ஜூலை 08, 2013

குறளின் குரல் - 446



8th July 2013

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
                            (குறள் 439: குற்றம் கடிதல் அதிகாரம்)
Transliteration:
viyavaRka enjAnRum thannai nayavaRka
nanRi payavA vinai

viyavaRka – Don’t be conceited and have arrogance
enjAnRum - ever
thannai – about self (being self-important)
nayavaRka – never wish to do
nanRi payavA – goodness never yielding
vinai - deeds

This verse suggests to avoid two different faults. They are in fact related faults. One must never be conceited and develop arrogance because of that, which is a fault. Similarly, one must should not even wish to do deeds which never yield any good.! In fact the verse could be interpreted to suggest avoid being self-important as that would be never yield any good – one fault leading to another, both must be shunned.

“Never have the fault of self-importace, be arrogant
Don’t wish deeds that yield no good and pleasant.

தமிழிலே:
வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க
எஞ்ஞான்றும் - எப்போதுமே
தன்னை - தன்னயே
நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்
நன்றி பயவா - நன்மை தராத (குற்றங்களாகக் கருதப்படுபவை)
வினை - செயலை

இக்குறள் இரண்டுவித குற்றங்களை தவிர்க்கச் சொல்லுகிறது. தன்னுடைய செயல்களில் தானே பெருமிதம் கொண்டு வியந்து  போகுதல், மற்றும் , நன்மை தராத குற்றச் செயல்கள். இதையே தற்பெருமை கொள்ளுதலையே நன்மைதராத குற்றமாகச் சொல்லி, அதனைத் தவிர்க்கச் சொல்லுவதாகவும் கொள்ளலாம்.

இன்றெனது குறள்:
தற்பெருமை கொண்டு தருக்காதீர் எண்ணாதீர்
நற்பெருமை தாராச் செயல்

thaRperumai konDu tharukkAdhIr – ENNAdhIr
naRperumai thArAch cehyal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...