3rd July 2013
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
(குறள் 434: குற்றம் கடிதல் அதிகாரம்)
Transliteration:
kutRamE kAkka poruLAga kuRRamE
aRRam tharUum pagai
kutRamE - Faults
kAkka – be without them, devoid of
them
poruLAga – as the most
valuable
kuRRamE – Because faults
aRRam tharUum – bring fatal
pagai – enemity
Though this verse is applicable
to everyone, this has been more stressed for the rulers. Rulers must save themselves
from faults and that should be their prime intention and duty. Faults bring
destruction and are akin to fatatistic enemies to rulers. The Tamil phrase
seems to imply that faults must preserve as a valauable object; infact it is
just the opposite, it means. One must save themselves from faults. Once again
the story of Pandian King Nedunchezhiyan who committed one fault of not
properly inquiring into the theft of anket and the destruction it brought to
himself and his subjects must be remembered here
“A ruler must guard against faults as the virtue most
valuable
As faults are the
most destructive enemies to even infallible “
தமிழிலே:
குற்றமே - எவ்வித தவறும் வராமல்
காக்க - ஒருவர் தம்மை காத்துக்கொள்ள வேண்டும்
பொருளாகக் - மிகவும் மதிப்பு மிக்கப் பொருளைக் காப்பது போல
குற்றமே - ஏனெனில் செய்கின்ற தவறுகளே
அற்றம் தரூஉம் - அழிவைத் தரக்கூடிய
பகை - பகைவர்களைப் போன்றவையாம்
இக்குறளும் எல்லோருக்குமே பொருந்துவதாக
இருப்பினும் ஆளுவோருக்காக அழுத்தமாகச் சொல்லப்பட்டது. ஆளுவோர் தங்களை எந்த குற்றமும்
சாராமல் பாதுக்காத்துக்கொள்ளவேண்டும். அதுவே அவர்களின் நோக்கமாக இருக்கவேண்டும். ஏனெனில்
செய்யும் தவறுகளே அவரக்கு அழிவைத் தரக்கூடிய பகைவரைப் போன்றவையாம். குற்றமே காக்க பொருளாக
என்றது குற்றத்தை பயன்மிக்க பொருளாகக் காக்கவேண்டும் என்பதில்லை. குற்றமே காக்க என்றது, குற்றங்களே வராமல் காத்துக்கொள்வது
என்றே ஆகும். பாண்டியன் நெடுஞ்செழியன் ஆராயாமல்
செய்த தவற்றினால், சிலம்பைத் திருடிய உண்மைக் கள்வனை அறியாமல், தானும் அழிந்து தன்குடிமக்களும்
அழிபடுவதற்கு காரணமான கதை எல்லோரும் அறிந்ததுதானே!
இன்றெனது குறள்:
அழிவைத் தரும்பகையாம் குற்றம் அதனால்
பழிவரா காப்ப தரசு
azhivaith tharumpagaiyAm kutRam adhanAl
pazhivarA kAppa dharasu
அழிவே தரும்குற்றம் அப்பகை நீக்கி
இழிவரா தாள்வ தரசு
azhivE tharumkutRam appagai nIkki
izhivarA dhAlva dharasu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam