொடுங்கால் கொக்கின் கோள்இன மாகிச்
               
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
               
வலிகெழு வேந்தனை வணக்குதும்

இன்றெனது குறள்(கள்):

காத்தொடுங்கும் கொக்கைப்போல் காலத்தே காரியத்தைச்
சாத்தியமாய் மாற்றுதல் நன்று.

kAththoDungum kokkaippOl kAlaththE kAriyaththaich
chAthiyamAi mARRudhal nanRu


இரைக்காய் இருந்தொடுங்கும் கொக்கிரை காணின்
விரைந்துசெயல் போல்வினை ஆற்று

iraikkAi irundhoDungum kokkirai kaNin
viraindhuseyal pOlvinai ARRu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...