ஜூலை 05, 2013

குறளின் குரல் - 443


[This verse was one of the select few verses for my initial commentary work, written on 10th Apri, 2012. Today, I have added Tamil commentary for the same]

5th July 2013

தன்குற்றம் நீக்கிப் பிறர்க்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
                            (குறள் 436: குற்றம் கடிதல் அதிகாரம்)

Transliteration:
than kutRam –  faults of his/her own faults (the person power)
nIkki – get rid of
piRar kutRam – faults or errors, crimes committed by his own subjects and others
kAnkiRpin –   if is able to judge/find knowing that the self is devoid of the (most definitely same ) faults/mistakes/errors/crimes
en kutRamAgum – what can go wrong for ?
iRaikku – for the head person (the person of power)

There is a story of Bhagavan Ramakrishna, which I have heard, growing up. Once the concerned parents of a boy, took him to Ramakrishna and asked him if he could advice their son to eat all vegetables as this boy had some strong preferences and  would not touch some of the vegetables.

Bhagavan smiled, and asked them to come a week later, which the couple did dutifully… This time also after the Darshan was over, Bhagavan asked them to come back couple of weeks later. This continued for a while. Couple, almost resigned to thinking, that such a trivial matter was nothing for Swamiji and almost forgot about what they asked, but they continued to visit him as he would ask him to comeback later.

During one of their visits, couple of months later, Bhagavan called the boy and asked him not to hate any vegetable and after all everything was God’s creation and He meant them for us, human beings etc,. Curios parents approached Bhagavan and asked him how come he suddenly remembered their request couple of months ago and advised the boy only now – to which Bhagavan replied, “ How could I advice a boy when this renounced body of mine had its own strong preferences and in fact did not eat some of the same vegetables, myself. It took a couple of months for me to change myself in the first place and now, I feel, my advising the boy means something”. This story effectively puts forth that people that are in power have to be devoid of faults in the first place before they are in a place of judging others. The verse for today’s thought is what we see above.

Since the kuraL comes under “ kutram kadidhal adikAram” (குற்றம் கடிதல்) of “Arasu Iyal” (அரசியல்), in “porut pAl” (பொருட்பால்), the word “iRai” (இறை) means the head of ruling as in a “King” or the person that renders justice to people. If the “Ruler” learns to know his own faults first and gets rid of them, when he is in a position to judge other’s faults, he will not err in his judgment.  Once again, this verse is also applicable in general context for anybody, but more so for people of power that are likely to be blinded by the same as power corrupts

“Personal cleansing to be devoid of evils of fault
 Can bring no mistakes in the judgment of thought”

தமிழிலே:
தமிழிலே:
தன்குற்றம் - தன்னிடம் இருக்கும் குற்றங்களை
நீக்கிப் - போக்கிவிட்டு
பிறர்க்குற்றம் - பிறர் செய்யும் குற்றங்களுக்கு (தன்னுடைய குடிகள்)
காண்கிற்பின் - நீதி வழங்க முற்பட்டால், திருத்த முற்பட்டால்
என்குற்றம் ஆகும் - என்ன தவறு நிகழ முடியும்
இறைக்கு - ஆள்பவர்க்கு,

வளரும் நாட்களில் அறிந்த இராமகிருஷ்ணரின் கதை இது.  தம்முடைய செல்வன் சில காய்கறி வகைகளை சாப்பிடாமல் ஒதுக்குவதைக் கண்ட கவலையுற்ற ஒரு பெற்றோர், இராமகிருஷ்ணரை காணவந்தபோது, அவரை தம்முடைய செல்வனுக்கு அறிவுறுத்துமாறு வேண்டினார்கள்.  புன்னகைத்த இராமகிருஷ்ணரும் ஒன்றும் சொல்லாமல், அவர்களுக்கு ஆசி வழங்கி அனுப்பிவிட்டு, ஒரு இரண்டு வாரம் கழித்து மீண்டும் வருமாறு சொன்னார். அடுத்த சிலமாதங்களுக்கு அப்பெற்றோர் மீண்டும் மீண்டும் பகவானைக் காண வந்துகொண்டிருந்தனர். பகவானோ, அந்த சிறுவனுக்கு அறிவுறுத்தவே இல்லை.  அந்த பெற்றோரும் ஒருவேளை பகவானிடம் இந்தமாதிரியெல்லாம் கேட்டிருக்கக்கூடாதோ என நினைத்து, தாங்கள் கேட்டதையே கூட மறந்துவிட்டனர். 

இந்த முறை, பகவான் அந்த சிறுவனை அழைத்து, குழந்தாய், இறைவனின் படைப்பில் இந்த காய்கறிகளெல்லாம் நமக்கு நல்ல உணவுகளே, இவற்றையெல்லாம் பிடிக்காது என்று கூறாது சாப்பிடு என்றார். பெற்றோர்களுக்குப் பெருவியப்பு. அவர்கள் இராமகிருஷ்ணரிடம் இதற்கான காரணத்தைக் கேட்கவும் அவர் சொன்னது இது: “துறவறத்திலிருக்கும் எனக்கே நீங்கள் குறிப்பிட்ட சில காய்கறிவகைகள பிடிக்காமல் இருந்தது. இப்போது நான் முதலில் அவற்றை விருப்பு வெறுப்பில்லாமல் சாப்பிட பழகிவிட்டேன். அதனால் உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்தக் கூடிய ஒரு பக்குவம் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது”

இது கதையோ, நடந்த நிகழ்வோ, அல்லது கற்பனையோ, எதுவாயிருந்தாலும், அறிவுறுத்தும் நிலையில் இருப்பவர்கள், வைக்கப்படுபவர்கள், தங்களிடம் குற்றமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருந்தால் களைந்துகொள்ளவேண்டும், என்பதை அழகாகக்  சொல்கிறது.

பொதுவாக ஆள்வோர்க்குச் சொல்லப்பட்டதாக கொள்ளலாம் எனினும், இக்கருத்தும் பொதுக்கருத்தே, எல்லோருக்கும் ஏற்புடையதே!

பழமொழிப்பாடலொன்று, இதே கருத்தை இவ்வாறு கூறுகிறது, “ தங்குற்றம் நீக்கலராகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற் கிடைக்கப்புகுதல்

இன்றெனது குறள்:

குடியதனின் குற்றம்காண் கோன்குற்றம் அற்றால்
கெடுவதிலை யாம்கொற்றம் காண்

kuDiyadhanin kuRRamkAN kOnkuRRam aRRAl
keDuvadhilai yAmkoRRam kAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...